என் மலர்
நீங்கள் தேடியது "Electricity worker died"
- புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.
- திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பாளைய ங்கோட்டையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது61). இவர் மின்வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தனது மோட்டார் சைக்கிளில் பாளையங்கோட்டையில் இருந்து செம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தார். புல்வெட்டிக்குளம் பகுதியில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாரா யணயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






