என் மலர்
நீங்கள் தேடியது "fishing in Nilakottai Konkarkulam"
- நீர்வரத்து அதிகரித்ததால் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.
- சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக மீன் பிடித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான குளம், கண்மாய்கள் நிரம்பிவிட்டன. நீர்வரத்து அதிகரித்ததால் நிலக்கோட்டை கொங்கர்குளம் கண்மாய் நிரம்பி வழிகிறது.
இந்த கண்மாயில் ஏற்கனவே மீன்கள் அதிக அளவு இருந்தது. தற்போது மேலும் மீன்கள் வந்துள்ளன. இதனால் நிலக்கோட்டை, காமாட்சிபுரம், புதுப்பட்டி, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தூண்டில் மூலமாக மீனைப் பிடித்து செல்கின்றனர்.
பலவகையான மற்றும் அதிக எடைகொண்ட மீன்கள் சிக்குவதால் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் உள்பட அனைவரும் உற்சாகமாக மீன் பிடித்து வருகின்றனர்.






