என் மலர்
உள்ளூர் செய்திகள்

முத்தனம்பட்டி புதூர் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
- முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது.
- இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே , முத்தனம்பட்டி புதூர் இந்து உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விசாகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 1.1.2023-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி 9-ந்தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 1.1.2023-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால், தற்போது புதியதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரம் சேர்ப்பதற்கு படிவம் 6பி-ம்,
பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் செய்ய விரும்புவோர் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகல் கேட்டு விரும்புபவர்கள் படிவம் 8-ம் பூர்த்தி செய்து 8.12.2022 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் அல்லது அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கலாம்.
அதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு முகாம் இன்று,26 மற்றும் 27-ந்ஆதேதி ஆகிய நாட்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளன. வாக்காளர்கள் விண்ணப்பத்தினை தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் வழங்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.






