என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பிரதமர் காரில் பயணித்த அண்ணாமலை- தொண்டர்கள் உற்சாகம்
    X

    பிரதமர் காரில் பயணித்த அண்ணாமலை- தொண்டர்கள் உற்சாகம்

    • பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை பிரதமர் மோடி அழைத்தார்.
    • பிரதமர் மோடியுடன் காரில் இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பயணிக்காத நிலையில் அண்ணாமலை அவருடன் சென்றது கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவிற்கு பிரதமர் மோடி மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அம்பாத்துரை ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கிற்கு சென்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் பயணிக்க முயன்றபோது மோசமான வானிலை காரணமாக சின்னாளபட்டியில் இருந்து கார் மூலம் மதுரைக்கு செல்ல முயன்றார்.

    அப்போது பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு தொண்டர்களுடன் நின்ற பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலையை அழைத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் பிரதமர் மோடியின் அருகில் வந்தார். பின்னர் அவரை தனது காரில் அருகில் அமர வைத்து மதுரை வரை அழைத்துச்சென்றார்.

    அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து அண்ணாமலையிடம் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். பிரதமர் மோடியுடன் காரில் இதுவரை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் பயணிக்காத நிலையில் அண்ணாமலை அவருடன் சென்றது கட்சியினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

    Next Story
    ×