என் மலர்
திண்டுக்கல்
- வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (27ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (27ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேடசந்தூர், லட்சுமணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, நாககோனனூர், ஸ்ரீராமபுரம், காளனூர், மரியபித்தா ம்பட்டி, தட்டாரபட்டி, சேனன்கோட்டை,
முருநெல்லி க்கோட்டை, சுள்ளெரும்பு, குருநாத நாயக்கனூர், நவாமரத்து ப்பட்டி மற்றும் இந்த கிராமங்களை சேர்ந்த குக்கிரா மங்களுக்கும், தொழிற்சா லைகளுக்கும் மின் வினி யோகம் இருக்காது என்று உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்து ள்ளார்.
- ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது.
- பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி:
பழனி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் அவ்வப்போது சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து சுற்றிக்காட்டி வருகின்றனர்.
பழனி மலைக்கோவிலை சுற்றி ஹெலிகாப்டர் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனிடையே கடந்த 2 நாட்களாக காலை நேரத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தாழ்வாக பறந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். நேற்று அதிக ஓசையுடன் ஹெலிகாப்டர் பழனி மலைக்கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே தாழ்வாக பறந்து சென்றது. இதை பார்த்த பொதுமக்கள் ஹெலிகாப்டரை தங்கள் செல்போன் மூலம் படம் பிடித்தனர். பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளை வட்டமிட்டபடி இன்று 2-ம் நாளாக ராணுவ ஹெலிகாப்டர் பறந்து சென்றது.
இதனால் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவத்தன்று மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார்.
- வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரகாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவரி மனைவி சுதா. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அதன் அருேக பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருகிறார். இந்த வீடு கட்டிட பணிகளுக்காக மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெயராமன் (25) என்பவரை அழைத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று சுதாவின் மளிகை கடையில் புகுந்து ரூ.32 ஆயிரத்தை ஜெயராமன் திருடிச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கொடைக்கானல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திக் பணம் திருடிய ஜெயராமனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
- மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல்:
தென்னக ரெயில்வே சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகஸ்ட் 1-ந்தேதி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து சென்னை எழும்பூருக்கு காலை 7.10 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரெயில் இரு மார்க்கவும், வருகிற 30, 31-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சியில் இருந்து தஞ்சாவூர், மயிலாடுதுறை, திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பல்வேறு ரெயில்கள் இன்று முதல் வருகிற 1-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாகர்கோவில்-மும்பை விரைவு ரெயில் ஆகஸ்ட் 30-ந்தேதி திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி காட்ரா-திருநெல்வேலி விரைவு ரெயில் நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரெயில் வருகிற 30-ந்தேதி பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், ஆகஸ்ட் 1-ந்தேதி விருத்தாச்சலம், சேலம், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
- இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.
கொடைக்கானல்:
உலக இயற்கை பாதுகாப்பு நாளையொட்டி இயற்கை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் கொடைக்கானல் ரோட்டரி சங்கம் சார்பில் ஏரிச்சாலையில் நடைபெற்றது.
பேரணியை பல்கலைக்கழக திவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு ஆணையர் கிளாரா தேன்மொழி, ரோட்டரி சங்க தலைவர் மதன்குமார், செயலாளர் அக்பர் ஷேட், முதன்மை விருந்தினர் டி.எஸ்.பி. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இயற்கை பாதுகாப்புக்கான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு ஏரிச்சாலையில் உற்சாகமாக வலம் வந்தனர்.
- திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தக்காளி பயிரிட்டு நல்ல லாபம் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையாமல் ரூ.100 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உழவர் சந்தை, மொத்த மார்க்கெட்டுகளில் விலை குறையாததால் சில்லரை விற்பனையிலும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ள ப்பட்டனர்.
வரத்து குறைவு மற்றும் வெளி மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இடைய கோட்டை, கள்ளிமந்தையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் கடந்த சித்திரை மாதம் தக்காளி நடவு செய்தனர். அதை 70 நாளில் அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு விற்பனை செய்தபோது அதிக வரத்தால் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கியதால் போக்குவரத்து செலவிற்கு கூட கட்டுபடியாகாததால் விவசாயிகள் தக்காளியை பறித்து சாலை ஓரங்களில் கொட்டிய காலம் ஏற்பட்டது.
சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, வெயில் உள்ளிட்ட பருவ நிலை மாறுபாட்டால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் பலரும் தக்காளியை பயிரிட விரும்பவில்லை. இதனால் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதன்பிறகு தக்காளி பயிரை அழித்து மாற்று விவசாயத்திற்கு விவசாயி கள் சென்று விட்டனர். வரத்து குறைந்ததால் தக்காளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நகரத்திற்கு ஏற்ற வகையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோவில் 10 முதல் 15 தக்காளிகள் வரை இருக்கும். இன்றைய விலையை கணக்கு பார்த்தால் ஒரு தக்காளி ரூ.13 என்ற விலையில் உள்ளது.
கடந்த 70 நாட்களுக்கு முன்பு நடவு செய்து தற்போது பறித்து விற்ப னைக்கு அனுப்பி வரும் கள்ளிமந்தையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது.
இது குறித்து விவசாயி செல்வராஜ் கூறுகையில், பக்கத்து தோட்டத்தில் தக்காளி பயிரிட்டதால் அதை பார்த்து மற்ற அனைத்து விவசாயிகளும் தக்காளியையே பயிரிடுவ தால் வரத்து அதிகரிக்கு ம்போது விலை கிடைப்ப தில்லை.
இதனையடுத்து விவசாயி கள் மற்ற விவசாயத்திற்கு மாறிய நேரத்தில் நான் 2 ஏக்கர் அளவில் தக்காளி நடவு செய்து கவனத்தோடு முறையாக பராமரித்து வந்ததால் தற்போது 3 நாளைக்கு ஒரு முறை 14 கிலோ கொண்ட பெட்டியில் 30 பெட்டிகள் வரை தக்காளி கிடைக்கிறது.
வரத்து குறைந்த நேரத்தில் தக்காளியை பறித்து ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு சென்றால் 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.900 முதல் ரூ.1300 வரை வியா பாரிகள் வாங்குகி றார்கள்.
வியாபாரிகளிடம் இருந்து சில்லரை வியாபாரி கள் வாங்கி அதை ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனை செய்கின்றனர். இதனால் இந்த முறை தக்காளி சாகுபடி எங்களுக்கு நல்ல பலனை கொடுத்துள்ளது என்றார்.
- ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்துக்குள் கார் பாய்ந்தது.
- பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திருப்பூர் பெருமாகவுண்டன் பாளையத்தை சேர்த்தவர் கருப்பராஜ் (வயது 23). இவர் தனது காரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கொடைக்காளலுக்கு வந்தார். பின்னர் அவர்களை அங்கு இறக்கி விட்டு, மீண்டும் தனது ஊர் நோக்கி காரில் திரும்பி கொண் டிருந்தார்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. பண்ணைக்காடு அருகே நண்டாங்கரை என்னுமிடத்தில் உள்ள வளைவில் கார் திரும்பியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்துக்குள் கார் பாய்ந்தது. இதில் கருப்பராஜ் காயமின்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு தாரை தம்பட்டம் முழங்க வான வேடிக்கையுடன் 3 புனிதர்களின் தேர்பவனியும் நடந்தது.
- திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேர் திரும்புதல், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வங்கமனூத்து புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 17ந் தேதி சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தினமும் நவநாள் திருப்பலி நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23-ந் தேதி புனித சந்தியாகப்பரின் உருவம் பொறித்த கொடியுடன் பவனி வந்து கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு கபாலமாலை சப்பரபவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை புதுநன்மை திருப்பலியும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு தாரை தம்பட்டம் முழங்க வான வேடிக்கையுடன் 3 புனிதர்களின் தேர்பவனியும் நடந்தது.
திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேர் திரும்புதல், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை நற்கருணை ஆசீர் வழங்கினார். இந்த விழாவில் அம்பிகா பில்டிங் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் முருகன், சிலுவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை வழிபட்டு சென்றனர்.
விழா ஏற்பாடுகளை வங்கமனூத்து திருத்தல பங்குத்தந்தை தாமஸ் ஜான்பீட்டர்,மாரிஸ்ட் அருட்சகோதரர்கள், ஊர்பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- அணைப்பகுதியில் குளிக்க கூடாது என திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
- ஆபத்து குறித்து எடுத்துரைத்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாமல். அணையின் கூம்பு வடிவ இடத்தில் புகைப்படம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. இந்த அணை ஆத்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ளது. அணைக்கு செல்லும்பாதை கரடுமுரடாக உள்ளது. அணைப்பகுதியில் குளிக்க கூடாது என திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்கின்றனர்.
இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து செயற்பொறியாளர் உமாசங்கரிடம் கேட்டபோது ஊழியர்கள் ஆபத்து குறித்து எடுத்துரைத்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்ைல. அணையின் மேல் பகுதியில் உள்ள கூம்பு வடிவ இடத்தில் புகைப்படம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை.
இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்றார். இந்த அணையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சடையாண்டி சாமிக்கு பூைஜ செய்து வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே போதுமான போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையின் மொத்த கொள்ளளவு 24.3 அடியாகும். தற்போது 16.5 அடி நீர்மட்டம் உள்ளது. மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
- அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் 2 மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
- அப்போது எதிர்பாராத விதமாக அறுந்துகிடந்த மின் கம்பியை மாடுகள் மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பசுமாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது.
நத்தம்:
நத்தம் அருகே அய்யாபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது50). விவசாயியான இவர் 2 பசு மாடுகளை வளர்த்து வந்தார். அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் 2 மாடுகளையும் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அறுந்துகிடந்த மின் கம்பியை மாடுகள் மிதித்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 2 பசுமாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து நத்தம் வி.ஏ.ஓ. சுப்புலட்சுமி மற்றும் கால்நடை உதவி டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு
அவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். உயிரிழந்த 2 மாடுகளின் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும்.
- நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் பொது தரிசனம், ரூ.10 மற்றும் ரூ.100 கட்டண தரிசனத்தில் சென்று சாமியை வழிபடுகின்றனர். ரூ.100 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் தங்களுக்கான தரிசன நேரம் வரும் வரை காத்திருக்கும் அறையில் அமர்ந்து தரிசனத்திற்கு செல்கின்றனர். காத்திருக்கும் அறையில் இருக்கைகள், எல்.இ.டி. டிவி, மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.10 கட்டண தரிசனத்தில் செல்லும் வழியிலும் பக்தர்களுக்கு காத்திருப்பு அறையில் 1,000 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால், பொதுதரிசனத்தில் செல்லும் பக்தர்கள் நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தநிலையில் பொதுதரிசன பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் இருக்கை வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நாயக்கர் மண்டபத்தில் 210 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுதரிசன வரிசையில் வரும் பக்தர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை இனி இல்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
- அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் மயங்கி விழுந்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பொன்மாந்துரைபுதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






