என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தை உணராமல் ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்
    X

    ஆத்தூர் காமராஜர் அணை.

    ஆபத்தை உணராமல் ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

    • அணைப்பகுதியில் குளிக்க கூடாது என திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
    • ஆபத்து குறித்து எடுத்துரைத்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாமல். அணையின் கூம்பு வடிவ இடத்தில் புகைப்படம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆர்வம் காட்டுகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. இந்த அணை ஆத்தூர் ஒன்றியம் அக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ளது. அணைக்கு செல்லும்பாதை கரடுமுரடாக உள்ளது. அணைப்பகுதியில் குளிக்க கூடாது என திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை கண்டுகொள்ளாமல் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்கின்றனர்.

    இதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து செயற்பொறியாளர் உமாசங்கரிடம் கேட்டபோது ஊழியர்கள் ஆபத்து குறித்து எடுத்துரைத்தாலும் சுற்றுலா பயணிகள் கண்டுகொள்வதில்ைல. அணையின் மேல் பகுதியில் உள்ள கூம்பு வடிவ இடத்தில் புகைப்படம் எடுத்து அதில் சில மாற்றங்கள் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதில் உள்ள ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை.

    இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்றார். இந்த அணையை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சடையாண்டி சாமிக்கு பூைஜ செய்து வழிபாடு நடத்த ஏராளமான பக்தர்கள் வருவார்கள். எனவே போதுமான போலீசார் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணையின் மொத்த கொள்ளளவு 24.3 அடியாகும். தற்போது 16.5 அடி நீர்மட்டம் உள்ளது. மழை கைகொடுக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×