திண்டுக்கல் அருகே விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பாதிப்பு

இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் மயங்கி விழுந்தனர்.
விஷவாயு தாக்கியவர்கள்.
விஷவாயு தாக்கியவர்கள்.
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் பொன்மாந்துரைபுதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்றுகாலை தொழிற்சாலையில் இருந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சல்பைடு என்னும் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹசன்(34), சுமன்(35), ராஜபாளையத்தை சேர்ந்த ரங்கநாதன்(35) ஆகியோர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com