என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • சேவல், புறா போன்றவை தினந்தோறும் மாலையில் மலைக் கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டு வந்தது.
    • இந்து அமைப்பினர் கோவில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை மட்டுமல்லாது சேவல், புறா, ஆடு, பசு உள்ளிட்டவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். இதில் சேவல், புறா போன்றவை தினந்தோறும் மாலையில் மலைக்கோவிலில் வைத்து ஏலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில் மலைக்கோவிலில் வைத்து ஏலம் நடப்பதால் பெரும்பாலான பக்தர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. எனவே இந்த ஏலத்தை அடிவாரத்தில் வைத்து நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

    அந்த கோரிக்கையை ஏற்று பழனி கோவில் நிர்வாகம் சார்பில், காணிக்கையாக செலுத்தும் சேவல்களை அடிவாரம் கோசாலை பகுதியில் வைத்து ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் முதல் அடிவார பகுதியில் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையில் அடிவாரத்தில் ஏலம் நடைபெற்றது.

    இந்நிலையில் இந்து அமைப்பை சேர்ந்த சிலர் ஏலம் நடந்த பகுதிக்கு வந்தனர். அடிவாரத்தில் ஏலம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மலைக்கோவிலில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கிடையே இந்து அமைப்பின் நிர்வாகிகளை உதவி ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி இந்து அமைப்பினர் கோவில் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். நேற்று நடந்த பிரச்சினையால் எந்த சேவல், புறாவும் ஏலம் விடப்படவில்லை.

    • நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.
    • பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் மற்றும்.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் குறிப்பிட்ட சில சாலைகள் ஒருவழிப்பாதையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. விபத்துகளை தடுக்க பகல் நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை மதிக்காமல் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் அடிக்கடி எதிரே விதிமீறி வருவதால் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது.

    சாலைகளில் சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.ரோடு, சத்திரம் தெரு, அரசு ஆஸ்பத்திரி எதிரே, ஜி.டி.என். சாலை உள்ளிட்ட சாலைகள் இதுபோல போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் நோ என்ட்ரி போடப்பட்டுள்ள போதிலும் அதனை கண்டுகொள்ளாமல் மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் ஆகியவை விதிமீறி செல்கின்றன.

    இதுபோன்ற சாலைகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி விதிமீறும் வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் விதிமீறி வாகனங்கள் மின்னல் வேகத்தில் வருவதால் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கிவிடுகின்றனர். இந்த சாலைகள் மட்டுமின்றி பஸ் நிலையத்தில் எம்.ஜி.ஆர். சிலை எதிரே இருவழிப்பாதைக்காக பேரிக்கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலையில் விதியை மீறி காலையில் ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன.

    பல மாதங்களாக இதுபோன்ற விதிமீறல்கள் நடந்தாலும் போக்குவரத்து போலீசார் இதனை கண்டு கொள்வதில்லை.பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஆட்டோக்களில் ஏற்றிச் செல்லும் வாகனங்களும் இதுபோன்ற விதிமீறலை சர்வ சாதாரணமாக கடைபிடிக்கின்றனர். இதனால் வாகன ஓட்டுனர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் கை கலப்பு நடக்கிறது.

    பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு இதுபோன்ற விதிமீறலை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் செல்போன் பேசியபடியே வாகன விபத்துகளை ஏற்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.
    • எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமதுரை:

    வடமதுரை, அய்யலூர், பாடியூர், பாகாநத்தம், தென்னம்பட்டி, காண ப்பாடி, புத்தூர், எரியோடு, குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இப்பகுதியில் பெரும்பாலும் விவசாயி களே அதிகம் உள்ளதால் கால்நடை வளர்ப்பு அதிகள வில் நடைபெற்று வருகிறது.

    இந்த கால்நடைகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் பார்க்க கால்நடை ஆஸ்பத்திரிக்கு செல்கின்றனர். ஆனால் காலை நேரங்களில் டாக்ட ர்கள் சரியான நேரத்திற்கு வருவது இல்லை. மேலும் முறையாக பதில் அளிக்காத தால் விவசாயிகள் தவிப்பு க்குள்ளாகி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதனை தட்டிக்கேட்ட விவசாயியை கால்நடை டாக்டர் மற்றும் அவரது உதவியாளர் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைர லாகி வருகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கால்நடை ஆஸ்பத்திரி களுக்கு டாக்டர்கள் முறையாக வரவேண்டும். கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.
    • தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான தாண்டிக்குடி. மங்களம்கொம்பு, கானல்காடு, தடியன்குடிசை, ஆடலூர், பெரியூர் பகுதிகளில் கடந்த 1 மாதமாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனியாக பிரிந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி பொதுமக்களை மிரட்டி வருகின்றன.

    ஆடலூர், சோலைக்காடு, நேர்மலை பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் உள்ள காபி, வாழை மற்றும் சோலார் மின்வேலியை காட்டுயானைகள் சேதப்படுத்தியது.

    தாண்டிக்குடி, ஆடலூர், பெரியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் உலாவரும் காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு மாவட்ட வன அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.
    • முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    திண்டுக்கல் :

    திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி, திண்டுக்கல் மகப்பேறு மற்றும் மகளிர், இயல் நோய் சங்கம் இணை ந்து கோல்போஸ்கோபி கர்ப்பவாய் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பணிமனை திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

    கருத்தரங்கிற்கு திண்டு க்கல் மருத்து கல்லூரி முதல்வர் சுகந்தி இராஜ குமாரி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணி ப்பாளர் வீரமணி, துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, மகப்பேறு துறைத்தலைவர் கீதா, சிறப்பு அழைப்பாளர் டாக்டர் ரமணி ராஜேந்திரன், டாக்டர் அமலா தேவி, நிலைய மருத்துவர் புவனேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்குயேற்றி தொடங்கி வைத்தனர்.

    கருத்தரங்கில் பல்வேறு மகப்பேறு, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டு கர்ப்பவாய் புற்றுநோய் காரணங்கள், அதைத்தவிர்க்கும் வழிமுறைகள், வருமுன் காப்போம், நோய் கண்டறி தல் மற்றும் நோய்தீர்வு பற்றி சிறப்பாகக் கலந்துரையாடி னார். கருத்தரங்கு மற்றும் பணிமனையில் 100 டாக்டர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர்.

    முதல் முறையாக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 40 வயது பெண்மணிக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு வெர்திம்ஸ் ஹிஸ்டெரெக்டமி நுட்பம் மூலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரால் செய்யப்பட்டு அப்பெண் உடல் நலம் பெற்று வீடு திரும்பினார்.

    • அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
    • 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாறை:
    அய்யம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (28-ந்தேதி) மதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

    இதனால் அய்யம்பாளையம், கோம்பை, பட்டிவீரன்பட்டி, மருதாநதி அணை, தேவர ப்பன்பட்டி, சித்தரேவு, அய்ய ங்கோட்டை, சேவுக ம்பட்டி, சிங்காரக்கோட்டை, செங்கட்டாம்பட்டி, போடி காமன்வாடி, கதிர்நாயக்க ன்பட்டி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினி யோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை வத்தலகுண்டு மின்சார வாரிய செயற்பொ றியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் சைக்கிளையும், செல்போனையும் திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் காசம்பட்டியை சேர்ந்தவர் சின்ராசு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது ஊரில் நாடகம் பார்த்து விட்டு வீட்டில் தூங்கி கொண்டி ருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கபட்டிருந்த மோட்டார் சைக்கிளையும், அவரது செல்போனையும் 2 பேர் திருடிச் சென்று விட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக நத்தம் போலீசில் சின்ராசு புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து லிங்கவாடியை சேர்ந்த மாணிக்கம் (34), ரெட்டியபட்டியை சேர்ந்த பாவம் (33) ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் புலன் விசாரணை செய்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உதயசூரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இதில் குற்றவாளிகள் இருவருக்கும் தலா 1 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    • மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
    • இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    குள்ளனம்பட்டி:

    மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அப்துல்கனி ராஜா தலைமை தாங்கினார்.

    வட்டாரத் தலைவர் ராஜ்கபூர், ராமகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் சம்பவ குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கோஷமிட்டனர்.

    மேலும் உயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ராஜேந்திரன், சின்னசாமி, ஆனிமுத்து, ஜார்ஜ், சவேரியார், பிரபாவதி, பால்பாண்டி உள்பட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எவ்வித பராமரிப்பும் இன்றி ஈமக்காரியக்கூடம் அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றில் புதர் மண்டி காணப்படுகிறது.
    • இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம் காலனியில் மயானம் உள்ளது. இங்கு திண்டுக்கல் நகரில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, எரிப்பது போன்ற காரியங்களை செய்து வந்தனர். பின்னர் திண்டு க்கல் நகராட்சி சார்பில் புதிதாக மின்மயானம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இறந்தவர்களின் உடல்களை எரித்து வந்தனர்.

    இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமகிரிைய காரியத்துக்கு தனியார்க ளுக்கு சொந்தமான தோப்புகளுக்கு சென்று செய்து வந்தனர். மின்மயா னம் பின்புறம் மாநகராட்சி க்கு சொந்தமான இடத்தில் ஈமகிரிைய செய்ய தனியாக கூடம் கட்டுவது என கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் 3 கூடங்கள் (நந்தவனம்) மற்றும் ஈமகிரிையக்கு வரக்கூடிய நபர்கள் அமர்வதற்கு என தனியாக செட் அமைக்கப்ப ட்டது.

    இந்த கூடத்தை 2016ம் ஆண்டு முன்னாள் அமை ச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். கூடத்தை பயன்படுத்த ரூ.500 பொது மக்களிடம் இருந்து கட்டண மாக வசூல் செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு வருமானம் வந்தது. கட்டிடம் திறக்கப்பட்ட சமயத்தில் ஈமகிரிய கூடம் மரங்கள் நிறைந்த சோலை வனமாக காட்சியளித்தது. அங்கு மனதிற்கு அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் அங்கு வந்து ஈமக்கிரியை செய்து வந்த னர். ஆனால் தற்பொழுது அங்கு எவ்வித பராமரிப்பும் இன்றி 3 ஈமக்காரியக்கூடம் அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றில் புதர் மண்டி காணப்படுகிறது. பாம்பு போன்ற விஷச் சந்துகள் அதிக அளவில் உள்ளது. இதனால் அங்கு ஈமக்கிரியை காரியங்களை செய்ய பொதுமக்கள் தற்பொழுது வருவது கிடையாது. முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் அப்பகுதிக்கு செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்பட க்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே இப்பகுதியை மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
    • இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாள பகுதியில் அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் அந்தப் பகுதி முழுவதும் மணல் தூசியுடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    ஆகவே முன்னறிவிப்பு செய்து இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேட்டுப்பட்டி 12வது தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மனைவி சித்ரா (30). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று சித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிபோதையில் தகராறு செய்த மகனை ஆத்திரமடைந்த தந்தை கத்தியால் குத்தினார்.
    • வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் தெய்வ சிகாமணிபுரத்தைச் சேர்ந்த வர் வளன் பிராங்கிளின். கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரகாஷ் (வயது20). மது போதைக்கு அடிமை யானவர். பிரகாஷ் குடித்து விட்டு மது போதையில் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    அதன்படி நேற்று இரவு தந்தையுடன் போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த தந்தை வளன் பிராங்களின், கத்தியால் பிரகாசை குத்தினார்.

    இதில் தாடையில் விழுந்த கத்தி குத்துடன் ரத்த வெள்ளத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரகாஷ் அனுமதிக்க ப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×