என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே பணியால் உருவான புகைமண்டலம்.
திண்டுக்கல்லில் தண்டவாள பராமரிப்பு பணியால் வாகன ஓட்டிகள் அவதி
- அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
- இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாள பகுதியில் அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் மணல் தூசியுடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
ஆகவே முன்னறிவிப்பு செய்து இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






