என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதர்மண்டி காணப்படும் மின் மயானம்"

    • எவ்வித பராமரிப்பும் இன்றி ஈமக்காரியக்கூடம் அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றில் புதர் மண்டி காணப்படுகிறது.
    • இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.எம் காலனியில் மயானம் உள்ளது. இங்கு திண்டுக்கல் நகரில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, எரிப்பது போன்ற காரியங்களை செய்து வந்தனர். பின்னர் திண்டு க்கல் நகராட்சி சார்பில் புதிதாக மின்மயானம் அமைக்கப்பட்டது. இதனை அடுத்து இறந்தவர்களின் உடல்களை எரித்து வந்தனர்.

    இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய ஈமகிரிைய காரியத்துக்கு தனியார்க ளுக்கு சொந்தமான தோப்புகளுக்கு சென்று செய்து வந்தனர். மின்மயா னம் பின்புறம் மாநகராட்சி க்கு சொந்தமான இடத்தில் ஈமகிரிைய செய்ய தனியாக கூடம் கட்டுவது என கடந்த 2016 ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் 3 கூடங்கள் (நந்தவனம்) மற்றும் ஈமகிரிையக்கு வரக்கூடிய நபர்கள் அமர்வதற்கு என தனியாக செட் அமைக்கப்ப ட்டது.

    இந்த கூடத்தை 2016ம் ஆண்டு முன்னாள் அமை ச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார். கூடத்தை பயன்படுத்த ரூ.500 பொது மக்களிடம் இருந்து கட்டண மாக வசூல் செய்யப்பட்டது. இதனால் மாநகராட்சிக்கு வருமானம் வந்தது. கட்டிடம் திறக்கப்பட்ட சமயத்தில் ஈமகிரிய கூடம் மரங்கள் நிறைந்த சோலை வனமாக காட்சியளித்தது. அங்கு மனதிற்கு அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் அங்கு வந்து ஈமக்கிரியை செய்து வந்த னர். ஆனால் தற்பொழுது அங்கு எவ்வித பராமரிப்பும் இன்றி 3 ஈமக்காரியக்கூடம் அதற்கு செல்லக்கூடிய பாதை ஆகியவற்றில் புதர் மண்டி காணப்படுகிறது. பாம்பு போன்ற விஷச் சந்துகள் அதிக அளவில் உள்ளது. இதனால் அங்கு ஈமக்கிரியை காரியங்களை செய்ய பொதுமக்கள் தற்பொழுது வருவது கிடையாது. முறையாக பராமரிப்பு செய்யாத காரணத்தினால் அப்பகுதிக்கு செல்வதற்கே பொதுமக்கள் அச்சப்பட க்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே இப்பகுதியை மீண்டும் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் இப்பகுதி சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாக மாறி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×