என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித சந்தியாகப்பர் திருவிழா"

    • திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு தாரை தம்பட்டம் முழங்க வான வேடிக்கையுடன் 3 புனிதர்களின் தேர்பவனியும் நடந்தது.
    • திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேர் திரும்புதல், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வங்கமனூத்து புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கடந்த 17ந் தேதி சிலுவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தினமும் நவநாள் திருப்பலி நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 23-ந் தேதி புனித சந்தியாகப்பரின் உருவம் பொறித்த கொடியுடன் பவனி வந்து கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு கபாலமாலை சப்பரபவனி நடந்தது. நேற்று முன்தினம் காலை புதுநன்மை திருப்பலியும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு தாரை தம்பட்டம் முழங்க வான வேடிக்கையுடன் 3 புனிதர்களின் தேர்பவனியும் நடந்தது.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேர் திரும்புதல், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. அதனைத் தொடர்ந்து பங்குத்தந்தை நற்கருணை ஆசீர் வழங்கினார். இந்த விழாவில் அம்பிகா பில்டிங் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் உரிமையாளர் முருகன், சிலுவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை வழிபட்டு சென்றனர்.

    விழா ஏற்பாடுகளை வங்கமனூத்து திருத்தல பங்குத்தந்தை தாமஸ் ஜான்பீட்டர்,மாரிஸ்ட் அருட்சகோதரர்கள், ஊர்பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×