என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் மலைப்பாதையில் பள்ளத்துக்குள் பாய்ந்த கார்
    X

    பள்ளத்துக்குள் பாய்ந்த கார்.

    கொடைக்கானல் மலைப்பாதையில் பள்ளத்துக்குள் பாய்ந்த கார்

    • ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்துக்குள் கார் பாய்ந்தது.
    • பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரும்பாறை:

    திருப்பூர் பெருமாகவுண்டன் பாளையத்தை சேர்த்தவர் கருப்பராஜ் (வயது 23). இவர் தனது காரில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கொடைக்காளலுக்கு வந்தார். பின்னர் அவர்களை அங்கு இறக்கி விட்டு, மீண்டும் தனது ஊர் நோக்கி காரில் திரும்பி கொண் டிருந்தார்.

    கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பாதையில் கார் சென்று கொண்டிருந்தது. பண்ணைக்காடு அருகே நண்டாங்கரை என்னுமிடத்தில் உள்ள வளைவில் கார் திரும்பியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு சாலையோரத்தில் உள்ள 5 அடி பள்ளத்துக்குள் கார் பாய்ந்தது. இதில் கருப்பராஜ் காயமின்றி உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பள்ளத்தில் இருந்து கார் மீட்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×