என் மலர்tooltip icon

    கடலூர்

    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது.
    கடலூர் திருப்பாதிரிபுலியூரில் பிரசித்திபெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி திருவிழா நடந்து வருகிறது. கடந்த 2 ஆண்டு களாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள பிடாரி அம்மன் எல்லை கட்டும் விழா நடந்தது. முன்னதாக வண்ணாரப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் உற்சவம் நடைபெற்றது.

    எல்லை கட்டும் விழாவையொட்டி தேரடி தெருவில் பிடாரி அம்மன் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், சிறப்பு அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இரவு 12 மணி அளவில் தேரடி தெருவில் இருந்து அண்ணாபாலம் சிக்னல் வரையிலும், வண்டிபாளையம் சாலையில் இருந்து சுப்புராயலுசெட்டி தெரு, போடிசெட்டிதெரு பகுதியிலும் பக்தர்கள் தீ பந்தங்கள், அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை ஏந்தி வந்தனர். அதன் பின்னர் எல்லை கட்டும் விழா நடந்தது.

    இன்று (30-ந் தேதி) அமர்ந்தவாலி உற்சவமும், இரவு 10 மணி அளவில் பிடாரி அம்மன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 3-ந் தேதி பிடாரி அம்மன் வீதி உலாவும், 4-ந் தேதி விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. 5-ந் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு நாளும் ஆன்மீக சொற்பொழிவு நடைபெறும். மேலும் 13-ந் தேதி தேர்திருவிழா நடைபெற உள்ளது.
    கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி காந்தி பூங்காவில் இருந்து தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், பண்ருட்டி நகர கழக செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத் சிவா, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள்தணிகை செல்வம், ஆனந்தி, மாவட்ட மாணவரணி தென்னரசு, நகர தி.மு.க. பொருளாளர் கவுன்சிலர் ராமலிங்கம், முத்து வேல் நகர துணை செயலாளர்கவுரி அன்பழகன் வழக்கறிஞர் அணி பரணிசந்தர், இளைஞரணி சம்பத், பாலச்சந்தர் பார்த்திபன், மதியழகன், ரஜகிரி, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட 5 போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    பண்ருட்டி:

    சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடியை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த போலீஸ்காரர் மாணிக்கராஜ் (வயது 40), சென்னை திருமுல்லைவாயல் போலீஸ்காரர் முருகன்(37), சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.

    தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.

    இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. பின்னர் 5 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    கடலூர் அருகே பெண்ணை திட்டி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கடலூர்:

    கடலூர் அடுத்த கோரப்பட்டு சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த உறவினர்கள் புவனேஸ்வரியை கண்டித்ததால் ஜெயபாலிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரிடம் ஜெயபாலன் பேச முயற்சி செய்த போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயபால் புவனேஸ்வரியை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் ஜெயபாலுக்கு ஆதரவாக மூன்று பேர் புவனேஸ்வரியை திட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ஜெயபால், சிவமணி, பாண்டித்துரை, சந்தோஷ் குமார் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலைவாய்ப்பு முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

    எனவே, வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற தகுதியின்அடிப்படையில், 10-ம் வகுப்பு , 12-ம் வகுப்பு , ஐடிஐ , டிப்ளமோ பட்டப்படிப்பு ,ஏ.என்.எம், ஜி.என்.எம், டிப்ளமா நர்சிங், பி.இ படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், இம்முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது.
    கடலூர் அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு தட்டார சாவடி சேர்ந்தவர் கணேச மூர்த்தி (வயது 44). இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று சண்டை வந்தது. இதனால் கோபமடைந்த விஜயா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இதன் காரணமாக கணேசமூர்த்தி திடீரென்று தன் வீட்டில் இருந்த மண்எண்ணையை  தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் காயமடைந்த கணேச மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் அருகே திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி சேர்ந்தவர் ஆனந்த குமார் (வயது 37). வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் தனக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத நிலையில் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த ஆனந்த குமார் மண்ணெண்ணையை திடீரென்று தன் மீது தானாக ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அக்கம் பக்கத்தினர் தீயணைத்து ஆனந்த குமாரை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். ஆனால் ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே ஓடும் ரெயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
    சிதம்பரம்:

    சென்னை எழும்பூரில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. கோடை விடுமுறை என்பதால் இந்த ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இதனால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த ரெயிலில் சென்னை பெரம்பூரை சேர்ந்த மாணிக்க ராஜ் (வயது 40), அம்பத்தூரை சேர்ந்த முருகன் (37), சென்னை ராஜா அண்ணாமலை புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (39), திருவள்ளூரை சேர்ந்த பொன்னுசாமி (40), முத்துக்குமார் ஆகியோர் தாம்பரம் பகுதியில் இருந்து வந்தனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர்.

    தாம்பரத்தில் இருந்து ரெயில் புறப்பட்ட நேரம் முதல் 5 பேரும் குடிபோதையில் பேசிக்கொண்டே இருந்தனர். இது மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. ஆத்திரம் அடைந்த பயணிகள் இதனை தட்டிக்கேட்டனர். உடனே போதையில் இருந்த 5 பேரும் பயணிகளிடம் ரகளை செய்தனர். மற்றவர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் 5 பேரும் கேட்கவில்லை.

    இந்த ரெயில் விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. உடனே ரெயிலில் இருந்த பயணிகள் இதுகுறித்து ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதன்படி போலீசார் குடிபோதையில் ரகளை செய்த 5 பேரையும் ரெயிலில் இருந்து இறக்கினர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    உடனே முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது. குடிபோதையில் இருந்த 5 பேரும் போலீசாரிடம் தாங்கள் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர். அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


    பண்ருட்டி பாட்டி வீட்டுக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள பூனூரை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே அந்த மாணவி பண்ருட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது அங்கு அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவி பாட்டி உதவியுடன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    அங்கு அந்த மாணவியை டாக்டர்கள் பரிசோதித்த போது பிரசவ வலியால் துடித்தது தெரியவந்தது. அப்போது மாணவியின் நிலைமை மோசனமானது. உடனடியாக அந்த மாணவி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது பூனூரை சேர்ந்த கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வரும் வாலிபர் அடிக்கடி பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி - வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், எய்ட்ஸ் தடுப்பு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த மற்றும் வெளி முகமை தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

    மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும். இராணுவ தளவாட தொழிற்சாலை, ரெயில்வே, ஆயுள் காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகம், விமானம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். தேசிய பணமாயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும்.

    அனைத்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சி‌.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அரி கிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நிர்வாகிகள் மனோகரன், மருதவாணன், மகேஷ், ராஜேந்திரன், ஆசைத்தம்பி, வைத்தியலிங்கம், சுரேஷ்பாபு, கிறிஸ்டோபர், கிருஷ்ணன், குமரவேல், அனுசியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநில செயலாளர் டானியல் ஜெய் சிங் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
    செல்வக்குமாரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மதுவானை மேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவர் உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று கடலூர் நீதிமன்ற சாலையில் திடீரென மயங்கி விழுந்தார். அப்போது பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர்கள் செல்வக்குமாரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    விசாரணையில் போலீஸ்காரர் செல்வக்குமார் விஷம் குடித்தது தெரியவந்தது. இதனை அறிந்த கடலூர் 3-வது மாஜிஸ்திரேட்டு ரகோத்தமன் நேரில் சென்று வாக்குமூலம் பெற்றார்.

    முன்னதாக செல்வகுமார் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-

    குடும்ப செலவுக்காக ஒரு பெண்ணிடம் வட்டிக்கு செல்வக்குமார் பணம் வாங்கியிருந்தார். வட்டிக்கு கொடுத்த பெண் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டார். இதன் மனஉளைச்சல் காரணமாக செல்வக்குமார் விஷம் குடித்துள்ளார். மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது.

    செல்வக்குமாரின் நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பண்ருட்டி அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டையில் வசிப்பவர் சுகுமார். பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரது தாயார் சாந்தாம்மாள் (வயது 65).

    இவர் பனப்பாக்கம் பகுதியில் தனியாக குடியிருந்து வருகிறார். தனது தாயை பார்ப்பதற்காக சுகுமார் அடிக்கடி இங்கு வந்து செல்வதுண்டு.

    நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். ஆட்கள் வரும் சத்தத்தை அறிந்த சாந்தாம்மாள் நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்று கேட்டார்.

    உடனே அந்த மர்ம நபர்கள் சாந்தாம்மாளின் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி தருமாறு கேட்டனர். ஆனால், சாந்தாம்மாள் மறுத்தார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் கீழே சுருண்டு விழுந்தார். அதன் பின்னர் கொள்ளையர் அவரிடம் இருந்து 8 பவுன் நகையை பறித்தனர்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள சுகுமார் என்பவரின் வீட்டுக்குள் சென்றனர். இவர் சென்னையில் உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கொள்ளையர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    அங்கு எதுவும் இல்லாததால் பொருட்களை சூறையாடி விட்டு அருகில் உள்ள ராமலிங்கம் வீட்டின் பூட்டை உடைத்தனர். ஆனால், அங்கும் எதுவும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்னொரு வீட்டையும் உடைத்தனர். அங்கும் எதுவும் சிக்காததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

    கொள்ளையர்களால் தாக்கப்பட்ட சாந்தாம் மாளின் மகன் சுகுமார் இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாய் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அவரை சுகுமார் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பனப்பாக்கம் பகுதியில் 4 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    இது குறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர்.

    துணை போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லாவும் பனப்பாக்கத்துக்கு விரைந்தார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    கொள்களையர்கள் பற்றி துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்ப நாய் வரழைக்கப்பட்டது. அது சாந்தாம்மாள் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்தனர். அவர்கள் கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்து துப்பு துலக்கி வருகிறார்கள்.

    ×