search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி, சரண்விடுப்பு, வருங்கால வைப்பு நிதி - வட்டி குறைப்பு உள்ளிட்ட கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்.

    சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், எய்ட்ஸ் தடுப்பு ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த மற்றும் வெளி முகமை தினக்கூலி ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.

    மத்திய, மாநில அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அரசுத் துறைகளில் ஒப்பந்தம், தினக்கூலி, அவுட்சோர்சிங் முறைகளை தடுத்திட வேண்டும். இராணுவ தளவாட தொழிற்சாலை, ரெயில்வே, ஆயுள் காப்பீடு, வங்கி, தொலைத்தொடர்பு, துறைமுகம், விமானம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதைக் கைவிட வேண்டும். தேசிய பணமாயமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும்.

    அனைத்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறையை சீர்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சி‌.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் தொடக்க உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அரி கிருஷ்ணன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நிர்வாகிகள் மனோகரன், மருதவாணன், மகேஷ், ராஜேந்திரன், ஆசைத்தம்பி, வைத்தியலிங்கம், சுரேஷ்பாபு, கிறிஸ்டோபர், கிருஷ்ணன், குமரவேல், அனுசியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாநில செயலாளர் டானியல் ஜெய் சிங் நிறைவுரை ஆற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
    Next Story
    ×