என் மலர்
நீங்கள் தேடியது "கடலூர் தற்கொலை"
- கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
- சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுருநாதன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இறந்து விட்ட நிலையில் சென்னையில் வேலை பார்த்த போது மிஸ்பசாந்தி (35) என்ற பெண்ணுடன் சிவகுருநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் மிஸ்பசாந்தியை சிவகுருநாதன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹெலன்கிரேஸ் என்ற மகள் உள்ளார். சென்னை போரூர் ராஜீவ்காந்தி நகரில் சிவகுருநாதன் தனது 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி (60) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 27-ந்தேதி சிவகுருநாதன் 2-வது மனைவி மிஸ்பசாந்தி, மகள் ஹெலன்கிரேஸ் மற்றும் மாமியார் தெபோரால் கல்யாணி ஆகியோரை அழைத்து வந்து சொந்த ஊரான மலையனூரில் தனியாக வீடு வாடகை எடுத்து இருந்து வந்தார்.
நேற்று இரவு சிவகுருநாதன் ஓட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மனைவி, மகள் மற்றும் மாமியார் 3 பேரும் இல்லாதது கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர்களை பல இடங்களில் சென்று தேடினார். ஆனால் இரவு முழுவதும் தேடியும் அவர்கள் எங்கும் இல்லை.
இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வேல்முருகன் என்பவரின் விவசாய கிணற்றில் மிஸ்பசாந்தி, ஹெலன்கிரேஸ், தெபோரால் கல்யாணி ஆகிய 3 பேரும் பிணமாக மிதந்ததை கண்டு சிவகுருநாதன் அதிர்ச்சியடைந்தார். 3 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தாய், மகள், பேத்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு, அரிசி வியாபாரி.
இவரது மகன் செல்வ தீபக் (வயது 24). இவரும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர்களது வீடு சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவில் உள்ளது.
நேற்று வீட்டில் இருந்த செல்வதீபக் தனது தந்தையிடம் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். ஆனால், செல்வராசு இன்னும் சில வாரங்கள் போகட்டும் அதன் பின்னர் தொழில் தொடங்க பணம் தருவதாக கூறினார். இதனால் மனம் உடைந்த செல்வதீபக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த செல்வராசு கதறி துடித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். செல்வதீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சபீர்முகை தீன். அவரது மகன் ரியாஸ் (வயது 24). பட்டதாரி வாலிபர். இவருக்கு குடிபழக்கம் உண்டு.
இவர் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். எனவே பெற்றோர் ரியாசை கண்டித்தனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ரியாஸ் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.
இதனால் மனமுடைந்த ரியாஸ் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது நண்பர்களுக்கு தெரிவித்தனர்.
அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாஸ் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து உடனடியாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்தனர். தூக்கில் தொங்கிய ரியாசை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
கடலூர் அருகே நடுவீரப்பட்டு தட்டார சாவடி சேர்ந்தவர் கணேச மூர்த்தி (வயது 44). இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று சண்டை வந்தது. இதனால் கோபமடைந்த விஜயா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.
இதன் காரணமாக கணேசமூர்த்தி திடீரென்று தன் வீட்டில் இருந்த மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் காயமடைந்த கணேச மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






