என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரத்தில் போலி ஆவணம் தயாரித்து அரசு வேலைவாங்கி தருவதாக மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூர் ஆர்.சி.தெருவை சேர்ந்தவர் இளந்தீபன் (வயது 33). இவர் இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா என்பவர் அவருக்கு அறிமுகமானார். இதையடுத்து ஷோபியா, இளந்தீபனிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

    இதை உண்மை என்று நம்பிய அவர், ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஷோபியாவிடம் கொடுத்தார். இதன்பிறகு அவர் ஒரு பணிநியமன ஆணையை இளந்தீபனிடம் கொடுத்து பணியில் சேர்ந்து கொள்ளுமாறு கூறினார். அந்த ஆணையுடன் இந்திய உணவு கழக அலுவலகத்திற்கு சென்று இளந்தீபன் பணியில் சேர வேண்டும் என்று அங்குள்ள அதிகாரியிடம் கூறினார். அப்போது அந்த ஆணை போலியானது என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து இளந்தீபன் பற்றி சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஷோபியா, அவரது தாய் ஆரோக்கியசெல்வி(50) ஆகியோர் சிதம்பரம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்டவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கான ரூபாய் வாங்கிக் கொண்டு, கடலூர் சொரக்கால்பட்டில் கணினி மையம் நடத்தி வரும் ரவிச்சந்திரன் (33) என்பவருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சிலுவைபுரத்தில் முகாமிட்டு ஆரோக்கியசெல்வியையும், ரவிச்சந்திரனையும் கைது செய்தனர்.

    ஆனால் போலீசார் நோட்டமிடுவதை அறிந்த முக்கிய குற்றவாளியான ஷோபியா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    பண்ருட்டியில் போலீஸ் விசாரணைக்கு பயந்து இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்தது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தண்டுபாளையம் காலனியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 30). டீ மாஸ்டர். இவருடைய மனைவி செல்வி என்கிற தமிழ்செல்வி (25). இவர்களுக்கு மனோஜ் (5) என்ற மகனும், மேனகாதேவி (2½) என்ற மகளும் உள்ளனர்.

    தமிழ்செல்விக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த செல்வ குமார் (22) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் செல்வகுமாரின் பெற்றோருக்கும், தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    விசாரணைக்காக செல்வகுமார் மற்றும் தமிழ்செல்வியின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி பண்ருட்டி போலீஸ் நிலையத்திற்கு தமிழ்செல்வி தனது 2 குழந்தைகளுடன் வந்தார்.

    பண்ருட்டி போலீஸ் நிலையம் அருகே உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு சென்ற தமிழ்செல்வி, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அங்கிருந்தவர்கள் உடனடியாக தமிழ்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழ்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

    போலீஸ் விசாரணைக்கு பயந்த தமிழ்செல்வி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் முன்னதாக இறப்பதற்கு முன்பு தமிழ்செல்வி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பக்கத்து வீடு என்பதால் செல்வாகுமார் அடிக்கடி வந்து செல்வார். நாட்கள் செல்ல செல்ல அவரது பேச்சு தவறாக இருந்தது.

    மேலும் எனது கணவர் வீட்டில் இல்லாதபோது அடிக்கடி வீட்டுக்குவர ஆரம்பித்தார். ஒருநாள் அவர் என்னை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தார். இதை வெளியில் கூறினால் என்னையும், கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். மேலும் பலமுறை மிரட்டி என்னை அவர் சீரழித்து உள்ளார். அவர் தொடர்ந்து மிரட்டி வந்தார். இதனால்தான் நான் சாவும் முடிவை எடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கள்ளக்காதலன் செல்வக்குமாரை கைது செய்தனர்.  #Tamilnews
    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக புதிய வியூகங்களை அமைக்கப்படும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தனது ஆதரவு மாநில கட்சிகள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி நாடு முழுவதுமான பெற்ற வெற்றி இல்லை. மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்து விட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வியே இதற்கு சான்று.

    கருப்பு பணம் ஓழிப்பு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் பற்றி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பிரதமரின் பதில் ஏற்று கொள்ளகூடியதாக இல்லை. மேலும் கல்வி, விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம் 2022-ல் வரும் என்பது ஏற்று கொள்ள முடியாது. 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும் தற்போது பிரதமரின் பதிலும் முரண்பாடாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக வியூகங்களை அமைக்கும் வகையில் செப்டம்பர் மாதம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.

    தற்போது ஏரிகள் போர்கால அடிப்படையில் 20 நாட்களில் தூர்வாரப்படும் என்கிறார்கள். வறட்சி காலங்களில் எதுவும் செய்யாமல் தற்போது ஏரிகள் தூர்வாரப்படும் என்ற அறிவிப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்திறந்து விடப்பட்ட பிறகு ஏன் தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் வரும் சூழ்நிலையில் அவசரகதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #BJP

    போலீஸ் நிலையம் அருகே இன்று இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தண்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 25). அருள்தாஸ் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணைக்காக நேற்று இரவு அருள்தாஸ், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு நாளை காலை மீண்டும் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

    இன்று காலை அருள் தாஸ்- தமிழ்ச்செல்வி ஆகியோர் பண்ருட்டி போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் தமிழ்ச்செல்வி கழிவறைக்கு செல்வதாக கணவரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்துக்கு சென்றார்.

    அங்கு வைத்து அவர் தனது உடலில் திடீரென்று மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் தமிழ்ச்செல்வியின் உடல் முழுவதும் கருகியது.

    உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணு பிரியா, ஜவ்வாது உசேன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தண்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 25). அருள்தாஸ் அங்குள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அருள்தாஸ் குடும்பத்தினருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இது தொடர்பாக பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணைக்காக நேற்று இரவு அருள்தாஸ், அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் சென்றனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு நாளை காலை மீண்டும் வாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

    இன்று காலை அருள்தாஸ்- தமிழ்ச்செல்வி ஆகியோர் பண்ருட்டி போலீஸ் நிலையம் சென்றனர். பின்னர் தமிழ்ச் செல்வி கழிவறைக்கு செல்வதாக கணவரிடம் கூறி சென்றார். பின்னர் அவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்துக்கு சென்றார்.

    அங்கு வைத்து அவர் தனது உடலில் திடீரென்று மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலில் தீப்பிடித்ததும் அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் தமிழ்ச்செல்வியின் உடல் முழுவதும் கருகியது.

    உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஷ்ணு பிரியா, ஜவ்வாது உசேன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீஸ் நிலையம் அருகே இளம்பெண் தீக்குளித்த சம்பவம் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி 4-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயி. இவரது மகன் ஹரிஷ் (வயது 8).

    இவன் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டின் அருகே உள்ள குளத்துக்கு குளிக்க சென்றான்.

    அப்போது கால் தவறி குளத்துக்குள் விழுந்து இறந்து விட்டான். குளிக்க சென்ற மகன் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் கவலை அடைந்த பெற்றோர் குளக்கரைக்கு தேடிச் சென்றனர்.

    அங்கு ஹரிஷ் அணிந்திருந்த செருப்பு கிடந்தது. உடனே குளத்தை எட்டிப் பார்த்தனர். அங்கு ஹரிஷ் பிணமாக கிடந்தான். இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் ஹரிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கணவருக்கு எதிராக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Highcourt

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், சமூக ஆர்வலர் வாராகி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-

    பண்ருட்டி எம்.எல்.ஏ. சத்யாவின் கணவரும், முன்னாள் நகர மன்ற செயலாளருமான பன்னீர் செல்வம் மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கட்டப்பஞ்சாயத்து செய்வது, தொழிலதிபர்கள் மற்றும் அரசு ஊழியர்களை மிரட்டுவது என்று அவர் மீது பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள ஸ்ரீநல்லமுத்து அய்யனார் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை பன்னீர்செல்வம் அபகரித்துள்ளார்.

    இதுகுறித்து கடந்த மார்ச் 6-ந்தேதி கடலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி உள்ளிட்டோருக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, இந்த நில அபகரிப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஆஷா ஆகியோர் விசாரித்து, பதில் அளிக்கும் படி வருவாய்த் துறை செயலாளர், கடலூர் கலெக்டர், உள்ளிட்டோருக் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.#Highcourt

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேகிணற்றில் தவறி விழுந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது பூலாம்பாடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 50). விவசாயி. இவரது மகன் சசிபாலன்(14). இவன் வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று காலை சசிபாலன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். மாலையில் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் பள்ளிக்கு சென்று மகனை தேடினர். அங்கும் அவனை காணவில்லை.

    பின்னர் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி அங்கும் சென்று தேடினர். அங்கும் சசிபாலனை காணவில்லை. இதனைத்தொடர்ந்து வேப்பூர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    பள்ளியின் அருகே இருக்கும் தரைமட்ட கிணற்றை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அங்கு சசிபாலன் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் பிணமாக கிடந்த சசிபாலன் உடலை இரவு 10 மணியளவில் மீட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் சசிபாலனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைபார்க்க பரிதாபமாக இருந்தது.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவன் சசிபாலன் பள்ளி அருகே உள்ள தரைகிணற்றில் இறங்கி கால் கழுவ முயன்ற போது தவறிவிழுந்துள்ளான். அவனுக்கு நீச்சல் தெரியாததால் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுபற்றி பொதுமக்கள் கூறும்போது, வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க பள்ளி அருகே உள்ள பகுதிக்கு சென்று தரைக்கிணற்றில் கால் கழுவி வருகின்றனர். பள்ளியில் கழிப்பறை வசதி இல்லாததால் தான் மாணவன் சசிபாலன் கால் கழுவ சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான் என்று போலீசாரிடம் கூறினர்.

    மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவன் சிவராமன் என்பவர் கால் கழுவுவதற்கு தண்ணீர் எடுக்க முயன்றபோது தொட்டியில் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
    குமராட்சி அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள வீரநத்தம் சின்னதெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் மாடிப்பகுதி வழியாக வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் வீட்டின் அறையில் இருந்த சாவி மூலம் பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ.8 ஆயிரம், நிலப்பத்திரங்கள் ஆகியவற்றை திருடிச்சென்றனர். 

    இந்த நிலையில் நேற்று காலையில் ரவிச்சந்திரன் எழுந்து பார்த்தபோது, வீட்டில் நகை-பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் குமராட்சி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமகா உயிரிழந்தார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த ஓ.கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 40). இவர் வெளி நாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி (36). இவர் நேற்று ஓ.கீரனூரில் இருந்து பெண்ணாடத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்வதுக்கு பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது பராசக்தியின் உறவினர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி கலைசெல்வி ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.

    பராசக்தியை பார்த்தவுடன் மணிமாறன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர்கள் பராசக்தியிடம் உங்கள் ஊருக்கு தான் செல்கிறோம் என்று கூறினர்.

    பின்னர் அவர்கள் பராசக்தியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டனர். 3 பேரும் ஓ.கீரனூர் நோக்கி புறப்பட்டனர்.

    ஓ. கீரனூர் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அந்த டிராக்டரின் அருகில் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதை கவனிக்காத டிரைவர் திடீரென டிராக்டரை இயக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மணிமாறனின் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் பராசக்தி டிராக்டரின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மணிமாறன், கலைசெல்வி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தா சலம் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு படுகாயம் அடைந்த பராசக்திக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் பராசக்தி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யபட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    குறிஞ்சிப்பாடி:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மதனகோபாலபுரம் ஆர்.சி.காலனியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35). கூலித்தொழிலாளி.

    இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் குறிஞ்சிப்பாடி சென்று மளிகைப்பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் ஜெபராஜ் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்தவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் ஜெபராஜீக்கு மனைவியும், 2 பெண்கள் குழந்தைகள் மற்றும் 1 மகனும் உள்ளனர்.

    வேப்பூர் அருகே இன்று குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     வேப்பூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது மங்களூர். இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 4 நீர்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் குடிநீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்தது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த 1 மாத காலமாக சீரானமுறையில் குடிநீர் வழங்கப்படவில்லை. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் பழுதான மின்மோட்டாரை சீர் செய்யக்கோரி மங்களூர் ஊராட்சி செயலாளருக்கும், வட்டார வளர்ச்சி அதிகாரிக்கும் மனுகொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

    இதையடுத்து குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் மங்களூர் பஸ்நிலையம் அருகே காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுபாக்கம் போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×