search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
    X

    பெண்ணாடம் அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பெண் பலி

    பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பரிதாபமகா உயிரிழந்தார்.

    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தை அடுத்த ஓ.கீரனூர் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 40). இவர் வெளி நாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி (36). இவர் நேற்று ஓ.கீரனூரில் இருந்து பெண்ணாடத்துக்கு பஸ்சில் வந்தார். பின்னர் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு ஊருக்கு செல்வதுக்கு பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது பராசக்தியின் உறவினர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி கலைசெல்வி ஆகிய 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர்.

    பராசக்தியை பார்த்தவுடன் மணிமாறன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் அவர்கள் பராசக்தியிடம் உங்கள் ஊருக்கு தான் செல்கிறோம் என்று கூறினர்.

    பின்னர் அவர்கள் பராசக்தியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டனர். 3 பேரும் ஓ.கீரனூர் நோக்கி புறப்பட்டனர்.

    ஓ. கீரனூர் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் உள்ள சாலையோரம் டிராக்டர் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    அந்த டிராக்டரின் அருகில் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதை கவனிக்காத டிரைவர் திடீரென டிராக்டரை இயக்கினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மணிமாறனின் மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதில் பராசக்தி டிராக்டரின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மணிமாறன், கலைசெல்வி ஆகியோரும் காயம் அடைந்தனர்.

    விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தா சலம் அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு படுகாயம் அடைந்த பராசக்திக்கு முதலுதவி சிகிச்சையளிக்கபட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் பராசக்தி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யபட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×