என் மலர்tooltip icon

    கடலூர்

    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார்.
    • ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த காரணப்பட்டு சேர்ந்தவர் மதிச்செல்வம் (வயது 30 ). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி செல்வம் பூச்சி மருந்து குடித்தார்.

    இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதி செல்வத்தை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதி செல்வத்தை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே திருவதிகை முத்துலட்சுமி நகரில் உள்ள மரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாககிடந்தார். இதனை கண்ட அப்பகுதியினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ரு ட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 29). முந்திரி வியாபாரி என்பதும், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை வைக்கும் பணிகள் நடந்து வந்தது. நண்பர்களுக்கு பத்திரிக்கை வைக்க செல்வதாக கூறி வீட்டிலிருந்து மோகன்ராஜ் இன்று காலை வெளியில் சென்றவர் தூக்கில் தொங்கியபடி கிடந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து முந்திரி வியாபாரி மோகன்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என்பது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புஷ்பராஜ் வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    வடலூரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 50). இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது வடலூரில் வசித்து வருகிறார்.இன்று காலை புஷ்பரா ஜ்வடலூரில் இருந்து கடலூரில் நடைபெறும் திருமணத்திற்கு மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சுப்ரமணி யபுரம் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் புஷ்பராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த புஷ்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • நெடுஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    கோவில் நகரமான சிதம்பரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதாமேனன் தலைமையில் வர்த்தக சங்கத்தினர், சிதம்பரம் நகராட்சியினர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுநல அமைப்பினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிதம்பரம் ரத வீதிகள் மற்றும் சுற்றியுளள பகுதி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி நெடுஞ்சாலை த்துறை உதவி பொறி யாளர் விஜய ராகவன் தலைமை யிலான ஊழியர்கள் ஜே.சி.பி. பொக்லைன் எந்திரங்க ளின் உதவியுடன் சிதம்ப ரம் ரத வீதிகளில் உள்ள சாலைகளில் ஆக்கிரமி ப்புகளை அகற்றும் பணியில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளாவிட்டால், நெடு ஞ்சாலைத் துறையினரால் அகற்றப்படுமென வருவாய்த் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கெடிலம் ஆற்றுப்பகுதி சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகே போலீசார் சென்றனர்.

    போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். இருந்தபோதும் அவர்கள் தப்பிவிட்டனர். இதை யடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றில் இருந்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வாலைக்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கடலூர்:

    சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையான்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 28). பால் வண்டி டிரைவர். இவர் அதே ஊரைச் சேர்ந்த ஜோதி (40) என்பவருடன் வீராணம் ஏரியில் மீன்பிடிக்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது வாலை க்கொல்லை அருகே சென்ற போது நிலைதடுமாறி எதிரில் வந்த கார் மீது மோதினார். இதில் பாலமுருகனின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜோதிக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவ்வழியே சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வினோதன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார்.
    • மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் அங்குசெட்டிபாளையம் கிராம த்தை சேர்ந்தவர் வினோதன் (வயது 27), ஆட்டோ டிரைவர். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலா ளராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.இவர் நேற்று மதியம் 3 மணியளவில் பண்ருட்டி ராஜானி சாலையில் நோ பார்க்கிங்கில் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த போக்குவரத்து போலீசார், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர கூறியுள்ளனர். ஸ்கூல் சவாரி உள்ளதால், மாணவர்களை வீட்டில் விட்டுவிட்டு போலீஸ் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளார். பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியு ள்ளார். அப்போது அவர் குடித்துவிட்டு வந்ததை அறிந்த அவரது மனைவி அம்சவள்ளி அதனை கண்டித்துள்ளார். போலீசார் கண்டித்ததாலும், ஆட்டோவை போலீஸ் நிலையம் எடுத்துவர சொன்னதாலும் குடித்ததாக வினோதன் அம்சவள்ளி யிடம் கூறினார்.

    இதில் ஆத்திரமடைந்த அம்சவள்ளி, உன்னுடன் நான் வாழமாட்டேன் எனக் கூறி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து இரவு 8 மணிக்கு தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு பண்ருட்டி 4 முனை சந்திப்பிற்கு வந்த வினோதன், கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த டீசலை தன் மீது ஊற்றிக் கொண்டார். மேலும், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் தீக்குளிக்க போவதாக கூறியுள்ளார். அங்கு போக்குவரத்து சீரமைக்கும் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், வினோதனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரது மனைவியை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி 4 முனை சந்திப்பில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
    • சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கோண்டூரில் அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இன்று காலை கூர்நோக்கு இல்லத்திலிருந்து சங்கராபுரம் பகுதியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வைத்திருந்த 17 வயது சிறுவன் தலை மற்றும் காலில் அடிபட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கடந்த 7 ந் தேதி அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வந்த நிலையில், இன்று காலை கூர்நோக்கு இல்லத்தில் 2-வது தளத்தில் துணி காயவைப்பதற்கு சென்று உள்ளார். இவருக்கு பாதுகாப்பாக காவலாளி துரைராஜ் என்பவரும் உடன் இருந்தார்.

    அப்போது திடீரென்று 17 வயது சிறுவன் காவலாளியை தள்ளிவிட்டு 2-வது மாடியில் இருந்து தப்பித்து செல்வதற்காக குதித்துள்ளார். அப்போது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.
    • 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி செங்கமேட்டை சேர்ந்தவர் ஆபரணம் (வயது 47). இவர் அடகு வைத்த 2 பவுன் தங்க நகையை மீட்டு தனது கட்டப்பைக்குள் கைப்பையில் வைத்து தனது ஊருக்கு செல்வதற்காக தனியார் பஸ்சில் ஏறினார்.

    பின்னர் கட்டப்பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இதில் கைப்பை மற்றும் அதிலிருந்து 2பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் ஆகும். இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர்.
    • கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கே.என்.பேட்டை கெடிலம் ஆறு பகுதியில் சப்-இன்ஸ் பெக்டர் கணபதி வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவ்வழியாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்த னர். லாரியில் மணல் இருந்தது. இதற்கு ஆவணம் கேட்ட போது உரிய அனுமதி யில்லாமல் மணல் கடத்த லில் ஈடுபட்டது தெரிய வந்தது. அந்த சமயத்தில் திடீ ரென்று லாரி டிரைவர் கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.

    இதே போல் சப்-இன்ஸ் பெக்டர் குமாரசாமி திருமா ணிக்குழி கெடிலம் ஆற்றங்க ரை பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு டிராக்டர் நின்று கொண்டிருந்தது. அருகில் பார்த்த போது மணல் இருந்தது. லாரி மற்றும் டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து கடலூர் திருப்பா திரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 41). ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும் தோட்டப் பட்ைட சேர்ந்த விஸ்வநாத னுக்கும் முன்விரோத தக ராறு இருந்து வந்தது. சம்ப வத்தன்று விஸ்வநாதன் தனது நண்பர் பாவாணனு டன் நத்தப்பட்டு பைபாஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கபில் தேவ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விஸ்வநாதன் மீது இடிப்பது போல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் விஸ்வ நாதன் மற்றும் கபில்தேவுக்கு காயம் ஏற்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து விஸ்வ நாதன் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் கபில்தேவ் மீதும், கபில்தேவ் கொடுத்த புகா ரின் பேரில் விஸ்வநாதன், பாவாணன் ஆகியோர் மீதும் போலீசார் தனித்தனி யாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பண்ருட்டியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி உட்கோட்ட கிரைம் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி ஆர் எஸ் மணி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37) என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் புதுச்சேரி மதுப்பாட்டில்கள் 15 வைத்திருந்தது தெரியவந்தது பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் மோகன்ராஜை கைது செய்து அவனிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இதேபோல் பண்ருட்டி அருகே காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது மாளிகம்பட்டு அம்மன் கோவில் தெரு சேர்ந்த பத்மநாபன் (43), என்பவர் கள்ளத்தனமாக அரசு மதுபான பாட்டில்களை விற்பனை செய்தார். போலீசார் விரைந்து அவரை கைது செய்து மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில்அடைத்தனர்

    ×