மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
Published on

கடலூர்:

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கடலூர் அடுத்த காரணப்பட்டு சேர்ந்தவர் மதிச்செல்வம் (வயது 30 ). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அவரது மனைவி தீபா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதி செல்வம் பூச்சி மருந்து குடித்தார்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மதி செல்வத்தை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மதி செல்வத்தை சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மதிசெல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com