என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- கடலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- வாலிபர் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமாரசாமி தலைமையில் போலீசார் கடலூர் - சிதம்பரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, வாலிபர் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் கடலூர் வானமாதேவி சோக்கன்பா ளையத்தை சேர்ந்த தினக ரன் (வயது 20) என்பது தெரிய வந்தது.இவர் வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்ததும் மேலும் இதே போல் 3 மோட்டார் சைக்கிளை திருடி உள்ளது விசா ரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். தினகரனை கைது செய்தனர்.
Next Story






