என் மலர்
கடலூர்
விருத்தாசலம் அருகே ரெயில் கேட்டில் லாரி மோதியதில் சிக்னலில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக தேஜஸ் அதிவிரைவு ரெயில் நடுவழியில் நின்றது.
விருத்தாசலம்:
மதுரையில் இருந்து சென்னை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் ஜங்ஷனுக்கு ரெயில் வருவதை அறிந்ததும் நாச்சியார் பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது மினி லாரி வந்துகொண்டிருந்தது.
இந்த லாரியை விருத்தாசலம் அருகே தொட்டி குப்பத்தை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (வயது 25) ஓட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரி ரெயில்கேட் மீது மோதி உள்ளே புகுந்ததது. இதனால் ரெயில்வே கேட் சேதமடைந்ததுடன் சிக்னல் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தை கடந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நின்றது. நீண்ட நேரம் ரெயில் நின்றதால் பயணிகள் என்னமோ? ஏதோ என்று தவித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சிக்னலை சரி செய்தனர். அதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இது குறித்து அறிந்த விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மினி லாரி பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை விருத்தாசலம் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.
விருத்தாசலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஈரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். அவரது மனைவி சத்யா (வயது 25). இவர் கடந்த 23.4.2016 அன்று தனது மாமனார் கொளஞ்சி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீமுஷ்ணம் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
வேப்பூர் நோக்கி சென்ற போது கண்டப்பங்குறிச்சி அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் கொளஞ்சி பலியானார். சத்யாவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வழக்கு விருத்தாச்சலம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசன் விபத்தில் காயமடைந்த சத்யாவிற்கு ரூ.8 லட்சத்து 77 ஆயிரத்து 600 மற்றும் வட்டியுடன் சேர்த்து நஷ்ட ஈடு வழங்க விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.
ஆனால் இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் வழங்காததால் வக்கீல்கள் ஜெயக்குமார், காமராஜ் ஆகியோர் ஜப்தி நடவடிக்கை எடுக்க மனு தாக்கல் செய்தனர்.
அதனை ஏற்ற நீதிபதி இளவரசன் விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட ஏதேனும் ஒரு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை விருத்தாசலம் கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

2021-22-ம் ஆண்டுக்கான ரூ.10 ஆயிரத்து 300 கோடி வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நபார்டு வங்கியின் மூலம் 2021-22-ம் ஆண்டிற்கான ரூ.10 ஆயிரத்து 300 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி கடலூர் மாவட்டத்தில் கிடைக்க பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.10 ஆயிரத்து 300 கோடியே 80 லட்சம் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்திய கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது.
இது போன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் மத்திய அரசின் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் கடலூர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் முன்னோடி வங்கி மூலம் தயாரிக்கப்படும் என்றார்.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயக்குமார், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு) எம்.விஜய்நீகர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி மற்றும் வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

கடலூரில் வேப்பமரத்தில் தூக்குப்போட்ட தனியார் நிறுவன உரிமையாளரை ரோந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்.
கடலூர்:
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நாகராஜன். இவர் சுபஉப்பலவாடி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார். அப்போது உப்பனாறு பாலம் அருகில் உள்ள வேப்ப மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்குப்போட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாகராஜன் விரைந்து சென்று அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் தனியாக அவரை மரத்தில் இருந்து கீழே இறக்க முடியவில்லை. இதையடுத்து அந்த வழியாக சென்றவர்களை அழைத்து, அவரை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பெரியமுதலியார்சாவடி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்கிற பார்த்திபன் (வயது 31) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் சண்டை போட்டு விட்டு சுபஉப்பலவாடியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு வந்ததும், இங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மரத்தில் தூக்குப்போட்டதால் அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் சுரேஷ், சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் சுரேசை சரியான நேரத்தில் மீட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜனை நேற்று அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்து, பாராட்டி சால்வை அணிவித்தனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ் புதுச்சேரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் நேற்று வண்டிப்பாளையம் வெள்ளிமோட்டான் தெரு, பாதிரிக்குப்பம் திடல் ஆகிய பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு புதுவண்டிப்பாளையம் கார்த்திகேயன் (வயது 48), கூத்தப்பாக்கம் வேலுநகர் பாஸ்கரன் (49) ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே பள்ளியில் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி:
குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 65). இவர் வேலவிநாயகர்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் தங்கி இருந்து இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகத்தின் மகன் ஆனந்தன் இறந்தார்.
இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சம்பவத்தன்று பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் முதுநகரில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். இவர் தற்போது நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் சக போலீசாருடன் சுத்துக்குளம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தங்கபிள்ளை மகன் செந்தில் (வயது 36), பீமாராவ்நகர் செல்வராஜ் மகன் சிலம்பரசன் (36), செல்லியம்மன் கோவில் தெரு செல்வம் மகன் அன்பரசன் (34), எழில்தாஸ் மகன் வேல்பிரகாஷ் (28) ஆகிய 4 பேரும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த விஜயகுமார் அவர்களிடம் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்தனர். மேலும் அவர் வைத்திருந்த செல்போனை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது பற்றி விஜயகுமார் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
சென்னையில் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்ற கடலூர் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் 245 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர்சங்கம் இணைந்து சென்னையில் இன்றுமுதல் டிசம்பர் 31-ந் தேதிவரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள பா.ம.க. மற்றும் வன்னியர்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்பேரில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள் வேன்கள் மற்றும் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களை அந்த அந்த பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கடலூர், பண்ருட்டி, காடாம்புலியூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்ல தயாராக இருந்த பா.ம.க. மற்றும் வன்னியர்சங்க நிர்வாகிகள் 245 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அந்த அந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

சிறுபாக்கம் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுபாக்கம்:
சிறுபாக்கம் அருகே உள்ள விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்(வயது 38). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் வேல்முருகன்(11), அக்காள் மகன் சுதாகர்(18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தார். மங்களூர் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனமும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் பலத்த காயமடைந்த சங்கர் உள்பட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் சிறுபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் நேற்று சுரங்கப்பாதை அருகில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சுப்புராயலுநகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயலட்சுமி (வயது 38) சுரங்கப்பாதையில் தவறான வழியில் வந்தார்.
இதை பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் அவரிடம் இது பற்றி தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, சக்திவேலை ஆபாசமாக திட்டி அரசு பணியை செய்யவிடாமல் தடுத்ததாக தெரிகிறது.
இது பற்றி சக்திவேல் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே வடவாற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
காட்டுமன்னார்கோவில்:
சிதம்பரம் அருகே ஓமகுளம் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 40). இவருடைய மகன் ஹரி கணேஷ்(15). இவன் சிதம்பரத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள உறவினர் அஜய் வீட்டுக்கு ஹரி கணேஷ் சென்றிருந்தான். நேற்று மதியம் அஜய் மற்றும் ஹரிகணேஷ், வீராணநல்லூர் பகுதியில் உள்ள வடவாற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
இந்த நிலையில் ஹரிகணேஷ், வடவாற்றுக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கினான். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி தேடினர். இருப்பினும் ஹரிகணேஷ் கிடைக்கவில்லை. இதற்கிடையே இதுபற்றி அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து ஆற்றுக்குள் இறங்கி ஹரிகணேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் அவனை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதையடுத்து ஹரிகணேசின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் பகுதியில் மழை நீரில் மூழ்கி நெற் பயிர்கள் அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நெல்லிக்குப்பம்:
வங்க கடலில் உருவான நிவர் புயல் , புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்து சென்றது. புயல், கடந்த சென்ற இடங்களில் நல்ல மழையை கொடுத்து சென்றது. அந்தவகையில் கடலூரிலும் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்து 2 நாட்கள் ஆனாலும் இன்னும் அதனால் ஏற்பட்ட வெள்ள நீர் வடிந்தபாடில்லை. குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
குறிப்பாக சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெல்வயல்கள் அனைத்தும் மழைநீரில் மிதக்கிறது. அந்த வகையில் நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு, பல்லவராயநத்தம், ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் சில பகுதியில் நெற்கதிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தவை என்பது தான் வேதனையின் உச்சமாகும். நெல் வயல்களை சூழ்ந்த வெள்ள நீரை விவசாயிகள் வடிய வைத்தும் இன்னும் வடிந்தபாடில்லை.
நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், மருதாடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரை வெளியேற்றுவது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இதில் மருதாடு பகுதியில் சுமார் 20 ஏக்கரில் இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் மழைநீருக்குள் மூழ்கிக்கிடக்கிறது. கன மழை பெய்து 3 நாட்கள் ஆகியும் எந்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு வந்து, மழைநீரை வடிய வைக்க எந்த உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.
நடப்பு ஆண்டில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு சம்பா சாகுபடியை தொடங்கினோம். நெற்பயிர்கள் கதிர்வரும் தருவாயில் இருந்த நிலையில் தற்போது தண்ணீரில் மூழ்கி உள்ளது. மழைநீர் இன்னும் முழுமையாக வடியாததால், பயிர்கள் அனைத்தும் நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றவும் உதவிட வேண்டும் என்று கவலையுடன் தெரிவிக்கிறார்கள் அந்த பகுதி விவசாயிகள்.