என் மலர்
கடலூர்
நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கனகசபையின் மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் போராட்ட குழுவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் காரணமாக கோட்டாட்சியர் ரவி நேற்று சிதம்பரத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற ஆணைகள் மற்றும் அரசாணைகள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது. மேலும் இந்நிகழ்வு தமிழ்நாடு மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில், இறுதி முடிவு எடுக்கும் வகையில் பல்வேறு நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
எனவே அரசின் முடிவை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், போராட்டக்குழுவினர் மற்றும் இதர பல்வேறு போராட்ட குழுவினர் அரசின் முடிவு வரும் வரையில் சிதம்பரம் நகர பகுதியில் எவ்வித போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மேலும் கூட்டமாக கூடி ஆலோசனை மேற்கொள்ளுதலும் ஒரு மாத காலத்திற்கு செய்யக்கூடாது என இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு இன்று (அதாவது நேற்று) முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே 144 தடை உத்தரவு அமலுக்கு வந்ததால், சிதம்பரம் பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நடராஜர் கோவில் முன்பும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிதம்பரம் பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண், கடலூர் பகுதியில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது அக்காள் கணவர் மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பரசன் (28). இவர் அடிக்கடி நர்சிங் மாணவியை சந்தித்து பேசுவது உண்டு. அதோடு அவ்வப்போது பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.
அப்போது அன்பரசன் நர்சிங் மாணவியிடம் உன்னையே திருமணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அன்பரசனுடன் சென்னைக்கு சென்றார்.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அநத மாணவி கிடைக்கவில்லை. எனவே இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர்.
அப்போது மாணவியை அன்பரசன் ஆந்திராவிற்கு அழைத்து செல்ல பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார். இதனை அறிந்த போலீசார் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு சென்று போது கையும் களவுமாக பிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கடலூர் அருகே காதல் திருமணம் செய்த நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). டிரைவர். இவரது மனைவி அஞ்சுகம் (வயது 32). இவர் அதே பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக சதீஷ்குமாருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததால் வீட்டில் இருந்து வந்தார். தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக சதீஷ்குமார் வேலைக்கு செல்வதாக தனது மனைவி அஞ்சுகத்திடம் தெரிவித்தார். ஆனால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல வேண்டாம் என அஞ்சுகம்கூறி உள்ளார். ஆனால் நேற்று அஞ்சுகம் வேலைக்கு சென்ற பிறகு சதீஷ்குமார் வேலைக்கு சென்றுள்ளார்.
நேற்று மாலை வழக்கம் போல் அஞ்சுகம் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் சதீஷ்குமார் காணவில்லை. பின்னர் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஞ்சுகம் தனது 2 குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தாய் வீட்டில் டி.வி. பார்க்க சொல்லிவிட்டு, தனது வீட்டில் வந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று இரவு வழக்கம் போல் சதீஷ்குமார் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்ளே பூட்டிருந்தது. பின்னர் சந்தேகமடைந்த சதீஷ்குமார் ஜன்னல் வழியாக பார்த்தார்.
அப்போது தனது மனைவி அஞ்சுகம் தூக்கு மாட்டி இருந்ததை பார்த்து கதறி அழுதார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அஞ்சுகத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி அருகே பெண் தர மறுத்ததால் வீட்டுக்கு தீவைத்த வாலிபரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொஞ்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகனின் மகளை திருமணம் செய்து கொள்ள பெண் கேட்டார். இதற்கு முருகன் பெண் தர மாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்று மாலை முருகன் தனது குடும்பத்துடன் கொஞ்சிகுப்பம் பகுதியிலிருந்து பண்ருட்டிக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். இதனை அறிந்துகொண்ட உத்திராபதி நேராக முருகனின் வீட்டிற்கு சென்று வீட்டுக்கு தீ வைத்தார்.
இந்த விபத்தில் வீடு முழுவதும் தீயில் எரிந்து சாம்பல் ஆனது. பின்னர் பண்ருட்டியில் இருந்து வீடு திரும்பிய முருகன் வீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் உத்திராபதி மீது புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்கு இரையான வீட்டை பார்வையிட்டு உத்திராபதியை கைது செய்தனர். கைதான அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பண்ருட்டி அருகே நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காள் கணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண், கடலூர் பகுதியில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது அக்காள் கணவர் மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பரசன் (28). இவர் அடிக்கடி நர்சிங் மாணவியை சந்தித்து பேசுவது உண்டு. அதோடு அவ்வப்போது பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.
அப்போது அன்பரசன் நர்சிங் மாணவியிடம் உன்னையே திருமணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அன்பரசனுடன் சென்னைக்கு சென்றார்.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அந்த மாணவி கிடைக்கவில்லை. எனவே இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர்.
அப்போது மாணவியை அன்பரசன் ஆந்திராவிற்கு அழைத்து செல்ல பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார். இதனை அறிந்த போலீசார் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு சென்றபோது கையும் களவுமாக பிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண், கடலூர் பகுதியில் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது அக்காள் கணவர் மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த அன்பரசன் (28). இவர் அடிக்கடி நர்சிங் மாணவியை சந்தித்து பேசுவது உண்டு. அதோடு அவ்வப்போது பாலியல் தொந்தரவு செய்து உள்ளார்.
அப்போது அன்பரசன் நர்சிங் மாணவியிடம் உன்னையே திருமணம் செய்வதாக உறுதி அளித்து உள்ளார். இதனை நம்பிய அந்த மாணவி அன்பரசனுடன் சென்னைக்கு சென்றார்.
அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அந்த மாணவி கிடைக்கவில்லை. எனவே இதுபற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்தனர்.
அப்போது மாணவியை அன்பரசன் ஆந்திராவிற்கு அழைத்து செல்ல பண்ருட்டி பஸ்நிலையம் வந்தார். இதனை அறிந்த போலீசார் பண்ருட்டி பஸ் நிலையத்திற்கு சென்றபோது கையும் களவுமாக பிடித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாணவியின் தந்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்பரசனை கைது செய்தனர். மீட்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் புதிய கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என மேயர் சுந்தரி ராஜா தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி முதல் மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு முதல் பெண் மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் சுந்தரி ராஜா பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் என்னை முதல் மாநகர பெண் மேயராக தேர்ந்தெடுக்க பரிந்துரை செய்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு, நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மாமன்றம் அனைத்து வகையிலும் மேம்படுத்திட உடனிருக்கும் துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் கடந்த கால தி.மு.க. ஆட்சியில் குடிநீர் தங்கு தடையின்றி மாநகராட்சி பகுதியில் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது சுத்தமான குடிநீர் கிடைக்காமலும் போதிய அடிப்படை வசதி இல்லாமலும் இருந்து வருகின்றன. ஆகையால் இனி வரும் காலங்களில் பொதுமக்கள் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கும், சாலை, தெரு மின்விளக்கு மற்றும் அடிப்படை வசதி முழுமையாக கிடைப்பதற்கும், குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றுவதற்கும் அனைத்து நடவடிக்கையையும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்.
கடலூர் மாநகராட்சிக்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து மேம்படுத்துவதற்கு அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருப்போம் என வாக்குறுதி அளித்த வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நகர்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மாமன்ற உறுப்பினர்கள் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் உங்கள் பகுதிகளை மேம்படுத்திட தேவையான கோரிக்கைகளை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன் , முதல் மாநகராட்சி பெண் மேயர் சுந்தரி ராஜாவுக்கும், துணை மேயர் தாமரைச்செல்வனுக்கும் மற்றும் மாமன்ற உறுப்பினர் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத்தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கவுன்சிலர் கீதா குணசேகரன் (.தி.மு.க.) எங்கள் வார்டு பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
கவுன்சிலர் பிரகாஷ் (திமுக) எங்கள் பகுதியில் தெரு மின்விளக்கு சரியான முறையில் எரியவில்லை. மேலும் குப்பைகள் சரியான முறையில் அகற்றாமல் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரிதா (வி.சி.க) எங்கள் பகுதிகளில் பல்வேறு தெருக்களில் சாலை வசதிகள் மற்றும் வடிகால் வாய்க்கால் பழுதடைந்து உள்ளது. மேலும் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் சுந்தரி ராஜா:- கடலூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு வெள்ளப்பாக்கம் பகுதியில் புதிய கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் உங்கள் பகுதியில் உள்ள குறைகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டம் நடந்தது.
திட்டக்குடி அருகே நூதன முறையில் மணல் கடத்தும் கும்பலை பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே வாகையூர், ஆக்கனூர், பாளையம், இடைச்செரு வாய், கீழ்ச்செருவாய், ஆகிய கிராமங்களின் அருகே வெள்ளாற்றிலிருந்து இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆ.பாளையம் கிராமத்தில் காலனி அருகில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை வழியில் சென்று வெள்ளாற்றில் அங்கு பல மாதங்களாக தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு அப்பகுதியில் மணல் அள்ளுவதை கண்டு அப்பகுதி இளைஞர் ஒன்று சேர்ந்து வெள்ளாற்று பகுதிக்கு கையில் உள்ள செல்போன் வெளிச்சத்தின் மூலம் சென்ற போது மணல் கொள்ளையர்கள் அவர்களை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்க தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதிக்கு மீண்டும் இன்று காலையில் சென்று பார்த்த போது 100-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இரவு அங்கிருந்தது.
ஆனால் காலையில் மூட்டைகளில் இருந்த மண்ணை கீழே கொட்டிவிட்டு சாக்கு மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த அளவு துணிச்சலாக செயல்படும் அப்பகுதி மணல் கொள்ளையர்கள் இவர்கள் மணலை மூட்டையாக கட்டி டிராக்டர், மினிலாரி மூலமாக கடத்திச்சென்று விற்கின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள திட்டக்குடி தாலுகாவில் நடக்கும் கனிமவள திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடலூரில் வளையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் சத்யா வீதியில் ஜோதி லேடிஸ் சென்டர் என்ற வளையல் கடை உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி சென்றனர்.
இரவு 11 மணி அளவில் பூட்டியிருந்த வளையல் கடையிலிருந்து புகை வந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் உடனே உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு விரைந்து வந்தார். கடையைத் திறந்து பார்த்த போது தீ பற்றி எரிந்தது.
இதுகுறித்து வடலூர் போலீஸ்நிலையம் மற்றும் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தீ விபத்து நடந்த சமயத்தில் வடலூர் நகர் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே சோமகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி வாசுகி (வயது 50) இவருக்கு அம்மு கோபு என்ற 2 மகன்கள் உள்ளனர்.இவர் நேற்று மாலை வீட்டில் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது இவரது மகன்களை அதே பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் மதிவாணன் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதை பார்த்த வாசுகி இதுகுறித்து அவர்களிடம் தட்டிகேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அகஸ்டின் மதிவாணன் வாசுகியை தகாத வார்த்தையால் திட்டி கீழே தள்ளி அடித்து உதைத்தார். இதில் வாசுகி படுகாயமடைந்தார். இதுகுறித்து வாசுகி புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அகஸ்டின் மதிவாணனை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டியில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவைச் சேர்ந்த ராஜி. இவரது மனைவி ரம்யா (வயது21). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று நேற்று முன்தினம் ரம்யா மற்றும் 2 குழந்தைகள் உறவினர் வீட்டின் சுப நிகழ்ச்சிக்கு சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. ரம்யா மற்றும் 2 குழந்தைகளை அவரது கணவர் ராஜி பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று பண்ருட்டி திருவதிகை ரெயில்வே பகுதியைச் சேர்ந்த அரி கோவிந்தன். இவரது மகள் நந்தினி (24) இவர் எம்.ஏ பி.எட் படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 20-ந் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென்று காணாமல் போனார். இவரை அரிகோவிந்தன் தோழி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அரிகோவிந்தன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார் புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ரம்யா, அவரது குழந்தைகள், நந்தினி என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள் ? யாராலும் கடத்தப்பட்டாரா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் இருந்த 1½ கிலோ கஞ்சா, 18 கிலோ கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர்.
கடலூர் முதுநகர்:
வாரணாசி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி கோட்ட பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு தேவசகாயம் ஆகியோர் காலை 11 மணி அளவில், விழுப்புரம் அருகே உள்ள சேந்தனூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.
அப்போது ரெயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் 1½ கிலோ கஞ்சா ஒரு சாக்கு பையிலும், 18 கிலோ கொண்ட குட்கா பொருட்கள் ஒரு சாக்குமூட்டையிலும் இருந்தது தெரியவந்தது.
இதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து தெரியவில்லை. கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார், அதனை விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாநகராட்சியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பான சூழல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடலூர்:
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் பல கட்ட பிரச்சினைகளுக்கிடையே முதல் பெண் மேயராக தி.மு.க.வை சேர்ந்த சுந்தரி ராஜா வெற்றி பெற்று பதவி ஏற்றார். துணை மேயராக தாமரை செல்வன் வெற்றி பெற்று பதவி ஏற்றார். தொடர்ந்து பதவியேற்ற நாள் முதல் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரை செல்வன் கடலூர் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் குறிப்பு தினமும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூரில் நாளை( 23-ந் தேதி) முதல் மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைசெல்வன் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாநகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற செய்து பதவி ஏற்க செய்த முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும் , நகராட்சி துறை அமைச்சர் நேருவுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.
மேலும் கடலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே வெற்றி பெற்ற மாநகராட்சி கவுன்சிலர்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் என்னென்ன விவாதங்கள் செய்யப்போகின்றனர் உள்ளிட்ட பல்வேறு எதிர் பார்ப்புகளுடன் கடலூர் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும் கடலூர் மாநகராட்சியில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பான சூழல் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கூட்டம் நடைபெற உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.