என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா
    X
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, குட்கா

    எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்திய கஞ்சா, குட்கா பறிமுதல்- கடலூர் முதுநகர் போலீசார் நடவடிக்கை

    ரெயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் இருந்த 1½ கிலோ கஞ்சா, 18 கிலோ கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ரெயில்வே போலீசார், விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தனர்.
    கடலூர் முதுநகர்:

    வாரணாசி-ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக திருச்சி கோட்ட பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு தேவசகாயம் ஆகியோர் காலை 11 மணி அளவில், விழுப்புரம் அருகே உள்ள சேந்தனூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையில் 1½ கிலோ கஞ்சா ஒரு சாக்கு பையிலும், 18 கிலோ கொண்ட குட்கா பொருட்கள் ஒரு சாக்குமூட்டையிலும் இருந்தது தெரியவந்தது.

    இதை யார் கடத்தி வந்தது என்பது குறித்து தெரியவில்லை. கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார், அதனை விழுப்புரம் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீயிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Next Story
    ×