என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூதன முறையில் மணல் கடத்தும் கும்பல்
திட்டக்குடி அருகே நூதன முறையில் மணல் கடத்தும் கும்பல்
திட்டக்குடி அருகே நூதன முறையில் மணல் கடத்தும் கும்பலை பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே வாகையூர், ஆக்கனூர், பாளையம், இடைச்செரு வாய், கீழ்ச்செருவாய், ஆகிய கிராமங்களின் அருகே வெள்ளாற்றிலிருந்து இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆ.பாளையம் கிராமத்தில் காலனி அருகில் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை வழியில் சென்று வெள்ளாற்றில் அங்கு பல மாதங்களாக தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு அப்பகுதியில் மணல் அள்ளுவதை கண்டு அப்பகுதி இளைஞர் ஒன்று சேர்ந்து வெள்ளாற்று பகுதிக்கு கையில் உள்ள செல்போன் வெளிச்சத்தின் மூலம் சென்ற போது மணல் கொள்ளையர்கள் அவர்களை பார்த்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து ராமநத்தம் போலீசாருக்க தகவல் கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்பகுதிக்கு மீண்டும் இன்று காலையில் சென்று பார்த்த போது 100-க்கும் மேற்பட்ட மூட்டைகள் இரவு அங்கிருந்தது.
ஆனால் காலையில் மூட்டைகளில் இருந்த மண்ணை கீழே கொட்டிவிட்டு சாக்கு மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். அந்த அளவு துணிச்சலாக செயல்படும் அப்பகுதி மணல் கொள்ளையர்கள் இவர்கள் மணலை மூட்டையாக கட்டி டிராக்டர், மினிலாரி மூலமாக கடத்திச்சென்று விற்கின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியிலுள்ள திட்டக்குடி தாலுகாவில் நடக்கும் கனிமவள திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






