என் மலர்tooltip icon

    கடலூர்

    • சாலை விபத்தில் மூதாட்டி பலியானார்.
    • தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் வேப்பூர்சாலை, கோமங்கலம் பகுதி யில் உள்ள தனியார்பெட்ரோல்பங்க் அருகே, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர்சாலையில் நடந்து சென்றார். பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம்அவர் மீது மோதியது. காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில்சி கிச்சை பெற்று வந்த நிலையில், இறந்தார். கடலுார் அரசு மருத்துவ மனை சவகிடங்கில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவர் நீலநிறபுடவை அணிந்திருந்தார். அவர், யார் என, தெரியவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக் கின்றனர்.

    • நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் கூறினார்.
    • டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது . நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் , நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் , நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெண்கல உருவ சிலை சொந்த செலவில் அமைப்பதற்கு அரசு அனுமதிகோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் . கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    ஆனந்தராஜ் ( சுயே ):-நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலையுடன் , டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பன்னீர்செல்வம் (1 -வது வார்டு) விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்:- இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார் . இக்பால் ( ம.ம.க ):- எங்கள் 8 - வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் , கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . முத்தமிழன் ( தி.மு.க ):- ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் எங்கள் சரவண புரம் பகுதியில் வருவதற்கு சிரமமாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    சத்யா ( சுயே ):- ராமு வீதியில் சாலை பணி தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புனிதவதி ( அ.தி.மு.க ):- நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 , 10 , 11 ஆகிய வார்டுகளில் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாருக் உசேன் ( சுயே ) - நெல்லிக்குப்பம் நகராட்சியில் துப்புரவு பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மலையான் ( அ.தி.மு.க ) எங்களது 12 - வது வார்டில் சமுதாய கழிப்பறை சீர்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர் . இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் , பொறியாளர் பாண்டு , இளநிலை உதவியாளர் பாபு மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் . முன்னதாக நகராட்சி மேலாளர் அண்ணாதுரை , துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .

    • மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது துணைத் தலைவர் சாதிகா, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி பேசுகையில், மழைக்காலங்களில் கரையான் குட்டையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தூர்வாரி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது மேலும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி பகுதியில் குண்டும் குழியுமான சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேரூராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்வதாக தகவல்
    • அதிகாலையில் இருந்தே ஆண்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் இ சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் பணிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வருமான சான்றிதழ்' மற்றும் இருப்பிட சான்றிதழ் விரைவாக வாங்க முடியாத நிலை உள்ளது. அதிகாலையில் இருந்தே ஆண்கள் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

    இந்த இ சேவை மையத்தில் தற்பொழுது டோக்கன் என்ற முறையில் இடைத்தரகர்களும் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து வருவதாக தெரிகிறது.

    பொதுமக்களின் நலன் கருதி மிக விரைவாக இந்த ஆதார் சேவை மையத்தை செயல்படுத்த வேண்டுமென்று காட்டுமன்னார்கோவில் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • முதியவரை கொன்ற கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
    • தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கடலுார்:

    கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே டி. பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், (வயது60.) இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், என்பவருக்கும்வீட்டின் அருகே உள்ள மினிடேங்க் தண்ணீர் விவகாரத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.

    கடந்த 14.3.2020 அன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கனகராஜ் மற்றும் அவரது மனைவியான செல்வி, ஆகியோர் தாமரைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஞானமணி மீது தாக்குதல் நடத்தினர்.

    இதில் காயமடைந்து மயங்கி விழுந்த தாமரைச்செல்வனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததை உறுதி செய்தனர்.இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடந்த2 ஆண்டுகளாக விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
    • கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமைதாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கலால் உதவி ஆணையர் லூர்துசாமி, கலால் கோட்ட அலுவலர்கள் மகேஷ், ஜெயசீலன், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் கடத்தினால் கடும் தண்டனைக்குரியது என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    பின்னர் பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது. இதில் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, கலால்த்துறை ஆய்வாளர்கள் பாஸ்கர், வனஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மகளிர் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, புனித வளனார் கல்லூரி பேராசிரியர் சந்தானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
    • விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்க தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொழில் வணிகத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக வியாபாரம் தொடர்பான தொழில்களுக்கு மட்டும் 5 லட்சம் வரையிலான திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் தொகை வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.

    கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் குறைந்த பட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

    அதிகபட்சம் பொதுபிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்இதர பிரிவினர், பெண்கள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தில் வருகிற ஜூலை 6-ந் தேதி காலை 10 மணியளவில் இக்கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்நடை பெறவுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் , பழங்குடியினர், சிறுபான்மையினர், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கடலூர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது

    • பண்ருட்டி அருகே கெடிலம் ஆறு பகுதியில் மாட்டுவண்டியில் மணல் கடத்தப்பட்டது.
    • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

    கடலூர்:

    கெடிலம் ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்ந ந்தகுமார்தலைமையில் போலீசார் நேற்றிரவுதீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை நிறுத்தினர்.

    போலீசாரை கண்டவுடன்மாட்டு வண்டியை ஓட்டிவந்தவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு ஓடினார். உடனே போலீசா ர்வண்டி சோதனைசெய்தனர். அதில் அரசுஅனுமதியின்றி திருட்டு தனமாக அரையூனிட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.உடனடியாக மாட்டுவண்டியை பறிமுதல் செய்து தப்பி ஓடியகாந்தலவாடியை சேர்ந்த மாயவனைதேடி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தில் 2 பேர் திடீர் மாயமானார்.
    • ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர்.

    கடலூர்:

     பண்ருட்டி அருகே வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது47). இவரது மனைவி அமுதா (42). இருவருக்கும் திருமணமாகி 15 வருடம் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று சிவக்குமார் சலூன் கடைக்கு சென்று வருகிறேன், என்று கூறிவிட்டு சென்ற வர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர்பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக சிவக்குமார் தாய்ஜெயகாந்தி முத்தாண் டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமாரை தேடி வருகின்றனர்.

    இதனிடையே ஜெயகாந்தியின் கடைசி இருமகன்களுக்கு இடையே சம்பவத்தன்றுதகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் ஒருவரை யொருவர் தாக்கி கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கடைசி மகனான சுரேஷ்குமார் மாயமானார். இதுகுறித்து தந்தை செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர் மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி பண்டரக்கோட்டை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.

    தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாநகராட்சியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி தீவிரம்: அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார்.
    • பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து 25.5 லட்சம் மதிப்பிலான நவீன உயர் சிகிச்சை கருவிகள், மற்றும் 5.5 லட்சம் மதிப்பிலான பேரிடர் கால நவீன காணொளி காட்சி கட்டுப்பாட்டு அறை மற்றும் நோயாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உபகரணங்கள் வழங்கியும், கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தும் பேட்டரி கார் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடலூர் அரசு மருத்துவமனைக்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 31 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறை மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் என்.எல்.சி சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து நோயாளிகள் செல்வதற்காக பேட்டரி கார் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி பகுதியில் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு அமைப்பது தொடர்பாக நிலத்தை கையகப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த பத்தாண்டு காலமாக குப்பை கிடங்கு இல்லாதது குறித்தும், குப்பைகள் மலைபோல் குவிந்து இருந்தது குறித்தும் யாரும் கேட்க திராணி இல்லாமல் இருந்து வந்தனர்.

    ஆனால் மாநகராட்சி தேர்தல் நடைபெற்று புதிதாக பொறுப்பேற்று 3 மாதமான நிலையில் மேயர், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குப்பை கிடங்குகள் அமைப்பதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முடிவடையாத நிலையில் இருக்கும் பாதாள சாக்கடை பணியை மழைக்காலங்கள் தொடங்குவதற்கு முன்பு கட்டி முடித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி வடிகால் வாய்க்கால் சரி செய்து கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் வாரந்தோறும் ஒவ்வொரு பகுதியாக சென்று கழிவுநீர் மற்றும் குப்பைகள் அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் பாலசுப்ரமணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் பாபு வரவேற்றார். விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மீரா, மாநகராட்சி திமுக செயலாளர் ராஜா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சாய் லீலா, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், மாநகராட்சி மண்டல குழு தலைவர் கள் பிரசன்னா, இளையராஜா, சங்கீதா, சங்கீதா செந்தில் குமார், ஒன்றிய தி.மு.க. செயலாளர் தனஞ்செயன், வி.ஆர். அறக்கட்டளை விஜயசுந்தரம், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி, செந்தில் குமாரி இளந்திரையன், சுபாஷிணி ராஜா , சுதா அரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடி அருகே ரேசன்கடையில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ரேசன் கடை ஊழியர்கள் காலதாமதமாக கடை திறப்பதால் தங்களது அன்றாட பணி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் .

     கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவடி கிராமத்தில் ரேசன் கடை திறக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் ரேசன் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில் நாங்கள் காலை நேரத்தில் ரேசன் பொருட்களை வாங்கி விட்டு பின்பு கூலி வேலைக்கு செல்ல வேண்டும். விவசாய வேலைக்கு செல்லவேண்டும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டும் இது போன்ற பல்வேறு பணிகளில் இருக்கிறது. ஆனால் ரேசன் கடை ஊழியர்கள் இதுபோல் தொடர்ந்து காலதாமதமாக கடை திறப்பதால் தங்களது அன்றாட பணி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் . மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×