கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டம்

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.
2 மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை  படத்தில் காணலாம்.
2 மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர் மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி பண்டரக்கோட்டை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.

தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com