search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே ரேசன்கடையில் பெண்கள் முற்றுகை- தர்ணா
    X

    ரேசன்கடை முன்பு தர்ணாபோராட்டம் செய்த பெண்களை படத்தில் காணலாம்.

    திட்டக்குடி அருகே ரேசன்கடையில் பெண்கள் முற்றுகை- தர்ணா

    • திட்டக்குடி அருகே ரேசன்கடையில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ரேசன் கடை ஊழியர்கள் காலதாமதமாக கடை திறப்பதால் தங்களது அன்றாட பணி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவடி கிராமத்தில் ரேசன் கடை திறக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் ரேசன் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெண்கள் கூறுகையில் நாங்கள் காலை நேரத்தில் ரேசன் பொருட்களை வாங்கி விட்டு பின்பு கூலி வேலைக்கு செல்ல வேண்டும். விவசாய வேலைக்கு செல்லவேண்டும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டும் இது போன்ற பல்வேறு பணிகளில் இருக்கிறது. ஆனால் ரேசன் கடை ஊழியர்கள் இதுபோல் தொடர்ந்து காலதாமதமாக கடை திறப்பதால் தங்களது அன்றாட பணி பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர் . மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×