என் மலர்tooltip icon

    கடலூர்

    • சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும்.
    • தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும்.

    கடலூர்:

    மாநிலங்களில் 20 வகை நிரந்தர பணியிடங்களில் தனியாருக்கு வழங்கிடும் அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலி, கான்ட்ராக்ட், சுய உதவி குழு என பல ஆண்டுகளாக பணி புரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களை நிரந்தரம் செய்திட வேண்டும். கடலூர் மாநகராட்சியில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த கூட்டுறவு சங்கத்திற்கு கட்ட வேண்டிய தொகை 2 கோடி 31 லட்சம் உடனடியாக செலுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும்.
    • அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    கடலூர்:

    சி.ஐ.டி.யு மற்றும் அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு உடனடியாக பணம் மற்றும் டி.ஏ வழங்கிட வேண்டும். அதிகாரிகள் தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை சிறப்பு தலைவர் பாஸ்கரன் தலைமையில் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கடலூர் மண்டல அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பொதுச் செயலாளர் முருகன் கண்டன உரை ஆற்றினார்.

    இதனை தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் கடலூர் போக்குவரத்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    • துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர், நவ.22-

    வங்ககடலில் குறைந்த காற்றழுத்தம் வலுவிழந்து ள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் சுமார் 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவ ர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். நெடுங்கடல் தூரத்தில் மீன்பிடிக்கும் மீனவர்கள் உடனே கரை திரும்பவேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்து றை அதிகாரிகள் 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரி க்கை அறிவிப்பு விடுத்து ள்ளனர். இதனைத்தொ டர்ந்து கடலூர் மாவட்ட த்தில் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று காலை யும் அவர்கள் வீட்டி லேயே முடங்கினர். இதனால் துறைமுக பகுதி யில் படகுகள் ஓய்வெடு த்தன. வானிலை ஆய்வு மையம் அறிவித்தப்படி கடலில் சீற்றம் அதிகம் உள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை அறிவித்தப்படி இன்று காலை முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியான திருப்பாதிரிபுலியூர், மஞ்ச க்குப்பம், செம்மண்டலம், பாதிரிகுப்பம், துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் அலு வலகம், பள்ளிக்கு செல்வோர் குடைபிடித்தப்படி சென்றதை காண முடிந்தது.

    • கடலூரில் கடலில் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
    • மீனவள த்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது. இதையொட்டி கடலோர பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், வழக்கத்தை விட கடல் அதிகமாக சீற்றத்துடன் காணப்படும் என்றும், கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூரில் கடலில் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. எனவே, நேற்று மதியம் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு புயல் தூரத்தில் உள்ளதை காட்டுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமு கத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலை யால் துறைமுகம் அச்சுறுத்த ப்படும் என்பதை தெரிவி க்கிறது.  இதை யொட்டி மீனவள த்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ரோந்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறையினரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    • சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
    • 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். அதே பகுதியை சேர்ந்த சிவமணி (வயது 24) கூலித்தொழிலாளி. இவர் இளம் பெண்ணிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அவரை ஏமாற்றி கடந்த மார்ச் 16-ம் தேதி பண்ருட்டி திருவதிகை கோவிலில் சிவமணி இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    இதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளம் பெண்ணை சிவமணி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து சிவமணி அந்த பெண்ணை சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிவமணி பலமுறை இளமை பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண்ணை சிவமணி சிகிச்சைக்காக சென்னையிலிருந்து கடலூருக்கு அனுப்பி வைத்துள்ளார். சிவமணி வராததால் சந்தேகம் அடைந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மேலும் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.

    மேலும் 16 வயதில் கர்ப்பமானதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வள்ளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சிவமணியை வலை வீசி தேடி வருகின்றனர். 

    • வீட்டில்ஆர்த்தி சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.
    • நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி செட்டி பட்டறை பகுதியைச் சேர்ந்த கதிர் காமன் மகள் ஆர்த்தி (வயது 23) கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வீட்டில் இவரது சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடைபெற்றது.

    நேற்று மாலை வீட்டில் இருந்த ஆர்த்தி பக்கத்து வீட்டில் உள்ள வாலிபருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார்.

    புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆர்த்தியின் வீட்டின் அருகில் இருந்த வாலிபரான வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் ஆர்த்திக்கும் இடையில் முன்னதாகவே காதல் இருந்து வந்ததும். அதனால் அவர்கள் காதலித்து வந்ததும் தெரியும் வந்தது.

    தற்போது வீட்டில் ஆர்த்திக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதை கண்டு ஆர்த்தி வினோத் குமார் உடன் வீட்டை விட்டு சென்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.
    • புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நாகவதி அணை அருகேவுள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி பத்மா. சில வருடங்களாக கேரள மாநிலம், கொச்சி அருகே உள்ள பொன்னுருன்னி பகுதியில் வசித்து வந்தார். கடவந்திரா என்ற இடத்தில் லாட்டரி விற்று வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதி லாட்டரி விற்பனைக்காக சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கொச்சி போலீசார் விசாரித்தனர். இதேபோல், கொச்சி காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் (50) என்ற பெண்ணும் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனார்.

    2 பேரின் செல்போன் எண்களை வைத்து நடத்திய விசாரணையில், அவர்கள் கடைசியாக பத்தனம்திட்டா அருகே திருவல்லா என்ற இடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் இருவரும் நரபலிக்காக கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கொச்சியை சேர்ந்த முகமது ஷாபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இதனை தொடர்ந்து பத்மாவதியின் சொந்த ஊரான எர்ரப்பட்டி கிராமத்திற்கு பெரும்பாலை போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டி எடுத்த கோட்டயம் போலீசார் பத்மாவின் உடலை அடையாளம் காட்ட அவரது உறவினர்களை வரவழைத்தனர்.

    அவர்கள் அங்கு சென்று அடையாளம் காட்டினர். இதையடுத்து பல்வேறு சட்டரீதியான நடவடிக்கைகள் முடிந்து இன்று பத்மாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பத்மாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு நாளை அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் கூறியுள்ளனர்.

    • ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.
    • மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விழுப்புரம் ஜி.ஆர். பி. நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண்மேல் பட்டாம்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்நேற்று தனது அண்ணனுடன் பஸ்சில் ஏறினார். அப்போது விழுப்புரம் செல்லும் போது அண்ணன் முன்பக்கமும், மாணவி பின் பக்கமும் உட்கார்ந்து சென்றனர். ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.

    இவரை ஓடும் பஸ்சில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    • கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர்.
    • ஒருசில பகுதிகளில் அலை அதிகமாக இருந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது புயலாக உருவாகி வருகிறது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லக்கூடாது. ஏற்கனவே கடலுக்கு சென்றிருந்தால் மீனவர்கள் அனைவரும் உடனே கரை திரும்ப வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதைத்தொடர்ந்து கடலூர் மீன் வளத்துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 49 மீனவ கிராமங்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளனர். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று காலை முதலே கடலில் கடும் சீற்றம் இருந்தது. ராட்சத அலைகள் மேல்எழும்பி கரையை முட்டிமோதி செல்கிறது. இதனால் மீனவர்கள் கரையோரம் நிறுத்தியிருந்த படகுகளை அவசர அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

    ஒருசில பகுதிகளில் அலை அதிகமாக இருந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரித்தப்படி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளதை உணர்த்துகிறது.

    எனவே மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
    • திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுக பகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    கடலூர், நவ.20-

    வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. எனவே கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலின் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காலையிலும் தாழங்குடா, தேவனா ம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.

    எனவே மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து மேடான பகுதிக்கு கொன்டு சென்றனர். தொடர்ந்து கடல் சீற்றம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கடலோர கிராம மீனவர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகம் உள்ளது. எனவே போலீசார் அங்கு ரோந்து சென்று கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுகபகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறி ச்சோடி காணப்பட்டது.

    • 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    ×