என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Storm Cage Ascendant"

    • கடலூரில் கடலில் சீற்றம் அதிகம் காணப்படுகிறது.
    • மீனவள த்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது. இதையொட்டி கடலோர பகுதிகளில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், வழக்கத்தை விட கடல் அதிகமாக சீற்றத்துடன் காணப்படும் என்றும், கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடலூரில் கடலில் சீற்றம் அதிகம் காணப்படுகிறது. எனவே, நேற்று மதியம் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு புயல் தூரத்தில் உள்ளதை காட்டுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமு கத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திடீர் காற்றோடு மழை பெய்யக்கூடிய வானிலை யால் துறைமுகம் அச்சுறுத்த ப்படும் என்பதை தெரிவி க்கிறது.  இதை யொட்டி மீனவள த்துறையினர் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ரோந்து வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறையினரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

    ×