என் மலர்
கடலூர்
- மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
கடலூர்:
தென்மேற்கு வங்க க்கடலில் மையம் கொண்டி ருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி மறு உத்தரவுவரும் வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது கடல் பகுதியில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. மேலும் கடல் சீற்றம் காரணமாக சுமார் 30 அடி வரை கடல் அலை முன்னோக்கி வந்து செல்கின்றது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கியது. இதனை தொடர்ந்து நள்ளிரவு மற்றும் காலை வரை கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், கூத்தப்பாக்கம், திருவந்திபுரம், கோண்டூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டா ம்பாக்கம், நடுவீரப்பட்டு, சிதம்பரம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது மார்கழி மாதம் என்பதால் இரவு முதல் பனி இருந்த வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவும், குளிரும் இருந்து வருகின்றது. தற்போது கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ள தால் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவ தோடு, குளிர்ந்த காற்று வீசி வருகின்றது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மழை காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிறிஸ்தவ ஆலை யங்களுக்கும், உறவினர்கள் வீடுகளுக்கும் செல்ல முடி யாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வந்ததும் காண முடிந்தது. மேலும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடைப்பிடித்த படியும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்த படியும் சென்ற தையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு- கடலூர் - 12.3, பரங்கிப்பேட்டை - 4.2, அண்ணாமலை நகர் -3.5, சிதம்பரம் - 2.5, கலெக்டர் அலுவலகம் - 0.2. மொத்தம் - 22.70 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது.
பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பே ட்டை, காடாம்புலியூர் ஆகிய இடங்களில் இன்று காலை திடீர் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ள நீராகபெருக்கு பெருக்கெடுத்து ஓடியது.வாகன ஓட்டிகள் சாலை களில் ஊர்ந்து சென்றனர். கடந்த 10 ஆண்டுகாலமாக சாலை பணியை நடக்கா ததால் பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி- கும்பகோணம் சாலை முற்றிலும் சேதமடைந்து மழையில் சேரும் சகதியமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள்மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
- தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம்.
- மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று வீராணம் ஏரியாகும். இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது.
காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அதிலிருந்து தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம். இது தவிர மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.
அதன்படி, தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக 14.95 கனஅடி நீர் வருகிறது. மேலும் கிளை வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளவான 47.50 அடியை நிரப்பாமல் ஏரியின் பாதுகாப்பு கருதி 46.50 அடி நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வீராணம் ஏரி இந்த ஆண்டு 6-வது முறையாக நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்குமேயானால் வெள்ளியங்கால் ஓடை, வி.என்.எஸ். மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். வீராணம் ஏரியினை சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும்.
- பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு உள்ளடக்கிய 1,000 ரூபாய் பணமும், அரிசி, சர்க்கரை பொங்கல் தொகுப்பும் வருகிற ஜனவரி 2-ந்ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, வெல்லம், முந்திரி மற்றும் பன்னீர் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கினர்.
ஆனால் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இல்லாததால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கடலூர் அடுத்த குள்ளஞ்சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பு இணைக்க கோரி திடீரென்று சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் அதி காரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சாப்பாடு செய்து சாலையில் போட்டு உணவு அருந்தி நூதன போராட்டத்தில் ஈடு பட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில்பெரும் பரபரப்புஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அம்பலவாணன் பேட்டை கிராம நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்ப ட்ட விவசாயிகளின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தால் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
- தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
- இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி நகர அ.தி.மு.க.வில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர். பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி 4முனை சந்திப்பில் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக தாக்கிப் மோதிக்கொண்டனர் .இதனால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு பிரிவுகளும் ஏக வசனத்தில் பேசியவாறு கடந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமும் நிலவியது.
- மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
- பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி அருகே சின்னப்பே ட்டைதோப்புதெருவை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி மின்னல்கண்ணி (வயது 60). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வாலிபர் இவரிடம் குடிக்க தண்ணீர்கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்கஉள்ள சென்றபோதுவீட்டின் உள்ளே இருந்த மணி பர்சில் பணம், கவரிங் செயினை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
மூதாட்டி சத்தம் போட்டு அருகில் இருந்தவர்கள் மேற்படி நபரை பிடித்துபுதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் இவரிடம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையி ல்விழுப்பு ரம் அருகே விக்கிரவண்டி பழையகருவாச்சி, இந்திரா நகரைசேர்ந்த அமரன் (26)என்பது தெரியவந்தது. இவன்பல இடங்களில் தனியாக இருக்கும் பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகை,பணம் திருடியதுதெரிய வந்தது. இதனைதொடர்ந்து இவனை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளது.
- 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தாழ நல்லூர் கிராமத்தை ச்சேர்ந்த பொதுமக்கள் 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் வழங்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது 32 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பட்டியல் தயாராகி உள்ளதாக தகவல் அப்பகுதி மக்கள் மத்தியில் பரவியது. இதில் அதிருப்தியடைந்த அப்பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டக்குடி தாசில்தார் கார்த்திக்கை நேரில் சந்தித்து தங்கள் முறையாக பட்டியலை தயார் செய்து அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் கார்த்திக் உறுதியளித்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தாழநல்லூர் கிராமத்திலேயே தகுதியுடைய பயனாளிகள் வீடு இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வாழ்கிறோம். ஆனால் அதிகாரிகள் சிலர் வெளியூரைச்சேர்ந்த சிலருக்கு எங்கள் ஊரில் பட்டா கொடுக்க முயற்சி ப்பதாக தெரிந்ததால் தாசில்தாரை சந்தித்து முறையிட்டோம் என தெரிவித்தனர். திடீரென தாலுக்கா அலுவலகத்தில் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- இரண்டு கார்களும் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
- ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழ ந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருதாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் ஷேக்அப்துல்லா (வயது 34) கார் டிரைவர்.நேற்று ஷேக் அப்துல்லா விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்த ராஜி (61) என்பவரை புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று விட்டு மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். வடலூர் பெத்தநாயக் கன்குப்பம் விஷ்ணுகுமார் (27) என்பவர் தனது காரில் நண்பர் கஞ்சநாத ன்பேட்டையை சேர்ந்த அஜித் (24) என்பவருடன், வடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இரண்டு கார்களும் வடலூருக்கும், குறிஞ்சிப்பா டிக்கும் இடையே ஆண்டிக்குப்பம் மீன் மார்க்கெட் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் ஷேக் அப்துல்லா, ராஜி, விஷ்ணுகுமார், அஜித் ஆகிய 4 பேரும் காயமடைந்து குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்க்கப்பட்டனர். இதில் ஷேக் அப்துல்லா குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். காயம் அடைந்த ராஜி புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியிலும், விஷ்ணுகுமார் கடலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அஜித் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்து குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு உழவன் பேரியக்கம் மாநில செயலாளர் குறிஞ்சிப்பாடி குமரகுரு பேசுகையில் 2016 ஆம் ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்கப்படுகிறது. இரண்டு அடி முதல் வழங்கப்பட்ட கரும்பு கடந்த ஆண்டு முழு கரும்பாக வழங்கப்பட்டது. இதனால் விவசாயிகள் அரசை நம்பி கரும்பை சாகுபடி செய்து வந்தனர். இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று எதிர்பார்த்து பண்ருட்டி கடலூர் சிதம்பரம் நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கரும்பை அரசு கொள்முதல் செய்யவில்லை. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்க வேண்டும்.
இல்லையெனில் விவசாயிகள் விஷம் குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை. அரசு கொள்முதல் செய்தால் மட்டுமே முழுமையாக விற்பனை செய்ய முடியும். ஆகையால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றார். நல்லூர் சுப்பிரமணி:-எங்கள் பகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்ந்த பலருக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை . இதனால் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மங்களூர் மகாராஜா:- திட்டக்குடி வெலிங்டன் ஏரியை கட்டிய வெலிங்டன் பிரபுவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.
முன்னதாக கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயி ராஜசேகர் திடீரென்று இறந்ததால் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.
- சந்தியா நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
- சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த வரகூர்பேட்டை ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவடிவேல். இவரது மகள் சந்தியா (வயது 19). நர்சிங் படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடிக் கொண்டிருக்கிறார். வழக்கம் போல நேற்றிரவு வீட்டில் தூங்கியவர், காலையில் காணவில்லை. இது குறித்து சந்தியாவின் தாயார் உமாதேவி அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணமல் போன சந்தியாவை தேடி வருகின்றனர்.
- வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.
கடலூர்:
வங்க கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் வங்க கடலில் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள்.
கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 30 முதல் 40 அடி வரை கடல் அலை எழும்பி கரைக்கு முன்னோக்கி வருகிறது. கடல் சீற்றம் அதிகரிப்பு காரண மாக கடலூர் மாவட்ட மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். தாழங்குடா பகுதியில் படகுகளை நிறுத்துவதற்கு என்று தனியாக இடம் இல்லை. இவர்கள் கடற்கரை யோரம் படகுகளை நிறுத்தி வருகிறார்கள். கடல் சீற்றம் காரணமாக தங்களது படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் கடல் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை சார்பில் அறுவுறுத்தப்பட்டுள்ளது.
- பண்ருட்டி பகுதிகளில் ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
- உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
கடலூர்:
பண்ருட்டியில் லாட்ஜ்களில்காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சிறப்புச்சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
- மூலக்குப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
- சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூலக்கு ப்பம் கிராம த்தில் இந்து சமய அறநிலை யத்துறைக்கு சொந்த மான திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலு க்கு சொந்த மான 2 ஏக்கர் நிலம் குத்தகை விடுவதில் இருதரப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்அங்கு பதட்டம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி னார் .பேச்சுவார்த்தையில் சமூகத் தீர்வு ஏற்பட்டதால் பதட்டம் தணிந்தது.






