பண்ருட்டியில் அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.
பண்ருட்டி 4 முனை சந்திப்பில் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி 4 முனை சந்திப்பில் அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Published on

கடலூர்:

பண்ருட்டி நகர அ.தி.மு.க.வில் நகர செயலாளர் தாடி முருகன் தலைமையில் ஒரு அணியினரும் நகர துணை செயலாளர் மோகன் தலைமையில் ஒரு அணியினரும் தனி தனியாக செயல்பட்டு வருகின்றனர். பண்ருட்டி நகர அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி 4முனை சந்திப்பில் இன்று எம்ஜிஆர் நினைவு நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் இரண்டு அணியினருக்கும் திடீர்மோதல் ஏற்பட்டது.இரண்டு பிரிவினரும் ஒருவரை ஒருவர் காரசாரமாக தாக்கிப் மோதிக்கொண்டனர் .இதனால் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் இரண்டு பிரிவுகளும் ஏக வசனத்தில் பேசியவாறு கடந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமும் நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com