என் மலர்
கோயம்புத்தூர்
- கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கப்பட்டது.
- அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில், கோபனாரி, ஆலங்கண்டி, ஆலங்கண்டி புதூர், சீங்குழி, பட்டி சாலை, செங்குட்டை, மேல்பாவி, குழியூர், ஊக்கையனூர், ஊக்கப்பதி,மொட்டியூர், நீலாம்பதி உள்ளிட்ட பல்வேறு மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அடர் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டு 15-வது நிதி குழு மானியத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆலங்கண்டி பகுதியில் அமைக்க திட்டமிட்டது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் மேல் நிலை நீர்தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் இப்பணியை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குடி தண்ணீருக்கு அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோபனாரி பகுதியைச்சேர்ந்த மலைவாழ் மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.10 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போடப்பட்டு அப்பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் தாங்கள் குடிநீருக்காக வனப்பகுதிக்குள் செல்லும் போது மனித-வனவிலங்குகள் உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.தோலம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயா செந்தில் கூறும் போது, பணிகளை எடுத்த ஒப்பந்ததாரரிடம் இருந்து சப் காண்ட்ராக்ட் எடுத்த நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளை முடிக்காமல் இருந்தார். இதனால் தற்போது வேறு ஒப்பந்ததார் மூலம் இப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. தற்போது ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் தோலம்பாளையம் புதூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.அப்பணிகளை முடித்து அடுத்த வாரத்திற்குள் ஆலங்கண்டி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணிகள் தொடரும் என்றார்.
- நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது.
- சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசல் காணப்படுகிறது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. தற்போது ஊட்டியில் குளுகுளு கோடை சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசலும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது. எந்த சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்லும் வாகனங்கள் பாரத் பவன் ரோடு-ரெயில் நிலையம் ரோடு-சிவம் தியேட்டர்-சக்கரவர்த்தி சந்திப்பு வழியாக செல்லவேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர் பாலப்பட்டி வேடர் காலனி-சிறுமுகை ரோடு-ஆலங்கொம்பு சந்திப்பு-தென்திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.
நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல்-சந்தக்கடை-மோத்தைபாளையம்-சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு-தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேட்டுப் பாளையம்-சிறுமுகை இடையே ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சத்தியமங்கலம் பண்ணாரி-ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு-தென் திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
கோவை:
கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று நள்ளிரவு ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்த மாடசாமி (வயது27), அவரது தம்பி சுபாஷ் (25), அதே ஊரைச் சேர்ந்த பசும்பொன் (27) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மூன்றடைப்பை சேர்ந்தவர் முத்து மனோ (28) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அவர்கள் கூலிப்படையாக கோவைக்கு வந்தார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.
- கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,:
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு திருமணம் செய்து வைப்பதற்கு எனது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபருடன் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் செப் ஆக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு இந்த ஆண்டு நவம்பர் 13-ந் தேதி நிச்சயம் செய்வது என முடிவு செய்தனர். அதன் பின்னர் நாங்கள் செல்போன் மூலமாக பேசி பழகி வந்தோம்.
இந்தநிலையில் எனது வருங்கால கணவர் என்னை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11-ந் தேதி ஆனைக்கட்டிக்கு அழைத்து சென்றார். அங்குள்ள தங்கும் விடுதிக்கு நாங்கள் சென்றோம். அங்கு வைத்து அவர் மது குடித்தார். அப்போது என்னையும் மது குடிக்க வற்புறுத்தினார். ஆனால் நான் மது குடிக்க மறுத்து விட்டேன்.
அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர் என்னை சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து நாங்கள் வீட்டிற்கு காரில் புறப்பட்டோம். அப்போது வரும் வழியில் அவர் காரை நிறுத்தினார். பின்னர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். இதுகுறித்து நான் செல்போன் மூலமாக அவரிடம் தெரிவித்தேன். உடனடியாக என்னை திருமணம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் இப்போது என்னால் உன்னை திருமணம் செய்ய முடியாது. எனவே நீ பப்பாளி, அன்னாச்சி பழங்களை சாப்பிட்டு கருவை கலைத்து விடு என கூறினார். இதனை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு அவர் சொன்னபடி கருவை கலைத்தேன்.
அதன்பிறகு அவர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுத்தால் தான் உன்னை திருமணம் செய்வேன் என கூறி விட்டார். இதற்கு அவரது தாய், தந்தை ஆகியோரும் உடந்தையாக இருந்தனர். எனவே என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுக்கும் அவர் மீதும், அவரது பெற்றோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நரேஷ் சிங் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது.
கோவை,
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார். அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை, -
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடி க்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முக கவசம் அணி வேண்டும், சமூக இடைவெளியை பின் பற்ற வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறு த்தப்பட்டு வருகிறது.
இருமல், காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 381 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியானது.
இதில் கடந்த சில மாதங்களாக இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் கொரோ னாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 42 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்தனர். தற்போது பாதிப்பு காரணமாக 274 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- அருண்பாரதி ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
- அருண்பாரதிக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது
கோவை
கோவை நம்பர் 4 வீரபாண்டியை அடுத்த ஆர்.எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருண்பாரதி (வயது24). இவர் ஷேர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனமு டைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று அருண்பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனது வீட்டிற்க்கு சென்று வெகு நேரம் ஆகியும் வெளியே வரவி ல்லை. இதனால், சந்தே கமடைந்த உறவினர்கள் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. பின்னர் அருகில் இருந்த வர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பெரியநா யக்க ன்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. தகவலறிந்த போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மிகுந்த மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- தனிமனித இடைவெளியையும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கோவை
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்ச ரிக்கையாக தமிழகம், புதுவையில் உள்ள ஐகோர்ட்டுகள், கீழமை நீதிமன்றங்களில் இன்று முதல் முக கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
அதன்படி நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்காடிகள், வக்கீல்கள் உள்ளிட்டோர் முக கவசம் அணிந்து கோர்ட்டுக்கு வர அறிவுறு த்தப்பட்டது. மேலும் தனிமனித இடை வெளியை கடைபிடிக்கவும், அடிக்கடி கைகளை கழுவவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம் கோர்ட்டுகளிலும் இன்று கோர்ட்டுக்கு வந்த ஊழியர்கள், வக்கீல்கள், பொதுமக்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.
முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கப்பட்டு அதனை அணிந்து கோர்ட்டுக்குள் வர உத்தரவிடப்பட்டது.
கோவையில் கொரானா நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களுக்கு செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதார த்துறை யினர் அறிவுறுத்தி யுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த நோய்த் தொற்று பரவல் தற்போது 11.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 40-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தற்போது 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொ ற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர்.
நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏற்கனவே மருத்துவ மனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் முகக் கவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட கட்டுப்பாட்டு வழிமுறைக ளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால், கோவையில் பஸ் நிலையங்கள், ரெயில்நிலையம், சந்தைகள், வணிக நிறுவனங்களுக்கு செல்பவர்களில் பெரும்பா லானோர் முகக் கவசம் அணிவதில்லை. ஏற்கனவே நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாட்டு வழிமுறை களை பின்பற்றாமல் அலட்சி யமாக செயல்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம், இல்லா விட்டாலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஆற்றின் இரு கரைகளிலும் 20-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன.
- தண்ணீர் இன்றி குளங்கள் விளையாட்டு மைதானங்களாக மாறின.
கோவை, -
மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு கோவையில் ஆற்றின் இரு கரைகளிலும், 20-க்கும் மேற்பட்ட குளங்களை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
பருவ காலங்களில் கிடைக்கும் மழைநீரை குளங்களில் சேகரித்து வைத்து ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குளங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்குப்பின் தற்போது வரை பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழைப்பொழிவு இல்லாத தால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், நொய்யலின் இரு கரைகளி லும், அமைந்துள்ள குளங்க ளில் தண்ணீர் இருப்பு குறைந்து மைதானங்கள் போல காட்சியளிக்கின்றன.
குறிப்பாக தொண்டா முத்தூர் வட்டாரங்களில் உள்ள உக்குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், கோளரம்பதிகுளம், சொட்டையாண்டி குட்டை, உள்ளிட்ட குளங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் காணப்படுகிறது. தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் இருக்கும் நீரும் வேகமாக ஆவியாகி வருகிறது. இதனால் பெரும்பாலான குளங்களில் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்துக்கும் கீழ் நீர் இருப்பு குறைந்துள்ளது. இதனால், குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன.
பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளதால் குளங்க ளின் நீர் வற்றியுள்ள பரப்புகளில் சிறுவர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளை யாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. இதேபோல ஆழியார் அணை நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது.
- 14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- விக்னேஷ் சிறுவனை பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார்.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ் (வயது 27) என்பவர் சிறுவனை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டினர்.இதனை தொடர்ந்து விக்னேஷ், சிறுவனின் வாயில் பேப்பரை வைத்து அடைத்தார். பின்னர் அவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனையடுத்து விக்னேஷ் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 18 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
- மாணவி பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பரா ம்பாளையத்தை சேர்ந்தவர் 18 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஆனைமலையை சேர்ந்த பவின் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்பு மூலமாக பாடம் கற்க வைத்தனர். ஆனாலும் மாணவி பவினுடனான காதலை தொடர்ந்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் தனது காதலனுடன் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் தங்களது மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் மாணவியை தேடினர். அப்போது தனது காதலன் வீட்டில் உள்ள மொட்டை மாடியில் மாணவி இருப்பது தெரிய வந்தது. போலீசார் மாணவியை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற பவினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
- 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன.
கோவை,
கோவை மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கி னார். தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-
தமிழ்நாடு அரசின் சார்பில் கோவை மாவட்டத்தில் செய்தி-மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்ப ட்டு வருகிறது. இந்த ஆண்டு அரசு பொருட்கா ட்சியானது கோவை மாநகராட்சி, சிறைச்சாலை அணிவகு ப்பு மைதான த்தில் இந்த மாதம் இறு தியில் தொடங்கப்பட்டு 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.
இந்த பொருட்கா ட்சியில் செய்தி -மக்கள் தொடர்புத்துறை உள்பட 27 அரசு துறைகள் சார்பில் தங்கள் துறையின் மூலம் செயல்படு த்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் பார்த்து பய ன்பெறும் வண்ணம் அரங்கு கள் அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் உள்பட 7 அரசு சார்பு நிறுவனங்களும் பொரு ட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்க உள்ளன. பொருட்கா ட்சியில் சிறப்பாக அரங்குகள் அமைக்கும் துறைகளின் அரங்குகள் தேர்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தி ல்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர்.
மேலும் கோடை காலத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்து டன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்க ளும், வீட்டு உபயோக பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை அரங்குகளும் அமைக்கப்ப ட உள்ளது.
தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி நடைபெற உள்ளது. சிறைச்சாலை அணிவகுப்பு மைதானம் வழியாக பஸ்கள் செல்லும் வகையில் கூடுதல் பஸ் சேவை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






