கோவையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை-தொழிலாளி கைது

14 வயது சிறுவன் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். விக்னேஷ் சிறுவனை பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார்.
கோவையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை-தொழிலாளி கைது
Published on

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுவன் தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ் (வயது 27) என்பவர் சிறுவனை அந்த பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள குளியல் அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டினர்.இதனை தொடர்ந்து விக்னேஷ், சிறுவனின் வாயில் பேப்பரை வைத்து அடைத்தார். பின்னர் அவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனையடுத்து விக்னேஷ் நடந்த சம்பவங்களை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.சிறுவன் இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com