அன்னூர் அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி

நரேஷ் சிங் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது.
அன்னூர் அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து வட மாநில வாலிபர் பலி
Published on

கோவை,

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நரேஷ் சிங் (வயது 25). இவர் கோவை மாவட்டம் அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். பின்னர் நரேஷ் சிங் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார். போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடிய படி வெளியே சென்றார். அப்போது இருட்டில் 100 அடி ஆள கிணற்றில் நிலைதடுமாறி உள்ளே விழுந்தார். கிணற்றில் 40 அடி ஆளத்துக்கு தண்ணீர் இருந்தது. நரேஷ் சிங்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

மறுநாள் காலையில் அவரை அவரது நண்பர்கள் தேடினர். அப்போது நரேஷ் சிங் கிணற்றில் பிணமாக மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.பின்னர் கிணற்றில் தவறி விழுந்து இறந்த நரேஷ் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com