என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது.
    • சாதி, மதத்தை சாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

    கோவை :

    மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோடு சின்னியம் பாளையம் திருமண மண்டபத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. இதற்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. எனவே கட்சிக்கு புதிய உறுப்பினர்களாக ஒரு பூத்திற்கு 20 பேரை சேர்க்க வேண்டும். இதன் மூலம் ஒரு தொகுதிக்கு 6 ஆயிரம் பேரை கட்சியில் இணைக்க முடியும். சாதி, மதத்தை சாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மக்களுக்கு எதிராக எது உள்ளதோ அதை நான் சாடுவேன்.

    ஜனநாயகத்திற்கு ஆபத்து உள்ளது என்கிறார்கள். ஒரு பிள்ளையை வளர்ப்பது போல ஜனநாயகத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். திறந்த கதவு தான் என் வீடு. மற்றவர்களுக்கு தேவைப்படுவதை பதுக்கி வைத்தால் அங்கு பூட்டு வேண்டும்.

    தலைமை பொறுப்பு என்பது மேடை ஏறி பேசுவது மட்டுமல்ல. புது கட்சி ஆரம்பித்தால் எவ்வளவு வேகமாக வேலை செய்வீர்களோ அவ்வளவு வேகமாக செய்ய வேண்டும். கட்சியில் பூர்த்தி செய்யப்படாத இடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். உங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தான் பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்படும். ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே செவி சாய்ப்பேன். நம் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை ஈரோட்டிலும் தெரிந்தது.

    ராகுல்காந்தி இன்று (நேற்று) காலை என்னுடன் செல்போனில் பேசினார். அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பினார். அது பற்றிய முடிவை விரைவில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து கமல்ஹாசனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? கோவையில் போட்டியிடுவீர்களா?

    பதில்:- அது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

    கேள்வி:- கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்திற்கு செல்ல உள்ளீர்களா?

    பதில்:- பெங்களூரு பிரசாரத்திற்கு செல்வது குறித்து நாளைக்குள் (இன்று) முடிவு சொல்லப்படும். எங்களது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம். முடிவெடுத்த பின்னர் சொல்லப்படும்.

    கேள்வி:- சட்டமன்றத்தில் தவறவிட்ட வெற்றியை, பாராளுமன்றத்தில் பெற திட்டமா?

    பதில்:- இருக்கலாம். அது நல்ல எண்ணம்தானே. வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
    • மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    கோவை,

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கோவை மாநகர போலீசாரால் இன்று காணாமல் போன 170 செல்போன்கள் தனிப்படை போலீசாரால் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    இது தவிர பீளமேடு போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்த கொள்ளை தொடர்பாக முக்கியமான குற்றவாளி கைது செய்யப்பட்டு அவர் மீது 6 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அவரிடம் இருந்து 56 பவுன் தங்க நகைகள், ரூ.25 லட்சம் பணம், ஒரு இன்னோவா கார் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.

    கோடை விடுமுறை காரணமாக பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். பூட்டி இருக்க கூடிய வீடுகள் கண்காணிக்கப்படுகின்றன. பொதுமக்கள் ஊர்களுக்கு செல்லும் போது போலீஸ் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவையில் முக்கியமான பகுதிகள், மிகவும் பதட்டமான பகுதிகள் கண்காணிப்பு காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    ஆக்டோபஸ் என்கிற புதிய மென் பொருள் கோவை மாநகரில் உள்ள குற்றவாளிகளை கண்காணிக்கவும், உடனடியாக அடையாளம் காணவும் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் உதவுகிறது.

    போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடைபெறும் போது உளவுத்துறை போலீசார் உடனடியாக போலீஸ் துறையினருக்கு அனுப்பு வதற்கு இந்த மெ ன்பொருள் பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது உடனடியாக இந்த மென்பொருள் மூலம் அனுப்பலாம். உளவுத்துறை போலீசாரின் வேலைப்பளு வை குறைப்ப தற்கும், மேம்படுத்துவதற்கும் இந்த ஆட்டோபஸ் மென்பொருள் பயன்படுகிறது. மேலும் இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் மென்பொருளில் சோதனை செய்யப்படும் போது, குற்ற வழக்குகளில் நடவடிக்கை எடுக்க மிகவும் வசதியாக உள்ளது.

    எப்போதும் வேண்டு மானாலும் இதிலிருந்து தகவல்களை போலீசார் வழக்கு சம்பந்தமாக எடுத்துக் கொள்ளலாம். போலீஸ் நிலையங்கள் இடையே தகவல்கள் பரிமாறி கொள்வதற்கும் இது உபயோகப்படுகிறது.

    ஆவணங்கள் அனைத்து ம் டிஜிட்டலைஸ் பண்ண ப்படுகிறது. தமிழகத்தில் கோவையில் மட்டும் தான் இந்த மென்பொருள் பயன்படுத்த ப்படுகிறது என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் உடன் இருந்தார்.

    • வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவது தடுக்க முடியாமல் உள்ளது.

    வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

    வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

    • குப்புசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
    • தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் மோட்டர் சைக்கிளுடன் வாலிபர் விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சி மேல்பாவியைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). விவசாயி.

    இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தோட்டத்தில் தென்னங் கள்ளும் விற்று வந்துள்ளார். இது வனப்பகுதியையொட்டி உள்ளதால் தோட்டத்தை சுற்றிலும் மின்வேலியும் அமைத்திருந்தார்.

    நேற்று மாலை இவரது தோட்டத்திற்கு கள் குடிப்பதற்காக காளியூரை சேர்ந்த பழங்குடியின வாலிபரான ஜெயக்குமார் (34) தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    சிறிது நேரத்தில், அவருடன் வந்தவர்கள் கள் குடித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் ஜெயக்குமாருக்கு அதிக போதை ஏற்பட்டதால் அங்கேயே படுத்து விட்டார்.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் ஜெயக்குமார் எழுந்து, தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக மின்வேலியில் மோட்டார் சைக்கிளோடு விழுந்தார்.

    அப்போது யானைகள் வராமல் இருப்பதற்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் மின் இணைப்பு இருந்தது தெரியாததால், அதில் விழுந்த ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் தோட்ட உரிமையாளரான குப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலியான தகவல் அறிந்ததும் குப்புசாமி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

    • உதவுவது போல் நடித்து வாலிபர் கடத்திச் சென்றார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கோவை

    கோவை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது விவசாயி. குடிப்பழக்கம் உடையவர்.

    சம்பவத்தன்று அவர் மோட்டார்சைக்கிளில் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்கச் சென்றார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் போதை தலைக்கேறியது. கடையில் இருந்து வெளியே வந்த அவர் மோட்டார்சைக்கிளை எடுக்க முயற்சி செய்தார். நடக்க கூட முடியாமல் போதையில் இருந்த அவரால் மோட்டார்சைக்கிளை எடுக்க முடியவில்லை. அடுத்தடுத்து அவர் கீழே விழுந்தார்.

    அந்த சமயம் அங்கு வந்த வாலிபர், போதை நபருக்கு உதவுவதாக கூறினார். உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள் என்றார். உடனே தனக்கு சொந்தமான தோட்டத்தில் கொண்டு போய் தன்னை விடுமாறு போதை நபர் கூறினார். மோட்டார்சைக்கிளின் பின்னால் அவர் ஏறிக்கொள்ள வாலிபர் தோட்டத்துக்கு வண்டியை விட்டார். தோட்டத்தில் போட்டிருந்த கட்டிலில் போதை நபரை படுக்க வைத்து வாலிபர் சென்று விட்டார். காலையில் போதை தெளிந்து எழுந்த விவசாயிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. தனக்கு உதவுவதாக கூறி அழைத்து வந்த வாலிபர், செல்லும் போது விவசாயியின் மோட்டார்சைக்கிளையும் திருடிச் சென்று இருந்தார்.

    போதையை பயன்படுத்தி வாலிபர் தன்னை ஏமாற்றி மோட்டார்சைக்கிளை திருடிச் சென்றதை உணர்ந்த விவசாயி, கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் எதாவது காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறி ஏமாற்றினார்
    • நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 61). இவர் தமிழக அரசால் வழங்கப்பட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று பரமசிவம் வீட்டில் இருந்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் அரசால் வழங்கப்பட்டு உள்ள சோலாரை சரி செய்ய வந்து இருப்பதாக கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் சோலார் பேட்டரிகளை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வாலிபர் பரமசிவத்தை மாடிக்கு சென்று சோலாரை சரி செய்யுமாறு கூறினார். இதனையடுத்து அவர் மேலே சென்றார்.

    அப்போது அந்த வாலிபர் பரமசிவம் வீட்டில் உள்ள பீரோவை திறந்து அதில் இருந்த தங்க காசு மாலை, செயின், கம்மல், மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தனது பையில் வைத்தார். சிறிது நேரத்துக்கு பின்னர் பரமசிவம் கீழே வந்தார். பின்னர் அந்த வாலிபர் வேலை முடிந்து விட்டதாக கூறி தப்பிச் சென்றார்.

    கடந்த 21-ந் தேதி பரம சிவத்தின் குடும்பத்தினர் அந்த பகுதியில் நடந்த கோவில் நிகழ்ச்சிக்கு புறப்பட்டு கொண்டு இருந்தனர். அப்போது பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த தங்க நகைகள் மாயமாகி இருந்தது தெரிய வந்தது. சோலார் சரி செய்ய வந்த வாலிபர் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து பரமசிவம் சூலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலார் சரி செய்ய வந்ததாக கூறி முதியவரை ஏமாற்றி 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • குப்புராஜ் சாப்பிட்டு திரும்பி வந்தபோது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது
    • போலீசார் தங்க கட்டியை திருடி சென்ற நாகராஜை கைது செய்தனர்

    கோவை,

    கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள எல்.ஜி. தோட்டத்தை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 44). இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் செல்வபுரம் தில்லை நகரை சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று குப்புராஜ் 15 பவுன் தங்க கட்டியை கள்ளாவில் வைத்து விட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக சென்றார். அப்போது நாகராஜ் தங்க கட்டியை திருடி தப்பிச் சென்றார். குப்புராஜ்திரும்பி வந்து பார்த்த போது கள்ளாவில் இருந்த 15 பவுன் தங்க கட்டி மாயமாகி இருந்தது. தொழிலாளியாக வேலை பார்த்து வந்த குமரேசனையும் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து தங்க நகை பட்டறை உரிமையாளர் குப்புராஜ் பெரியக்கடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தங்க கட்டியை திருடி சென்ற நகராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த திருடப்பட்ட 12 பவுன் தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நாகராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார்.
    • போத்தனூர் போலீசார் மதன்குமாரை கைது செய்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் ஜெரால்டு. இவரது மகன் சார்லஸ் மரிய ஜான் (வயது 22). இவர் பீளமேட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் காந்திஜி ரோட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

    இளம்பெண்ணுக்கு ஒரு தங்கை உள்ளார். அவரை அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதன்குமார் (28) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார். இவர் அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்தார்.

    இது குறித்து அவர் தனது அக்காவிடம் தெரிவித்தார். அவர் தனது காதலன் சார்லஸ் மரிய ஜானிடம் கூறினார். இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் மதன்குமாரை சந்தித்து எனது காதலியின் தங்கைக்கு உன்னை பிடிக்கவில்லை.

    எனவே அவள் பின்னால் சுற்றுவதை நிறுத்தி கொள்ளவும் என கூறினார்.சம்பவத்தன்று சார்லஸ் மரிய ஜான் தனது மோட்டார் சைக்கிளில் சுந்தராபுரம் ஆசிரியர் காலனி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு நின்று கொண்டு இருந்த மதன்குமார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். பின்னர் நீ மட்டும் அக்காவை காதலிக்கலாம், நான் அவரது தங்கையை காதலிக்க கூடாதா என கூறி தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மதன்குமார் அரிவாளை எடுத்து சார்லஸ் மரிய ஜான் தலையில் வெட்டினார். பின்னர் கையில் குத்தி கிழித்தார்.

    பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தகராறில் ஐ.டி. ஊழியரை வெட்டிய மதன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வடவள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தொழிலாளிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இளம்பெண் தனது குழந்தைகளுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் தொழிலாளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகின்றனர்.
    • ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது.

    குனியமுத்தூர்.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் இங்கு வந்து திரும்பிச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் இங்கு வந்து இறங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வது வழக்கம். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதும் அங்கிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறுவதும் வழக்கம்.

    இந்நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிர்புறம் உள்ள பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களும்,

    அரசு பஸ்களும் போட்டி போட்டுக் கொண்டு ஏர் ஹாரன்களை ஒலிக்கின்றனர். அந்த பஸ் நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறைவானதாகும். ஒரு பஸ் வெளியே சென்றால் மட்டுமே, பின்னால் வரும் அடுத்த பஸ் வெளியேற முடியும் .

    டைமிங் பிரச்சினை காரணமாக ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்வது அங்கு வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் ஏர்ஹாரன் சத்தம் அந்த இடத்தில் எந்த நேரமும் ஒலித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இந்த சத்தம் காரணமாக அங்கு வரும் நோயாளிகளுக்கு பதட்டம், மன அழுத்தம் ஏற்படும் நிலை உள்ளது.

    இது குறித்து நோயாளிகள் கூறுகையில், இவர்கள் அடிக்கும் ஏர்ஹாரன் பிரசவ வார்டு வரை கேட்கிறது. பொதுவாக சிகிச்சையில் இருக்கும் நோயாளியிடம் சத்தமாக பேசக்கூடாது என்று கூட மருத்துவர்கள் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஏர் ஹாரன் சத்தங்கள் நோயாளிகளின் நெஞ்சை பதற வைக்கிறது. டிரைவர்கள் இதனை புரிந்து கொண்டு செயல்பட்டால் மட்டுமே நல்லது என்றனர்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுவாக நகர்ப்புற எல்லைக்குள் ஏர்ஹாரன் அடிக்க கூடாது என்று வட்டாரப் போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் அதையும் மீறி ஒரு சில டிரைவர்கள் இவ்வாறு செயல்பட்டு வருகிறார்கள். அவ்வாறு செயல்படும் டிரைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து துறையினரும் போக்குவரத்து போலீசாரும் இதனை அன்றாடம் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு கண்காணிக்கும் பட்சத்தில் நகர்ப்புற எல்லைக்குள் அமைதியான பயணத்தை மேற்கொள்ளலாம் என கூறினர்.

    • கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
    • பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம்செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில்செயல்பட்டுவரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளக்கிணறு கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் 1,006 மனைகள் மேம்பாட்டுத்திட்டம் ரூ.50 கோடிமதிப்பீட்டில் செயல்படு

    த்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக வீட்டுவசதி வாரிய கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தினை பார்வையிட்ட கலெக்டர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டுவசதித் துறையின் மூலம் மனை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்தவருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனைப் பிரிவுகளின் எண்ணிக்கைகுறித்தும் கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர்பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த கலெக்டர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    பின்னர், கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில்பார்வையிட்டு, அம்மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதித்து பார்த்தார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம் -3) பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அலுவலர்கள்பலர் உடன் இருந்தனர்.

    • வ.உ.சி.க்கு முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.
    • ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச் சிலையை விரைவில் தமிழக முதல்-அமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

    நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

    இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைக்க ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறும் போது,

    ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில், வ.உ.சி.க்கு முழு உருவ உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    தரையில் இருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்தில் இருந்து உலோகத்தால் இச்சிலை செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டு ள்ளது.

    மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ திறந்துவைப்பார் என்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    ×