கோவையில் காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை

திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் காதல் மனைவி கள்ளக்காதலனுடன் சென்றதால் தொழிலாளி தற்கொலை
Published on

கோவை,

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையாம்பாளையத்தை சேர்ந்தவர் 28 வயது கூலித் தொழிலாளி. இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் இளம்பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தொழிலாளிக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் இளம்பெண் தனது குழந்தைகளுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் தொழிலாளி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com