என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET Coaching Center"

    • பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது. அதனால், 18% ஜி.எஸ்.டி. அவர்களுக்குப் பொருந்தும்" என்று விளக்கம் அளித்தார்.

    அதாவது JEE அல்லது NEET தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவன கட்டணம் ரூ.50,000 ஆக இருந்தால் இனிமேல் அதன் கட்டணம் ரூ.59,000 ஆக உயரும்.

    இந்த 18% வரி பயிற்சி மையங்களுக்கு மட்டுமல்ல, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரியால் பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் ஆய்வு செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்தார்.
    • பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் பார்வையிட்டார்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம்செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில்செயல்பட்டுவரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.

    வெள்ளக்கிணறு கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் 1,006 மனைகள் மேம்பாட்டுத்திட்டம் ரூ.50 கோடிமதிப்பீட்டில் செயல்படு

    த்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக வீட்டுவசதி வாரிய கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தினை பார்வையிட்ட கலெக்டர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து, வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டுவசதித் துறையின் மூலம் மனை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்தவருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனைப் பிரிவுகளின் எண்ணிக்கைகுறித்தும் கேட்டறிந்தார்.

    அதனைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கர்பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த கலெக்டர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    பின்னர், கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில்பார்வையிட்டு, அம்மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதித்து பார்த்தார்.

    இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம் -3) பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அலுவலர்கள்பலர் உடன் இருந்தனர்.

    • மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
    • சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    திருநெல்வேலியில் ஜல் நீட் அகாடமி என்ற பெயரில் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்தில் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்காக அங்கேயே தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு முன்பு சில மாணவர்கள் தூங்கியதால் அவர்களை வரவழைத்து பிரம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

    இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் மாணவர்களை ரத்தம் சொட்ட சொட்ட பிரம்பால் அடித்து சித்ரவதை செய்தது அப் பயிற்சி மைய உரிமையாளர் ஜலாலுதீன் என தெரியவந்துள்ளது.

    காலணிகளை விடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் காலணியை சரியாக அடுக்கவில்லை எனக்கூறி, மாணவிகள் மீது ஜலாலுதீன் காலணிகளை வீசும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி மையத்தின் உரிமையாளரும், பயிற்சியாளருமான ஜலாலுதீன் அகமத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, 323, 355, 75 JJ act பிரிவுகளில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலப்பாளையம் உதவி ஆணையர் சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்துகிறார்.

    சிறார் குற்ற விதிகளின்படி நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    • பயாலஜி ஆசிரியர் மற்றும் கெமிஸ்ட்ரி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார்.

    12 வகுப்பு முடித்த மாணவர்கள் இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வை கடந்த 2016 ஆம் தேதி மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதன்படி டாக்டர் கனவோடு பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவர்களைப் பெற்றோர் தனியார் கோச்சிங் சென்டர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    இதனால் நாடு முழுவதும் கோச்சிங் சென்டர்கள் பல்கிப் பெறுகிறன. தனியார் கோச்சிங் சென்டர்களில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை என அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் மருத்துவ கனவவோடு கோச்சிங் சென்டரில் பயின்று வந்த மாணவி அங்குள்ள ஆசிரியர்களால் 6 மாத காலமாக பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தின் பதேப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி கான்பூர் நகரில் உள்ள பிரபல பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். 2022 இல் சிறுமிக்கு 17 வயது இருக்கும்போது இந்த கொடூரம் நடந்துள்ள நிலையில் தற்போது அவர் முன்வைத்து புகார் அளித்ததால் கோச்சிங் சென்டர் குட்டு வெளிப்பட்டுள்ளது.

    உயிரியல் [பயாலஜி] ஆசிரியர் சாஹில் சித்திக் (வயது 32), வேதியியல் [கெமிஸ்ட்ரி] ஆசிரியர் விகாஸ் பொர்வால் (வயது 39) என 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 2 பேருக்கு எதிராக பாலியல் பலாத்காரம், முறைகேடாக வீட்டில் அடைத்து வைத்தல், குற்ற உள்நோக்கம் மற்றும் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு டிசம்பரில் நியூ இயர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கல்யாண்பூரில், மக்தி-கேரா பகுதியில் உள்ள நண்பரின் அபார்ட்மென்டுக்கு வரும்படி சித்திக் அந்த மாணவியை அழைத்துள்ளார். மற்ற மாணவிகளும் வருவார்கள் என கூறியுள்ளார்.

    விடுதியில் தங்கி படித்த அந்த மாணவி அபார்ட்மென்டுக்கு சென்றபோது, சித்திக் தவிர யாருமில்லை. இதன்பின்னர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருக்கிறார். இதன்பின்னர், மாணவியை பலாத்காரம் செய்து, சித்திக் அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார்.

    தொடர்ந்து 6 மாதங்களாக அபார்ட்மென்ட்டில் சிறை வைத்து, மாணவியிடம் சித்திக் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். வேறு யாரிடமும் கூறினால் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார். சில மாதங்களில், ஆசிரியர் பொர்வாலும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை பற்றி போலீசிடம் கூறினால், அது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுத்தி விடும் என மாணவி பயந்து இருக்கிறார். 6 மாதங்களுக்கு பின்னர், கான்பூருக்கு வந்து மகளை அவருடைய தாய் அழைத்து சென்றிருக்கிறார்.

    தொடக்கத்தில் போலீசுக்கு போக தயக்கம் காட்டிய அந்த மாணவி, இதன்பின்பு, வேறொரு பயிற்சி மாணவியை, சித்திக் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோ வைரலாகியது. இதனை பார்த்ததும் முடிவை மாற்றிக்கொண்டார். இந்த வழக்கில், ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதனை தொடர்ந்தே மாணவி போலீசில் புகார் அளிக்க துணிந்துள்ளார்.

    இதன்பின்னர், கல்யாண்பூர் காவல் நிலையத்தில் அவர் அளித்த எப்.ஐ.ஆர் ஒன்று பதிவாகி உள்ளது. இதுபோன்று வேறு மாணவிகளிடமும் இவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டார்களா? என்பது பற்றியும் போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.

     

    ×