என் மலர்
நீங்கள் தேடியது "நீட்தேர்வு பயிற்சி மையம்"
- பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது. அதனால், 18% ஜி.எஸ்.டி. அவர்களுக்குப் பொருந்தும்" என்று விளக்கம் அளித்தார்.
அதாவது JEE அல்லது NEET தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவன கட்டணம் ரூ.50,000 ஆக இருந்தால் இனிமேல் அதன் கட்டணம் ரூ.59,000 ஆக உயரும்.
இந்த 18% வரி பயிற்சி மையங்களுக்கு மட்டுமல்ல, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. வரியால் பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
- காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
- அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






