என் மலர்
கோயம்புத்தூர்
- இளம்பெண் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார்.
- முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார்.
கோவை:
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.
இவருக்கு கடந்த 1 ஆண்டுக்கு முன்பு கோவை சூலூரை சேர்ந்த சமையல் மாஸ்டர் முருகேசன் (வயது 35) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் செல்போன் மூலமாக பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் காதலர்கள் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்தனர். அப்போது 2 பேருக்கும் பிடித்து போனதால், திருமணம் செய்து கொள்வதற்கு அவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து முருகேசன் சூலூரில் வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்ணுடன் தங்கினார்.
அப்போது அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனால் அவர் 5 மாத கர்ப்பமானார். அவர் தனது காதலன் முருகேசனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்தார். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்த நிலையில் முருகேசன் கடந்த 1 மாதத்துக்கு முன்பு அவரது உடமைகளை எடுத்துக்கொண்டு காதலியை தவிக்க விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சியான இளம்பெண் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அப்போது பேசிய முருகேசன் தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறியதுடன், அந்த பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தையும் அனுப்பினார். இதனை பார்த்து இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவான முருகேசனை தேடி வருகிறார்கள்.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
- பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.
பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.
இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
- தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார்
கோவை,
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது.
கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.
இதன் முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.
13-வது இடம்
தேர்வு எழுதிய மாண வர்களில் 90.74 சதவீதம் பேரும், மாணவிகளில் 96.24 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 9-வது இடம் பிடித்திருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்கள் குறைந்து 13-வது இடத்தை பிடித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதம். அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும், தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இதைத்தவிர்த்து இரு பாலர் பயின்ற பள்ளிகள் 91.58 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 83.25 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 94.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 3,718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,026 ஆகும்.
கோவை மத்திய சிறையில் 45 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 47 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வை எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர்அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
- சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
கோவை
கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிறுமிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு ஆனைமலையை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றார். பின்னர் அவர் சிறுமியை திருமணம் செய்தார். சிறுமி திடீரென மாயமானதால் அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போதுதான் தங்களது மகளை ஆனைமலையை சேர்ந்த வாலிபர் கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து அவர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளிக்கலாம்
- பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில், 23-ந் தேதி ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்குகிறது. பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.
கோவை மாவட்டத்தில், 11தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் கலெக்டர் தலைமையிலும், கிணத்துக்கடவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ந் தேதி வரை, வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ந் தேதி மட்டும், சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ந் தேதி வரை, மேட்டுப்பாளை யத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக் டர் முன்னிலையில், 23 முதல் 30-ந் தேதி வரை, அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலை மையில் 23 முதல், 31-ந் தேதி வரை, தெற்கு தாலுகா வில் 23 முதல் 24-ந் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவல கங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, கலெக் டர் கிராந்திகுமார் தெரி வித்துள்ளார்.
- வாலிபர்கள் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.
- கைதானவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றி கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சித்து பத்தன்(வயது 23), பல்லடம் சுக்கம்பாளை யத்தை சேர்ந்த முகிஜா என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில், அவர்களது கூட்டாளிகளான ஒடிசா வை சேர்ந்த அமர்நாத்மூன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனு அகமத் ஆகியோர் செஞ்சேரிபுதூரில் கஞ்சா விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா பதுக்கி விற்ற மனு அகமத், அமர்நாத்மூன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வடக்கிபாளையம் போலீசார் வடக்கிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சருண்(26), முகமது முஸ்த பா(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- கல்லூரியில் நடப்பாண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்படுகிறது.
- 6-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது.
கோவை,
தமிழகத் தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்ப டிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் மூலம் கடந்த 8-ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பிஎஸ்சி கணிதம், இயற்பி யல், தாவரவியல், பிகாம் உள்ளிட்ட 23 படிப்பு கள் வழங்கப்படுகிறது. நடப்பா ண்டில், 1,433 இடங்கள் நிரப்பப்ப டுகிறது. இதற்கு www. tngasa.in என்ற இணை யதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்ட ணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
இதனை தொடர்ந்து வருகிற 26-ந் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. மேலும், தமிழக அளவில் சென்னை மாநில கல்லூரி மற்றும் கோவை அரசு கலைக்கலூரிக்கு அதிக ளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர்.
சிறப்பு பாடமான பாதுகாப்பு துறை பாடத்திற்கும் நீலகிரி, கோவை அரசு கலைக்கல்லூரிக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பி த்துள்ளனர். தவிர, பிகாம், பிகாம் சிஏ. பிஎஸ்சி கணினி அறிவியல் பாடத்திற்கு மாணவர்கள் மத்தியில் அதிகளவில் ஆர்வம் உள்ளது.
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏராளமான மாணவர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் விண்ணப்பிக்க ஊழியர்கள் உதவி களை செய்தனர்.
- கர்நாடகாவில் இருந்து 17 பேர் நீலகிரிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர்.
- 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே தனியார் பஸ் மீது வேன் மோதியது.
மேட்டுப்பாளையம்,
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கர்நாடகா மாநிலம் பெள்ளேரி பகுதியில் இருந்து 17 பேர் தனியார் சுற்றுலா வேன் மூலம் சுற்றுலாவிற்கு வந்தனர். ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் சுற்றி பார்த்து விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு கோத்தகிரி வழியாக திரும்பிக் கொண்டு இருந்த னர்.
வாகனத்தை பெள்ளேரி பகுதியை சேர்ந்த விஸ்வா (20) என்பவர் ஓட்டினார். வாகனம் கோத்தகிரி சாலையில் 2-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது வேன் மோதியது. இதில் வேன் டிரைவர் விஸ்வா (20), வினோத் (35), உலியம்மா (50), வீரம்மா (30), வீரோவ் (13), ராம்சரன் (14), தேஜீ (11), பஸ்வராஜ் (12), பாப்பா (34), லட்சுமி (30), நாகவேந்திரா (30), நாகராஜ் (40), மனோஜ் (6), கலரம்மா (44), மகானி (12) உள்ளிட்ட 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதிகி ருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடை ந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு மேட்டுப்பா ளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும் விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
- பொருட்களை உரிய நேரத்தில் வழங்க விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
கோவை,
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவைகள் மையத்தை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
இந்த மையத்தில் 0 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் மூளை வளர்ச்சி குறைபாடு, அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு, கோணக்கால்கள், பிறவிக்கண்புரை, பிறவிக்காது கேளாமை, பிறவி இருதய நோய்கள், மாறுகண், தாலசீமியா, ரத்தசோகை, வைட்டமின் ஏ குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு உள்பட 23 நோய்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை வழங்கப்படுகிறது.
இங்கு 2022-23 ஆண்டில் 15,000 புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். 4 ஆண்டுகளில் 107 பேருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 92 பேருக்கு அன்னப்பிளவு மற்றும் உதட்டு பிளவு அறுவைச் சிகிச்சையும், ஆட்டிசம் சிகிச்சை 102 குழந்தைகளுக்கும், 450 பேருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலையின் முத்துராமலிங்கம் வீதி நியாயவிலைக் கடை, பாரதிநகர் 6 வீதி நியாயவிலைக் கடைகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டை தாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில், கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்ததுடன், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்க நியாய விலை கடை விற்ப னையாளர்களிடம் அறிவுறுத்தி னார்.
மேலும், ராமநாதபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை அறை, மார்பக பரிசோதனை அறை, தடுப்பூசி அறை, ஆய்வகம், பிரசவ வார்டு, ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் அங்கு கர்ப்பணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர்(பயிற்சி) சவுமியா, அரசு மருத்துவ க்கல் லூரி மருத்து வமனை முதல்வர் டாக்டர் நிர்மலா, மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) டாக்டர்.அருணா, மருத்துவ அலுவலர் டாக்டர்.பாலகுமார், ஆகியோர் உடனிருந்தனர்.
- தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமரின் பங்கு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
- கள்ளச்சாராய விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளோம்.
கோவை:
தமிழக பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டம் இன்று காலை கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
கூட்டத்துக்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ், தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பார்வையாளர் சிடி ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர். காந்தி, நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, வேலூர் இப்ராகீம், நடிகை நமீதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கோவையில் இன்று சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. இந்த செயற்குழுவிற்கான காரணம் பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சேவை செய்துவிட்டு 10-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
அவரது சேவையை கொண்டாடும் விதமாகவும், சாதனைகளை விளக்கும் விதமாகவும் மே 30-ந் தேதியில் இருந்து ஜூன் 30-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு மாத காலம் வரை பா. ஜனதா கட்சி அதை கொண்டாட உள்ளது. இதில் மக்கள் எவ்வாறு முன்னேறி உள்ளார்கள். பெரிய எழுச்சி ஏற்படுத்தியுள்ளது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு பிரதமரின் பங்கு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இது தொடர்பாக தமிழகத்தில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இங்கு செயற்குழுவுக்கு வந்துள்ள தலைவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்துள்ளார்கள். நானும் என் ஜல்லிக்கட்டு காளையை கொண்டு வந்துள்ளேன். இதற்கு காரணம் நேற்று நமக்கு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. பிரதமரின் முழு முயற்சியால் இந்த தீர்ப்பு வந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக ஜல்லிக்கட்டு காளை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் டாஸ்மாக் என்பது வெள்ளம் போல ஓடிக்கொண்டிருக்கிறது. மறுபக்கம் கள்ளச்சாராயம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மதுவிற்கு அடிமையான டாஸ்மாக்கில் மதுவை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் கள்ளச்சாராயத்தை வாங்குகிறார்கள்.
இதனை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.
நாளை மறுநாள் (21-ந்தேதி) காலை 10 மணிக்கு தமிழக பா.ஜனதா கட்சி குழுவினர், கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறோம். அப்போது கள்ளச்சாராய விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள உள்ளோம்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்க முடியாது. இது தொடர்பாக அவரை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் முயற்சி எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சரை கவர்னர் வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்து கூற உள்ளோம்.
தி.மு.க. அரசு டாஸ்மாக் மூலமாக தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளது. உடனடியாக கவர்னர் தலையிட்டு பேசி டாஸ்மாக்கை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது.
- பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஊராட்சிகளில் 8 பேரை பழிவாங்கிய அரிசி கொம்பன் யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த ஆண் காட்டுயானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டனர்.
தற்போது இந்த யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. மணலாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்தி அங்கிருந்த ரேசன் கடையையும் உடைத்து சூறையாடியது. மேலும் நள்ளிரவில் வரும் அரசு பஸ்சையும் மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே நடமாடும் இந்த அரிசி கொம்பன் யானை இரை தேடுவதற்காக மட்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அதன்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது.
ஆரம்பத்தில் அரிசி கொம்பன் யானை மீது கோபம் ஏற்பட்ட மக்களுக்கு தற்போது அனுதாப அலை வீசி வருகிறது. இதனிடையே அரிசி கொம்பனின் கதையை திரைப்படமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் அரிசி கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
அவர்கள் அரிசி கொம்பன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கி உள்ளனர். வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே சொந்தம். அங்கு குடியிருப்புகள் அதிகரிப்பால் வனவிலங்குகள் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்போம் என்ற அடிப்படையில் பிரசாரமும் செய்து வருகின்றனர்.
மேலும் பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர். இங்கு வரும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.






