ேகாவையில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்

சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.
ேகாவையில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர்
Published on

கோவை

கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com