என் மலர்
கோயம்புத்தூர்
- லாரி கட்டுப்பாட்டை இழந்து லோடு வேன் மீது மோதியது.
- செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோவை,
திண்டுக்கல் மாவட்டம் நாடகோட்டையை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 21). லோடு வேன் டிரைவர்.
சம்பவத்தன்று இவர் தனது லோடு வேனில் பல்லடம்- செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து லோடு வேன் மீது மோதியது.
இதில் லோடு வேனை ஓட்டிச் சென்ற பிரகாஷ் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளாங்குறிச்சி அருகே உள்ள ஸ்ரீமுருகன் நகரை சேர்ந்தவர் மயிலேஷ் (25). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் காளப்பட்டி - விளாங்குறிச்சி ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மயிலேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வடவள்ளி அருகே உள்ள பொம்மனாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (53). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கல்வீரம்பாளையம் -அஜ்ஜனூர் ரோட்டில் சென்றார்.
அப்போது முன்னால் சென்ற லாரியின் பின் பக்கத்தில் கட்டுப்பாட்டை இழந்து மோதினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தேவதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
- மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.
கோவை,
கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.என்.செந்தில்குமார் அறிவுறுத்தல்படி, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலும், பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்திலும் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய இதர வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளை கோவையில், மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு மற்றும் கோவை மாவட்ட எட்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தனலட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வும், பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பி.மோகனவள்ளி மற்றும் பொள்ளாச்சி கூடுதல் உரிமையியல் நீதிபதி என்.பாரதிராஜா ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரித்தன.
இதில், மொத்தம் 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.
இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
- இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
இவர் கூலி வேலை செய்து வருகிறார். இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் கடந்த 2 ஆண்டுகளாக சீட்டு போட்டு வருகிறார்.
இதனால் இளம்பெண் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருக்கும் இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இளம்பெண் தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் கணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனாலும் அவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்தது.
இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் இளம்பெண் சீட்டுக்கு கட்டிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுக்ாமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பெண், நீ கேட்ட சீட்டு பணத்தை தருகிறேன். வீட்டில் வந்து வாங்கி கொள் என கூறி அழைத்தார்.
பணம் வாங்கும் ஆசையில் இளம்பெண்ணும் அங்கு சென்றார். அங்கு சென்றதும், அவர் இளம்பெண்ணிடம் தனது கணவருடனான கள்ளக்கா தலை கைவிடுமாறு கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த பெண், இளம்பெண்ணை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து இளம்பெண் சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கணவருடனான கள்ளக்காதலை கைவிட மறுத்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து தாக்கிய பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவத்தன்று முகமது ஜாபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
- தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முகமது ஜாபர். கயிறு வியாபாரி. இவரது மனைவி தவுலத் நிஷா(வயது 55).
கடந்த 3-ந் தேதி இவரது கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டி விட்டு கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
அங்கு முகமது ஜாபர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். தவுலத் நிஷா கணவருடன் இருந்து அவரை கவனித்து வந்தார்.
சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
கணவருக்கு உடைகள் எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து தவுலத் நிஷா கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட னர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிகிச்சைக்கு சென்ற கயிறு வியாபாரி வீட்டில் 13 பவுன் நகைகள் மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
- ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்த முடிவு.
- 40 கி.மீ. வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம்.
கோவை,
கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விதிமீறல்களை தடுக்கவும் மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன்ஒருபகுதியாக கோவை மாநகரில் அவினாசி ரோடு, சக்தி ரோடு, மற்றும் பாலக்காடு ரோட்டில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 6 தானியங்கி வேக அளவீடு கருவி பொருத்துவது என்று மாநகர போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக கோவை-அவினாசி ரோட்டில் இந்தகருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 40 கி.மீ. வேகத்தை தாண்டிச் செல்லும் வாகனங்கள் காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் தானியங்கி வேக கட்டுப்பாடு அளவீடடு கருவிகள் பொருத்தப்படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தில் முதல்முறையாக கோவை மாநகரில் தானியங்கி வேக அளவீட்டு கருவி பொருத்தப்பட்டு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது.
- ஈக்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை
சூலூர்,
கோவை சூலூர், சுல்தான்பேட்டை அருகில் சிம்மநாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு வாழும் மக்கள் அனைவருமே கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த ஈக்கள் அவர்கள் சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், திண்பன்டங்கள் உள்பட அனைத்திலும் மொய்த்து கொண்டிருக்கின்றன.
சில நேரங்களில் மூக்கு, காதுகளிலும் சென்று தொல்லை கொடுத்து வருகிறது. தொடர்ந்து இதுபோன்று ஈக்கள் தொல்லையால், குழந்தைகள், முதியவர்கள் உள்பட அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஈக்கள் தொல்லையால் மக்கள் வீட்டில் உள்ள பொருட்களை மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சிம்மநாயக்கன்பாளையத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அவை சரிவர பராமரிக்கப்படுவது இல்லை.
எனவே அங்கு ஈக்கள் அதிகம் உற்பத்தியாகி, வீடுகள் முழுவதும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதுகுறித்து உள்ளாட்சி மன்றத்தில் புகார் கொடுத்தோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சிம்மநாயக்கன்பாளையத்தில் கடந்தாண்டு இதே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் சம்பந்தப்பட்ட பகுதியில் பூச்சிமருந்து தெளித்து, கோழிப்பண்ணைகளிலும் சுத்தம், சுகாதாரத்தை பராமரிக்க உத்தரவிட்டது.
இதன் விளைவாக அங்கு ஈக்கள் தொல்லை கட்டுப்படுத்தப்பட்டது. அதேமாதிரியான நடவடிக்கையை தற்போதும் மேற்கொண்டால் சிம்மநாயக்கன்பாளையத்தில் ஈக்கள் தொல்லைக்கு முடிவு கட்ட முடியும்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன.
- ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
குனியமுத்தூர்,
கோவை சாய்பாபாகாலனி, பாரதி பார்க் சாலையில் அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இதனால் அங்கு உள்ள ரோட்டில் மாணவிகளை அதிகம் பார்க்க முடியும்.
சாய்பாபா காலனியில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் முகாமிட்டு உள்ளன. அவை பாரதி பார்க் பகுதியில் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் குதிரைகள் நடுரோட்டில் வந்து நின்று மிரள வைக்கின்றன. இதனால் மாணவிகள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் குதிரைகளுக்கு பயந்து தடுமாறி கீழே விழுகின்றனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஏர்ஹாரன் அடிக்கும்போது குதிரைகள் மிரண்டு ஓடுகிறது. இதனால் எதிரே நடந்து வருபவர்கள் பதறி அடித்து நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.
பாரதி பார்க் சாலையின் அருகில் ராமலிங்கம் காலனி வீதிகள் உள்ளன. அங்கு குதிரைகள் எந்நேரமும் சுற்றி திரிகின்றன. ஒருசில நேரங்களில் சத்தமாக கனைத்து பொதுமக்களை பதற வைக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் தெரு நாய்களும் குதிரைகளும் மோதிக்கொள்ளும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. இதனால் அங்கு இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை.
அதுவும்தவிர இப்பகுதியில் மகளிர் விடுதிகள் அதிகம் உள்ளன. அங்கு தங்கியிருக்கும் பெண்களும் குதிரை கூட்டத்தை கண்டு அச்சப்பட்டு வெளியே வர முடியாமல் தவித்து நிற்கும் அவல நிலை உள்ளது. பாரதி பார்க் வீதியின் அனைத்து தெருக்களிலும் குதிரைகள் பவனி சென்று திரும்புகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை ஒருவர் மதுபோதையில் அத்துமீறி குதிரை சவாரி செய்ய கிளம்பினார். அப்போது குதிரை கனைத்துக் கொண்டு சிலிர்த்தது. இதனால் அந்த குடிமகன் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார். அதனை கண்டு சாலையோரம் நின்றிருந்த அனைவரும் வேடிக்கையாக சிரித்தனர்.
சாய்பாபாகாலனி பாரதி பார்க் வீதிகளில் குதிரைகளின் நடமாட்டத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும். அவைகளை பிடித்து சென்று பட்டியில் அடைக்க வேண்டும். அந்த குதிரைகளின் உரிமையாளருக்கு கடும் அபராதம் விதித்து எச்சரிக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய்.
- டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவரின் மகளான ஐஸ்வர்யா, இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சத்குரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
"ஐஸ்வர்யாவுக்கு என் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். என் வருங்காலத்தை நானே உருவாக்க வேண்டும் என்ற உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய். உண்மையாகவே ஊக்கமளிக்கிறது. ஆசிகள்" என சத்குரு கூறியுள்ளார்.
டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் தங்கம் வென்ற மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், "தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உதவியுடன், மீனவர் ஒதுக்கீட்டின் கீழ் படித்தேன். நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் இணைந்தேன்" என தெரிவித்துள்ளார்.
- பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.
- விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.
சூலூர்:
அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-
இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.
உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
தமிழகத்தின் ராஜ ராஜா சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.
- ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
- உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
கோவை:
கோவை மத்திய ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஜெயிலுக்குள், பீடி, சிகரெட், கஞ்சா, செல்போன் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது.
ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா, பீடி, சிகரட் ஆகியவற்றை மறைத்து வைத்து பயன்படுத்துகிறார்களா? என ஜெயில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கைதிகளை பார்க்க ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பார்வையாளர்கள், உறவினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்போது போலீசார் பாதுகாப்புடன் உறவினர்கள் கைதிகளுடன் பேசுவதற்கும், உணவு பண்டங்களை கொடுப்பதற்கும் நேரம் ஒதுக்கப்படுகின்றது.
இதேபோல், நேற்று முன்தினமும் கைதிகளை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது யாரோ 2 பேர் ஜெயிலுக்கு உணவு பண்டத்தில் கஞ்சா மறைத்து வைத்து கைதிக்கு கொடுத்ததாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இந்த தகவலின் பேரில், மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் தண்டனை கைதிகள் சிலரிடம் பார்வையாளர்கள் கொடுத்த உணவு பண்டங்களை வாங்கி சோதனை செய்தார்.
ஜெயிலில் தண்டனை கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் சோதனை செய்த போது அவர்களுக்கு கொடுத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.
அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 4 கிராம் கஞ்சா இருந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது இருவரும் போலீசாரை மிரட்டினர். தொடர்ந்து போலீசார் யார் உங்களுக்கு கஞ்சா கொடுத்தது என முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்களை பார்க்க வந்த சிங்காநல்லூர் கக்கன் நகரை சேர்ந்த சேதுராமன், சூர்யபிரகாஷ் ஆகியோர் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து கொடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், தண்டனை கைதிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்த கொடுத்து சென்ற சேதுராமன், சூர்யபிரகாஷ் மற்றும் கைதிகள் முஜிபுர் ரகுமான், ரோஷன் பரீத் ஆகியோர் மீது போலீசார் போதைப்பொருள் தடுப்பு சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர்.
பெண் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து மகள்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு, திருமணமாகாத 35 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் வாலிபரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
சம்பவத்தன்று பெண்ணின் மகள்கள் வெளியே சென்று இருந்தனர். அப்போது வாலிபர் பெண்ணின் வீட்டிற்கு வந்தார். பின்னர் காலை 10 மணியளவில் பெண் தனது கள்ளக்காதலனுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார்.
மாலையில் தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் இருந்த பெண் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாலிபர் கதறி அழுதார்.
அப்போது வெளியே சென்று இருந்த பெண்ணின் மகள்கள் வீட்டிற்கு திரும்பினர். அவர்கள் தனது தாய் மயங்கி கிடப்பது கண்டு அதிர்ச்சிய டைந்தனர். மேலும் அவரது அருகில் வாலிபர் அழுது கொண்டு இருப்பதை பார்த்தனர்.
உடனடியாக மகள்கள் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.
உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பெண்ணை பரிசோதை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
- சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் தாசம்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் காதர்(வயது42). மருந்துக்கடை உரிமையாளர்.
இவரது மனைவி ஷர்மிலி(36). இவர்களது மகள் ரோஷினி(13). இவர் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 5-ந் தேதி டியூசன் சென்ற ரோஷினி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இதற்கிடையே மறுநாள் மாணவியின் காலணி மற்றும் சைக்கிள் ஆகியே ரெயில்வே கேட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கிடந்தது. போலீசார் அங்கு சென்று அதனை மீட்டனர்.
மேலும் மாணவி பவானி ஆற்றில் தவறி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு துறை உதவியுடன் ஆற்றில் இறங்கி தேடினர். நேற்று 2-வது நாளாக பவானி ஆற்றில் தேடும் பணி நடந்தது.
இந்த நிலையில் சிறுமுகை மூலத்துறை பவானி ஆற்றங்கரையில் உள்ள புதரில் ரோஷினி பிணமாக மீட்கப்பட்டார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு அவரது உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மாணவி கடந்த ஆண்டு வரை மெட்ரிக் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு அவரை மெட்ரிக் பள்ளியில் இருந்து மாற்றி சி.பி.எஸ்.இ பள்ளியில் சேர்த்து விட்டனர். பள்ளி மாறியதால், அவர் கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.






