என் மலர்
கோயம்புத்தூர்
- டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர்.
கோவை,
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 43 வயது வாலிபர்.
இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் டாஸ்மாக் விற்பனையாளரு க்கு, அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இந்த விவகாரம் டாஸ்மாக் விற்பனை மேலாளரின் மனைவிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது கணவரை கண்டித்தார். இருந்தபோதிலும் அவர் அதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண்ணுடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் விற்பனையாளர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு அவரின் கள்ளக்காதலி வந்தார்.
அவர் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு சத்தம் போட்டார். சத்தம் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளரும், அவரது மனைவியும் வெளியில் வந்த னர்.அப்போது இளம்பெண், டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவியை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசினார். இதை கேட்ட டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி அப்படி பேசாதே என்றார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி கொண்டிருந்தார்.
ஆனால் இதனை கண்டு கொள்ளாமல், டாஸ்மாக் விற்பனையாளர், இளம்பெண்ணுடன் சேர்ந்து கொண்டு தனது மனைவியை பார்த்து உன்னால் என் வாழ்க்கையில் நிம்மதி போச்சு என தெரிவித்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார்.இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து 2 பேரையும் விலக்கி விட்டு காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளரின் மனைவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டாஸ்மாக் விற்பனையாளர் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கியது உறுதியானது.
இதையடுத்து போலீசார் டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் அவரது கள்ளக்காதலியை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தின் சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து கோவை குற்றாலத்தில் குளித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கேரள மாநிலம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். எனவே சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. எனவே கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.
இதனை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதி அளித்து உள்ளது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்தனர். அங்கு உள்ள சோதனைச்சாவடியை கடந்து சென்று, கோவை குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கோவை குற்றாலத்தில் சுமார் ஒருமாதகால இடைவெளிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி தந்து உள்ளது. இது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பக்தர்கள் அனைவரும் ஹோம குண்டத்துக்கான மூலிகைகளை காணிக்கையாக செலுத்தினர்.
- அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
கவுண்டம்பாளையம்,
கோவை கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டம்பாளையத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது.
இங்கு உற்சவ விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஐம்பொன் சிலையில் உருவான பண்ணாரி மாரியம்மன் சிலையை கோவிலின் மூலஸ்தானத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 54 மூலிகைகள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. இதற்காக பக்தர்கள் அனைவரும் ஹோம குண்டத்துக்கான மூலிகைகளை காணிக்கையாக செலுத்தினர்.
அதன்பிறகு பூர்ணகுதி நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மன் விக்ரகத்திற்கு கண் திறப்பு, கண்ணாடியில் முகம் பார்க்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அப்போது பெண் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். பண்ணாரி அம்மன் கோவிலில் அம்மன் விக்ரத்திற்கு பஞ்சமிர்தம், நெய், தேன், பால், தயிர், திருமஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், திருநீர், பூக்கள் சகிதம் அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.
இதற்காக சத்தியமங்கலம் பண்ணாரியக்கன் கோவில், வனபத்திரகாளியம்மன் கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில், மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளக்கிணர் பெரியநாயகி அம்மன் கோவில், முத்தூர் செல்வகுமார் கோவில், காசி –ராமேஸ்வரம் கோவில், பொன்னர்-சங்கர் ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டது.
அவற்றின் மூலம் மாப்பிள்ளை விநாயகர், வில்வமரம், வேல், அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு தீர்த்தங்கள் ஊற்றப்பட்டன. அதன்பிறகு அம்மன் விக்ரகம் மற்றும் பண்ணாரி மாரியம்மனுக்கு அலங்கார பூஜை நடந்தது.
முன்னதாக கோவிலில் அரங்கேறிய வாய்கட்டு சுற்று பூஜையின் போது கலசம், சாட்டை, கத்தி, பழ வகைகள், பூக்கள், கண்ணாடி, திருநீறு வைக்கப்பட்டு பூசாரிகள் சன்னிதானத்தை சுற்றி வலம் வந்தனர். அதன்பிறகு உற்சவர் சுற்று பூஜை நடைபெற்றது.
- ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தாக்கினர்.
- உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 37 வயது பெண்.
இவருக்கு திருமணமாகி தனது கணவர் மற்றும் மகள்களுடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார்.
இளம்பெண் அந்த பகுதியில் உள்ள மில் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் லாரி டிரைவராக உள்ளார்.
இளம்பெண்ணின் கணவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்வதை வாடி க்கையாக வைத்து ள்ளார்.
சம்பவத்தன்று இளம்பெண் தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவரது கணவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டார்.
ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனது மனைவியை தர,தர வென இழுத்து வந்து ரோட்டில் போட்டு சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவரது உடைகளை களைந்து, அவரை அடித்து உதைத்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் ஓடி வந்து இளம்பெண்ணை மீட்டு மேட்டுப்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி, இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- வனத்துறையினர் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
- பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாகுபலி யானை சுற்றி திரிந்தது. இது அங்கு உள்ள விளைநிலங்களை தொடர்ந்து நாசப்படுத்தி வந்தது.
இந்த நிலையில் பாகுபலிக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. எனவே அதனை சுற்றி வளைத்து பிடித்து சிகிச்சை அளிப்பது என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து வனத்துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். அங்கு வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.
இந்த நிலையில் பாகுபலி யானை திடீரென அடர்ந்த காட்டுக்குள் சென்று மறைந்து விட்டது. எனவே அதனை தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே பாகுபலி யானைக்கு வாயில் இருந்த காயமும் குணமாகி விட்டது. இதனால் அந்த யானையை மயக்க மருந்து செலுத்தி பிடிக்கும் முயற்சியை வனத்துறை அதிகாரிகள் தற்காலிகமாக கைவிட்டு இருந்தனர்.
கோவையின் அடர்ந்த காட்டுக்குள் கடந்த 2 மாதங்களாக தங்கியிருந்த பாகுபலி யானை நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமுகை-மேட்டுப்பாளையம் ரோட்டுக்கு வந்தது. இதனை தற்செயலாக பார்த்த வனத்துறை ஊழியர்கள் அடர்ந்த காட்டுக்குள் விரட்டினர்.
இந்த நிலையில் பாகுபலி யானை நேற்று மேட்டுப்பாளையம்-குன்னூர் மெயின் ரோட்டுக்கு வந்தது. இதனை அந்த வழியாக சென்ற ஒருவர் நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி நடமாட்டம் பற்றிய தகவல் காட்டுத்தீயாக பரவியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அப்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் பாகுபலி யானை நடமாடி கொண்டு இருந்தது. எனவே அவர்கள் யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதியில் 2 மாதங்களுக்கு பிறகு பாகுபலி யானையின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்து இருப்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
- கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.
கோவை,
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று நிறைவு விழா நடைபெற்றது.
இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்.பி.பி.எஸ் மாணவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட கோவையில் உள்ள 5 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தாய்ப்பால் குறித்த வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரிக்கு சென்று தாய்ப்பால் குறித்து குழந்தைகள் நல துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை அரசு மருத்துவமனை முதல் ரேஸ்கோர்ஸ் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியவத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு புரியும் வகையில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நர்சிங் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ரங்கோலி வரைதல், ஸ்லோகன் எழுதுதல், போஸ்டர் தயாரிப்பு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை 484 பேர் மொத்தம் 1,280 லிட்டர் தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்த தாய்மார்கள் கவுரவிக்க ப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நலத்துறை தலைவர் லட்சுமணசாமி, பச்சிளங் குழந்தைகள் பிரிவு நோடல் அதிகாரி சசிகுமார் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு நிபுணர்கள் செந்தில்குமார், சத்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது.
- ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் காலை 7.10 மணியளவில் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் மலைரெயில் புறப்பட்டது. பயணிகள் வனங்களை ரசித்தபடியும், இயற்கை நீர்வீழ்ச்சிகளை பார்த்த படியும் ரெயிலில் பயணித்து கொண்டிருந்தனர்.
ஹில்குரோவ் பகுதியில் ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று நடந்து சென்றது. மேலும் ரெயிலை நோக்கியும் யானை வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதற்கிடையே மலை ரெயிலில் பயணித்தவர்கள், தண்டவாளத்தில் காட்டு யானை நிற்பதை பார்த்து அச்சம் அடைந்தனர்.
இருப்பினும் யானையை பார்த்த ஆர்வத்தில், ரெயிலில் இருந்தபடி அங்கு சுற்றி வந்த காட்டு யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
இதற்கிடையே யானை ரெயிலை மறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் யானை அந்த இடத்தை விட்டு நகரவில்லை. 10 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் அடர்ந்த காட்டுக்குள் திரும்பி சென்றது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் யானை ரெயிலை மறித்த வீடியோவை பயணிகள் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடவே தற்போது அது வைரலாகி வருகிறது.
- சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
- மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.
குனியமுத்தூர்:
சுதந்திர தினம் வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி தற்போது சுதந்திர தின நிகழ்ச்சிகள் களைகட்ட தொடங்கி உள்ளன.
இதன் ஒருபகுதியாக கோவையை சேர்ந்த வாலிபர் ஒருவர் சீதாப்பழத்தில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட 20 தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தி உள்ளார்.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் ராஜா.
ஓவியரான இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். தற்போது சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களை ஓவியமாக வரைய விரும்பினார்.
அதுவும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என யோசித்த அவர், சீதாப்பழத்தில் 20 தலைவர்களின் ஓவியத்தை வரைந்தால் என்ன என்ற யோசனை அவருக்கு தோன்றியது.
இதையடுத்து அவர் சீதாப்பழங்களை வாங்கி வந்தார். அதில் பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய வண்ணங்களை கொண்டு தலைவர்களின் படம் மற்றும் தேசியை கொடியை வரைந்தார்.
ஒவ்வொரு சீதாப்பழத்திலும் ஒவ்வொரு தலைவர்களின் படங்களை வரைந்தார். அதன்படி சீத்தாப்பழத்தில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், சுப்பிரமணிய பாரதியார், விவேகானந்தர், வீரபாண்டி கட்டப்பொம்மன், வேலுநாச்சியார், வ.உ.சிதம்பரனார், மருது பாண்டியர், அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பகத்சிங், ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபாய்படேல், பாலகங்காதர திலகர், அப்துல்கலாம், சந்திரசேகர ஆசாத், காமராஜர், ராதாகிருஷ்ணன், லாலா லஜபதிராய், அபுல்கலாம் ஆசாத் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.
இதுகுறித்து ஓவியர் ராஜா கூறியதாவது:-
சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் வித்தியாசமாக ஓவியங்கள் வரைந்து வருகிறேன்.
இதற்கு முன்பாக மூங்கில், பேட்டரி செல், தங்கம், மெழுகு, மாத்திரை மற்றும் மாம்பழம் ஆகியவற்றில் ஓவியங்கள் வரைந்து சாதனை படைத்து உள்ளேன்.
அந்த வகையில் நடப்பாண்டும் இளைஞர்கள் மத்தியில் தேசத்தலைவர்கள் மற்றும் தேசப்பற்றை நினைவுகூரும் வகையில் சீத்தாப்பழத்தில் தேசியக்கொடிகளுடன் 20 தலைவர்களின் படங்களை ஓவியமாக வரைந்து உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜமேஷா முபின் தலைமையில் முகமது இத்ரிஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.
- முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலரை சந்தித்து பேசியுள்ளார்.
கோவை:
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய ஜமேஷா முபின் உயிரிழந்தான்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 11 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி, சமீபத்தில் என்.ஐ.ஏ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ் (வயது 25) கைது செய்யப்பட்டார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினின் நெருங்கிய கூட்டாளியாகவும், அவரது வலது கரமாகவும் முகமது இத்ரிஸ் செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் இவர் இந்து கோவில்களை தகர்ப்பது, இந்து தலைவர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் செயல்பட்டது தெரியவந்தது. அவரை கைது செய்தபோது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
அந்த செல்போன்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் பல முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர். மேலும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் இவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான முகமது இத்ரிஸ் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்ற தகவல் தெரியவந்துள்ளது.
முகமது இத்ரிஸ் செல்போனை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்குரிய சில செல்போன் எண்கள் இருந்தன. அது யாருடையது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
ஜமேஷா முபின் தலைமையில் முகமது இத்ரிஸ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பதில் முகமது இத்ரிஸ் திறமைசாலியாக இருந்துள்ளார்.
குறுகிய நேரத்தில் வெடிகுண்டை தயாரித்து காட்டி அங்கிருந்தவர்களிடம் பாராட்டினை பெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இதுதொடர்பான தகவல்கள் அனைத்தும் அவரது செல்போனில் உள்ளது. மேலும் அவர்களுக்கு பலர் நிதியுதவி செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான தகவல்களையும் கைப்பற்றியுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
மேலும் முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது நெருங்கிய கூட்டாளிகள் சிலரை சந்தித்து பேசியுள்ளார். மேலும் சிலரை செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர்களிடம் ஏதாவது தெரிவித்தாரா? என்பதை அறிய அவருடன் பேசியவர்கள் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் அவர்களை தேடும் பணியையும் தொடங்கி உள்ளனர்.
- அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
- ஆடை சுதந்திரம் இருக்கலாம், மனிதராக பிறந்துள்ளதால் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும்.
கோவை:
கோவை பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-
கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமை கொள்கிறேன். அவரைப் பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
ஆடை சுதந்திரம் இருக்கலாம், மனிதராக பிறந்துள்ளதால் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும். எனக்கான எல்லை என்பது புடவை அணிவதுதான் என்றார்.
- தினேஷ்குமார். லோடு ஆட்டோ டிரைவராக உள்ளார்.
- தினேஷ்குமார் மனைவியின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கினார்.
கோவை,
கோவை ரத்தினபுரி அருகே உள்ள கந்தசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். லோடு ஆட்டோ டிரைவர். திருமணமாகி மனைவி மற்றும் குந்தைகள் உள்ளனர்.இந்தநிலையில் தினேஷ்குமாருக்கு வேறு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்து. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர் தினசரி கள்ளக்காதலியின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலம் தினேஷ்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் தனது கணவரை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று குடிபோதையில் தினேஷ்குமார் வீட்டிற்கு வந்தார். அவர் தனது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கினார். இதனையடுத்து அவர் அருகே உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார்.அப்போது வீட்டில் தனியாக இருந்த தினேஷ்குமார் மனைவியின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தினேஷ்குமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தினேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
சிறுமுகை அருகே உள்ள ஆலாங்கொம்பை சேர்ந்தவர் பழனிசாமி (48). இவர் அவரது மகள் ஹேமலதாவுடன் (18) மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிள் ஆலாங்கொம்பு ரோட்டில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஹேமலதா, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மேட்டுப்பாளையம் பாரதியார் நகரை சேர்ந்த பர்கான் (16), முகமது அனாஸ் (18) ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






