நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி- கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாபயணிகள்

கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
நீர்வரத்து குறைந்ததால் குளிக்க அனுமதி- கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாபயணிகள்
Published on

கோவை,

கோவை மாவட்டத்தின் சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து கோவை குற்றாலத்தில் குளித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கேரள மாநிலம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். எனவே சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. எனவே கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

இதனை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதி அளித்து உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்தனர். அங்கு உள்ள சோதனைச்சாவடியை கடந்து சென்று, கோவை குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

கோவை குற்றாலத்தில் சுமார் ஒருமாதகால இடைவெளிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி தந்து உள்ளது. இது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com