என் மலர்
கோயம்புத்தூர்
- கடந்த 7ந்தேதி முதல் வருகிற 22ந்தேதிவரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
- மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மேலாண்மைக்குழுவை வலுப்படுத்தவும், அரசு பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதிசெய்யவும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடந்த 7ந்தேதி முதல் வருகிற 22ந்தேதிவரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.
அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளை சேர்ந்த 198 உறுப்பினர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 உறுப்பினர்கள் ஆகியோருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்ஒருபகுதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கருத்தாளர்களான ஆசிரியர்கள் சுபிதா, ரம்யா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா, பிரேமா ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி தர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.
- காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்கியது.
- மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் இன்று ஆடிக்கிருத்திகை வழிபாடு நடந்தது.
வடவள்ளி,
ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிருத்திகை என அழைக்கப்படுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது.
அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோ பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சாமிக்கு 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் தங்க கவசம் சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராஜஅலங்காரத்தில் சுப்பிரமணிய சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவர் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். இதேபோல மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி சுப்பிரமணியர் கோவிலை வலம் வருகிறார்.
ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்து நின்று சுவாமியை பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர். பக்தர்கள் வருகையால் மலையடிவாரத்தில் வாகன நெரிசலும் காணப்பட்டது.
கணுவாயை அடுத்த அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது. சுப்பிரமணியர் படம் வைக்கப்பட்ட சிறிய தேர் கோவிலை சுற்றி வலம் வந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடி வலம் வந்தனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல குருந்த மலை முருகன் கோவில், குமரன் குன்று முருகன் கோவில், காந்தி பார்க் பாலதண்டாயுதபாணி கோவில் என மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் இன்று ஆடிக்கிருத்திகை வழிபாடு நடந்தது.
- தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர்.
- தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாக பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார்.
கோவை,
மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்தல் வேண்டும் என கூறப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்கள் வீடுகளுக்குள்ளாகவே அடைபட்டு கிடந்தனர். அவர்களும் படித்து நல்ல நிலையை அடைய பலர் போராடினர். போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் பலரும் படித்து பற்பல சாதனைகளை படைத்து வருகின்றனர்.
தற்காலத்தில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து மிக பெரும் சாதனைகளை படைத்து வருகின்றனர் பெண்கள்.
தாங்கள் எந்த துறையில் பணியாற்றினாலும், அதனை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். அதற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தொழில் நகரமான கோவையில் குற்ற சம்பவங்களை நடக்காமல் தடுக்கவும், குற்றம் செய்தவர்களை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொடுக்கும் பணியை போலீசார் சிறப்பாக செய்து வருகின்றனர்.
குறிப்பாக எந்தவொரு குற்ற சம்பவங்களும் நடைபெறாத வண்ணம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் பதவிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்களே அதிகளவில் இருந்தனர்.
தற்போது கோவை மாவட்ட போலீஸ் உயர் பதவிகளை பெண்களும் அலங்கரித்து வருகின்றனர். கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரிஷ்மா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றி வரும் பிருந்தா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களின் இன்ஸ்பெக்டர்களாகவும் பெண்கள் அதிகளவில் அந்த பதவிகளை அலங்கரிக்கின்றனர்.
அவர்கள் அந்த பதவியில் இருந்து தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காப்பது, குற்ற சம்பவங்களை தடுப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அடிக்கடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடமும் குற்ற சம்பவங்கள் குறித்தும், பாலியல் ரீதியிலான குற்றங்கள் குறித்தும் விரிவாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, தற்போது மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாகவே ஒரு பெண் ஐ.பி.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மேற்குமண்டலம் என்பது, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளுக்கு எல்லாம் ஐ.ஜி.யாக இருந்து எந்தவிதமான குற்றசம்பவங்களும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்பட பல்வேறு வேலைகளை செய்ய வேண்டியது இவரது கடமையாகும்.
இந்த உயர்ந்த பதவியில் தான் தற்போது பவானிஸ்வரி என்ற பெண் ஐ.பி.எஸ்.அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். அவர் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு அளிப்பதே தனது முக்கிய பணி என தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மேற்கு மண்டலத்தில் எந்தவித குற்ற சம்பவங்கள் நடந்தாலும், அதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் எந்தவித பாகுபாடுமின்றி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஜி., டி.எஸ்.பி. பதவிகளை தவிர இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பிலும், நிறைய பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இப்படி உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளிலும் கோவை மாவட்ட போலீசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது பொதுமக்களிடையேயும், பெண்களிடையேயும் அதிகமாக வரவேற்பினை பெற்றுள்ளது. இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், தாமும் இதுபோன்று சாதித்து உயர் பதவியை அடைய ஒரு உந்துதலாகவும் இருக்கும்.
இதுதொடர்பாக பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- கோவையில் போலீஸ் உயர் பதவிகளை பெண்கள் அலங்கரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் வரவேற்கத்தக்கது. பெண் போலீஸ் உயர் அதிகாரிகளாக பணியாற்றி வருபவர்கள், பெண்களின் உரிமைகளையும், பெண்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்துவார்கள் என நம்புகிறோம். யாருக்கும், யாரும் சளைத்தவர்கள் அல்ல. எல்லோரும் ஒன்று என்ற வழியில் பெண்களாலும் எல்லா துறையிலும் திறம்பட பணியாற்ற முடியும் என்பதையே இது காட்டுகிறது. எனவே அனைத்து பெண்களும் தங்கள் வாழ்வில் சாதித்து, உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றனர்.
- கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் அடிவாரத்தில் 500 படிகள் ஏறி தான் கோவிலுக்கு செல்ல முடியும்.
- வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகளை தொடங்க திட்டம்
கோவை,
கோவை மாவட்டத்தில் மலை மீது உள்ள முருகன் கோவில்களில் ஒன்று அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விழா, தைப்பூச விழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த கோவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ளது. கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் அடிவாரத்தில் 500 படிகள் ஏறி தான் கோவிலுக்கு செல்ல முடியும்.
500 படிகள் ஏறி செல்ல வேண்டி இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருப்பது போல் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதலில் அந்த மலையில் ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அரசு சார்ந்த நிறுவனமான இட்காட் நிறுவன என்ஜினீயர்கள் குழுவினர் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆய்வ றிக்கை சமர்ப்பித்தனர். அதில் அனுவாவி கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனால் பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை யினரின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் வனத்துறை யினரின் அனுமதியும் கிடைத்து விடும் என கூறப்படுகிறது. அதன்பிறகு ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் முறைப்படி தொடங்க உள்ளது.
- தனியார் வேலைவாய்ப்பு முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.
- இத்தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளார்.
கோவை,
கோவையில் சிங்காநல்லூர் திருமண மண்டபத்தில் வருகிற 12-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.
இதில் வேலைவாய்ப்பு மட்டுமின்றி சுயதொழில் செய்வோருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி மற்றும் தொழில்திறன் மேம்பாட்டு பயிற்சிகள் ஆகியவை தரப்பட உள்ளன.
எனவே கோவை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, கல்வி சான்றிதழ் மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி தெரிவித்து உள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கோவை,
பீகார் மாநிலம் நாளந்தா புன்னா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 24). இவரது நண்பர்கள் ரஞ்சித்குமார் சவுத்ரி(22), சந்தோஷ்குமார் சவுத்ரி (17).
இவர்கள் 3 பேரும் கோவை சூலூர் அருகே உள்ள செங்கோட கவுண்டன்புதூர் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தனர்.அதே பகுதியில் பீகாரை சேர்ந்த உகான் சவுத்ரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகியோரும் வசித்து வந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ்குமார், மற்றும் உகான் சவுத்ரி கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, ராஜேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கினர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் உயிரிழந்து விட்டார். மற்ற 2 பேரும் காயம் அடைந்தனர்.
இதையடுத்து உகான் சவுத்ரி மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து ராஜேஷ்குமார் சூலூர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக சூலூர் போலீசார் உகான் சவுத்திரி, கணேஷ் மாஞ்சி, சந்து மாஞ்சி, சங்கர் மாஞ்சி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய உகான் சவுத்திரி, சங்கர் மாஞ்சி ஆகிய 2 பேரை கைது செய்தனர். சந்து மாஞ்சி, கணேஷ் மாஞ்சி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் பீகாரில் இருப்பதாக சூலூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தலைமறைவான குற்றவாளிகளை தேடி கோவயைில் இருந்து பீகாருக்கு விரைந்துள்ளனர். அங்கு உள்ளூர் போலீசார் உதவியுடன் குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
- கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது.
- பஸ், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு தொடங்கியது.
கோவை,
சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
கோவையில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திர தின விழா நடக்கிறது. விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பங்கேற்று தேசிய கொடியினை ஏற்றி வைக்க உள்ளார்.
தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்வதுடன், நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநகர் பகுதிகளில் 1,700 போலீசாரும், புறநகரில் 800 போலீசார் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
குறிப்பாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட்டுகள், கோவில்கள், தேவாலயங்கள், பள்ளி வாசல்கள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.அங்கு போலீசார் 24 மணி நேரமும் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மார்க்கெ ட்டுகள், பஸ் நிலையங்களில் அடிக்கடி ரோந்து சென்று வருகின்றனர்.
அங்கு யாராவது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர். அவர்களின் முகவரியை பெற்ற பின்னரே அவர்களை விடுவிக்கின்றனர். மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் பஸ் நிலையங்கள் முழுவதும் சோதனை செய்யப்படுகிறது.
கோவையில் கடந்த சில தினங்களாகவே போலீஸ் கண்காணிப்பும், ரோந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றன்.
இதுதவிர மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள், மேன்சன்கள் ஆகியவற்றிலும் அடிக்கடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி இருந்தால் பிடித்தும் விசாரித்தும் வருகின்றனர்.
கோவையில் உள்ள கோவை சந்திப்பு ரெயில் நிலையம், போத்தனூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அங்கு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலைய வளாகம், ரெயில் பெட்டிகள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் அடிக்கடி ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரெயில் நிலையத்திற்கு வருபவர்களின் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. சோதனைக்கு பின்னரே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர சுதந்திர தினத்தையொட்டி வன்முறையை தூண்டும் வகையிலும், மத மற்றும் சாதி மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பதிவு செய்யப்படுவதை தடுக்க சைபர் குற்றப்பிரிவு மற்றும் உளவுத்துறையினரும் சமூக வலைதளங்களை கண்காணித்து வருகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் பலகட்ட சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படு கின்றனர்.
- மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.
- போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டின் அருகே உறவினரான முகமது விபின்சன் (வயது 31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
உறவினர் என்பதால் சிறுமியின் வீட்டிற்கு முகமது விபின்சன் அடிக்கடி சென்று வந்தார். சிறுமியும் உறவினர் என்பதால் அவருடன் பேசி வந்தார்.
இந்த நிலையில் முகமது விபின்சன் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்துள்ளார்.
இருந்த போதிலும் அவர், மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவியும் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு மாணவி, தனது தாயாருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து மறுநாள் காலை மாணவியிடம் அவரது தாயார் இரவில் ஏன் அப்படி சத்தம் போட்டாய் என்று கேட்டார். அதன்பின்னரே மாணவி தனக்கு நேர்ந்த அனைத்தையும் தாயிடம் தெரிவித்தார்.இதை கேட்டதும் அதிர்ச்சியான மாணவியின் தாய், சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், முகமது விபின்சன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
- தோண்டிய பள்ளத்தை ஊழியர்கள் சரிவர மூடவில்லை என்று தெரிகிறது.
- பஸ்சில் பயணித்தவர்கள் இன்னொரு வாகனத்தில் ஏற்றி விடப்பட்டனர்.
குனியமுத்தூர்,
கோவை மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை போத்தனூர் ெரயில்வே மண்டபம் அருகில், குடிநீர்குழாய் பதிப்பதற்காக ரோட்டில் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. அப்படி தோண்டிய பள்ளத்தை ஊழியர்கள் சரிவர மூடவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் அரசு பஸ் அந்த வழியாக சென்றது. அப்போது ரோட்டின் பள்ளத்தில் பஸ் சிக்கி கொண்டது. இதில் பஸ்சின் முன்சக்கரம் பூமிக்குள் புதைந்தது.
எனவே அந்த பஸ்சில் பயணித்தவர்கள் இன்னொரு வாகனத்தில் ஏற்றி விடப்பட்டனர். அதன்பிறகு ரோட்டின் பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரோட்டின் பள்ளத்தில் அரசு பஸ் சிக்கியதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- புறநகர் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- ஒரு தெருவில் 10 குடிநீர் இணைப்பு இருந்தால், அதில் 5 குடிநீர் குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது.
நாம் வாழும் வாழ்க்கையில் குடிநீர் மிகவும் இன்றியமையாததாகும். வறுமையில் வாடுபவர்கள் கூட ஒரு நேரம் சாப்பாடு இல்லாவிட்டாலும் தண்ணீரை குடித்தாவது வாழ்ந்து விடுவோம் என்று சொல்வதையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
உணவு, பொருள் என எது இல்லை என்றாலும் நம்மால் உலகில் வாழ்ந்து விட முடியும். ஆனால் குடிக்க ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வாழவே முடியாது. இது தான் நிதர்சனமான உண்மையாகும். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் குடிநீர் மிகவும் முக்கியமானது என்பது யாராலும் மறுக்க முடியாது.
ஒரு காலத்தில் கோவை மாநகர பகுதிகளில் தினமும், புறநகர் பகுதிகளில் வாரம் ஒரு முறையும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக மாநகர பகுதியில் வாரம் ஒரு முறையும், புறநகர் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்படி தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகவே பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் தண்ணீர் முறையாக வருவதும் கிடையாது. இந்த சமயங்களில் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
கோவை சுந்தராபுரத்தை அடுத்துள்ளது பிள்ளையார்புரம். மலை மேல் அடுத்தடுத்து நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ள இப்பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
நாகராஜபுரம் வீதி 1, நாகராஜபுரம் வீதி 2, சித்தி விநாயகர் கோவில் வீதி, ராஜீவ் காந்தி நகர், ஸ்ரீ முருகன் நகர், காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளும் இதில் அடங்கும்.இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இங்குள்ள வீதிகளை உற்று நோக்கும் போது, வீதி ஓரங்களில் ஆங்காங்கே காலி குடங்கள் வரிசைப்படுத்தி அடுக்கி வைத்திருக்கும் காட்சியை காண முடிகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
இங்கு வாழும் அனைவரும் அன்றாடம் தின கூலி வேலைக்கு செல்பவர்கள். குடிநீர் எப்போது வந்தாலும், பிடித்து விட்டு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் குடிநீர் எப்போது வருகிறது என்பதே தெரியவில்லை. வரும், வரும் என காத்திருந்து, இலவு காத்த கிளியாகவே நாங்கள் மாறிவிட்டோம். மாதத்திற்கு ஒரு முறை தான் எங்களது பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
உப்புத் தண்ணீர் 20 நாட்களுக்கு ஒரு முறை வருகிறது. அதுவும் குழாயில் குடிநீர் குறைந்த அளவே வருகிறது. ஒரு தெருவில் 10 குடிநீர் இணைப்பு இருந்தால், அதில் 5 குடிநீர் குழாயில் மட்டுமே தண்ணீர் வருகிறது.
மீதி 5 குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எத்தனையோ முறை தெரிவித்து விட்டோம். ஆனால் இதுவரை யாரும் செவிசாய்க்கவில்லை. ஒரு சில பகுதிகளில் மாநகராட்சி மூலம் லாரி தண்ணீரை விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால் எங்களுக்கு அந்த வசதியும் செய்து தரவில்லை.
கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு வரை இந்த பிரச்சனை கிடையாது. ஆனால் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. சாதாரண பகுதியில் வாழும் பொதுமக்கள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக சென்று தண்ணீர் கொண்டு வந்து விடுவார்கள்.ஆனால் மலைமீது வாழ்ந்து வரும் எங்களுக்கு அது கேள்விக்குறியே. இருந்தபோதிலும் நாங்கள் மோட்டார் சைக்கிள், சைக்கிள் உள்ளிட்டவற்றில் 5 கி.மீ தூரம் சென்று தண்ணீரை எடுத்து வருகிறோம்.
நாங்கள் அனைவரும் கட்டிட வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். குடிநீர் பிரச்சினை காரணமாக எங்களது வேலைக்கும் செல்ல முடிவதில்லை. தினமும் முழு நேர சம்பளம் வாங்க முடியாமல்,குடும்பத்தை கழிக்க முடியாமல் மிகவும் திணறி வருகிறோம். எனவே இந்த அவல நிலை மாற குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் எங்களது ஓரே கோரிக்கையாகும்.
அப்படி இந்த பிரச்சினைக்கு முடிவு கிடைக்கவில்லையென்றால் ஊரை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- இந்த ஆண்டுக்கான 12-வது ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
கோவை,
கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதூர் பிரிவில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 12-வது ஆடிக்குண்டம் திருவிழா வருகிற 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் குண்டம் திருவிழா தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து குண்டம் திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டு, காப்பு கட்டப்படுகிறது. 12-ந் தேதி(சனிக்கிழமை) காலை 5 மணிக்கு அஷ்டபுஜ காலபைரவ ஹோமமும், பக்தர்கள் காப்புகட்டுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 13-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) குத்துவிளக்கு பூஜையும், 14-ந் தேதி(திங்கட்கிழமை) திருவாபரணம் திருசீர்வரிசை கொண்டு வருதல், திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் குண்டம் பற்ற வைத்த நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வருகிற 15-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கரகம், பூவோடு, பால்குடம் எடுத்து வீதி
- ராஜேந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.
- ராஜேந்திரன் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவை.
கோவை பீளமேடு புதூர் திருமகள் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது58). இவர் கடந்த 3-ந் தேதி தனது மனைவியுடன் சொந்த வேலை காரணமாக பெங்களூருவுக்கு சென்றார்.
2 நாட்களுக்கு முன்பு தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தார்.
அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு காமிரா ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் தாமோதரன் என்பவரை போனில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார்.
இதையடுத்து அவரும் சென்று பார்த்து விட்டு வீடு பூட்டி இருப்பதாகவே தெரிவித்தார். இருந்தாலும் சந்தேகம் அடைந்த, ராஜேந்திரன் மறுநாள் புறப்பட்டு கோவைக்கு வந்து விட்டார். வீட்டை திறந்து சென்று உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் உள்ள பின்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையடுத்து வீட்டில் உள்ள அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 36 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் ரொக்க பணம் மாயமாகி இருந்தது. இவர் வெளி ஊர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து பணம், நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரரைண நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் குமார்(59). இவரும் சம்பவத்தன்று வீட்டை பூட்டி வெளியில் சென்றார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை, மற்றும் 1 லட்சம் ரொக்க பணமும் கொள்ளை போயிருந்தது.
இதேபோல், கோவை கணபதி, எப் சி ஐ ரோடு, பாலு கார்டனை சேர்ந்த பியோ ராபர்ட் (31) என்பவரது வீட்டில் 11.25 பவுன் தங்க நகை திருட்டு போனது. கோவை போத்தநூர் ஜோதி நகரை சேர்ந்த வெங்கட்ரமணி (46) என்பவரது வீட்டில் ரூபாய்.6000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் திருட்டில் ஈடுபட்டு வருவதும், ஒரே நாளில் 56.70 சவரன் நகை திருட்டு போய் இருப்பது கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






