என் மலர்
கோயம்புத்தூர்
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
- தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.
கோவை,
கேரளா மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. கேரளா மட்டு மின்றி அதனையொட்டிய கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஏராள மான மலையாளிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த ஒருவார மாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் மலர்கள் மற்றும் வாழைத்தார்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.
கோவை தடாகம் ரோட்டில் வாழைக்காய் மண்டி இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழ தார்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், கடலூர், குளித்தலை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் பெருமளவில் வாழைத்தா ர்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.கோவை தடாகம் வாழைக்காய் மண்டியில் ஒரு கிலோ பழங்களின் விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை): நேத்திரம் வாழைப்பழம்-55 (40), செவ்வாழை-60 (45), பூவம்பழம்-40 (25), கற்பூரவள்ளி-50 (30), கதலி-70 (50).
கோவை ஆர்.எஸ்.புரம் மலர்ச்சந்தையிலும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை சற்று அதிகரித்து உள்ளது. அங்கு ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல செவ்வந்தி ரூ.160, ரோஜா-ரூ.160 என்று விற்பனையாகிறது.
கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் இதர பூக்களின் விலை விவரம் பின்வருமாறு (ஒரு கிலோ வுக்கு):- செண்டுமல்லி-50, சம்பங்கி-120, அரளி-100, மருது ஒரு கட்டு-10, வாடாமல்லி-80, துளசி ஒரு கட்டு-40, கோழிக்கொ ண்டை-100, தாமரைப்பூ ஒன்று-15, மரிக்கொழுந்து ஒரு கட்டு-20, முல்லை-400, சவுக்கு ஒரு கட்டு-50.
கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்துக்கு பூக்கள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் தான் மார்க்கெ ட்டுகளில் அவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டா ட்டத்துக்கு பிறகு தான் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
- இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
- இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கணபதி, தெய்வநாயகி நகர், 3-வது வீதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (56). இவர் தனது மனைவி மற்றும் மகன்கள் பிரேம், ஸ்டீபன் ஆகியோருடன் வசித்து வரு கிறார்.
ஆரோக்கியசாமி கணபதி பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வெள்ளக்கிணறு பகுதியில் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆரோக்கியசாமி சனிக்கிழமை வியாபாரம் முடித்து அன்று வசூலான பணத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்து உள்ளார். அதன்பிறகு குடும்பத்தினருடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் இன்று அதிகாலை ஊர் திரும்பியபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அங்கு துணிமணிகள் இறைந்து கிடந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அதில் இருந்த ரூ.1.72 லட்சம் மற்றும் 30 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.
இதுகுறித்து ஆரோக்கியசாமி சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஆரோக்கியசாமி வீட்டில் கைரேகை பதிவுகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேக்கரி அதிபர் வீட்டுக்குள் எத்தனை பேர் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தட்டிக்கேட்ட கணவரை மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர்.
- இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
வடவள்ளி
கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் 35 வயது முன்னாள் ராணுவ வீரர்.
இவர் தற்போது வடவள்ளியில் உள்ள தனியார் ஓட்டலில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டார்.
நேற்று இரவு முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, அவரது வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர்.
அவர்கள் வீட்டின் அருகே வந்ததும், அங்கு நின்றிருந்த முன்னாள் ராணுவ வீரரின் மனைவியை பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டிற்கு வந்த ராணுவ வீரர் தனது மனைவியிடம் வாலிபர்கள் தகராறு செய்வதை பார்த்து ஓடி வந்து, வாலிபர்களிடம் பேசினார்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து அவரிடமும் தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினர். இதில் அவருக்கு கழுத்து, முகத்தில் காயம் ஏற்பட்டது.
இதை பார்த்த இளம்பெண் தனது கணவரை காப்பாற்ற சென்ற போது, இளம்பெண்ணையும் தாக்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் குளத்து பாளையம் விஸ்வநாதபுரத்தை சேர்ந்த கண்ணதாசன்(20), வடவள்ளி பொம்மனம்பாளையம் பால சபரிஸ்(22), வடவள்ளி சிறுவாணி சாலை கமலேஷ்(27) என்பதும், போதையில் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் அவர்கள் மீது 4 பிரிவில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
- ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்தார்
- முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம்,
காரமடை நகராட்சி க்குட்பட்ட காமராஜர் நகர், காந்தி நகர், அம்பேத்கர் நகர், வாணியர் வீதி, அண்ணா வீதி, அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலைஞரின் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய தார் சாலைகள் அமைத்தல், தார் சாலைகளை புதுப்பித்தல், புதிதாக போர்வெல் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. திமுக துணைப்பொது செயலாளரும், நீலகிரி எம்.பி. யுமான ஆ.ராசா கலந்து கொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. பா.அருண்குமார், திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட அவைத்தலைவர் புருஷோத்தமன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மனோகரன், நகர செயலாளர் வெங்கடேஷ், நகர் மன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தன.
- கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
கோவை
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று ள்ளனர். பொள்ளாச்சி சேரன் நகர் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 68). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி (61). மகன் விஷ்ணு (32).
குழந்தைவேலின் மூத்த மகள் கவிதா என்பவர் கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் புதிதாக வீடு கட்டி உள்ளார். அந்த வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதற்காக குழந்தைவேல், வீட்டை பூட்டி விட்டு விழாவுக்கு சென்று விட்டார்.
4 நாட்களுக்கு பிறகு பொள்ளாச்சிக்கு திரும்பிச் சென்றார். அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோ மற்றும் மேஜை ஆகியவை உடைக்கப்பட்டு அதில் தங்க மற்றும் வெள்ளி நகைககள் கொள்ளையடி க்கப்பட்டு இருந்தது. கம்மல், செயின், தங்க நாணயம், வளையல் உள்பட 10¾ பவுன் தங்க நகையும், வெள்ளி குங்கும சிமிழ், சந்தன கிண்ணம் ஆகிய வையும் கொள்ளை போய் இருந்தது.
இதுபற்றி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ்நி லையத்தில் குழந்தைவேல் புகார் செய்தார். இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் நேரில் சென்று விசாரணை மேற்ெகாண்டார். தொடர்ந்து கொள்ளை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
- கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணத்துக்கடவு,
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளை யம் பிரிவை சேர்ந்தவர் ெஜயா ஹரி (வயது23).
இவர் தனது தாய் மகேஸ்வரி, தங்ைக நந்தினி ஆகியோருடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் சொந்தமாக காய்கறி கடையும் நடத்தி வந்தார்.கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜெயாஹரி விபத்து ஒன்றில் காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி மாலை வீட்டில் இருந்த ஜெயாஹரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதை பார்த்த அவரது தாயார் மகேஸ்வரி, தனது மகனை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டதால் சுய நினைவை இழந்து விட்டது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையே அவரது கிட்னி மற்றும் கல்லீரல் ஆகியவை செயலிழந்து விட்டதாக தெரிவித்த டாக்டர்கள் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஜெயாஹரி இறந்து விட்டார்.
இதுகுறித்து கிணத்து க்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். விசாரணை யில், ஜெயாஹரி செல்போனில் உள்ள ஆன்லைன் லோன் ஆப் மூலம் தனது வியாபாரத்திற்காக கடன் பெற்றதும், இதற்காக அவர் முன்பணமும் செலுத்தியதும் தெரியவந்தது. இதனால் அவரை அந்த ஆன்லைன் லோன் ஆப் நிறுவனத்தை சேர்ந்த யாராவது செல்போனில் தொடர்பு கொண்டு கடனை திருப்பி கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியிருக்க வாய்ப்பு ள்ளது.இதன் காரணமாகவே அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்திரு க்கலாம் என்றும், அப்போது அளவுக்கு அதிகமாக மாத்திரை களை தின்று தற்கொலை செய்திருக்கலாம் எனவும் பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து போலீசார் அவர் கடன் வாங்கியது உண்மை தானா? அவரை யாராவது மிரட்டினரா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
-
திருப்பூர் மாவட்டம் கரடிவாவி மல்லே கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாராம் (42). இவர் தனது நண்பர்களான அன்னூரைச்சேர்ந்த வேல்மு ருகன் (33), அமீனுல்லா (45), பிரவீன் குமார் (32) உள்ளி ட்டோருடன் காரில் ஊட்டி க்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் நேற்று இரவு அவர்கள் மீண்டும் காரில் ஊர் திரும்பி கொண்டு இருந்தனர். காரை சாந்தாராம் ஓட்டி வந்தார். பர்லியார் மரப்பாலம் அருகேவந்தபோது கார் திடீரென விபத்துக்கு ள்ளானது. கார் நிலை தடுமாறி வலது புற தடுப்பு ச்சுவரில் மோதி சுமார் 20 அடி பள்ள த்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
இதனையடுத்து அக்கம்ப க்கத்தினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் பின்புறம் அமர்ந்திருந்த பிரவீன் குமார் என்பவர் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
படுகாயமடைந்த சாந்தாராம், வேல்முருகன், அமீனுல்லா உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
- கொள்ளையர்களை பிடிக்க விடிய, விடிய தனிப்படை போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.
கோவை,
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணம் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது.
இது குறித்து பாதிக்க ப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்காக மாநகர போலீஸ் சார்பில், 7 தனிப்ப டைகள் அமைக்கப்பட் டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்க ளை தேடி வருகின்றனர்.
மேலும் செயின் பறிப்பு சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிரா க்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு 2-வது நாளாக வாகன சோதனை தீவிரப்படுத்தப்ப ட்டது. பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிர ரோந்து பணிகள் மேற்கொ ள்ளப்ப ட்டு வருகிறது.
மேலும் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ரத்தினபுரி, என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் விடிய, விடிய வாகன சோதனை நடத்தப்பட்டது. வாகனங்களில் வருபவர்க ளிடம் தீவிர விசாரணை நடத்தி, அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வந்தனர்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
பொள்ளாச்சி,
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம்பட்டி மாகாளி யம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). கூலித் தொழிலாளி.
இவருக்கு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதன் காரணமாக ரஞ்சித்குமார் கடந்த சில வருடங்களாக அந்த பகுதி யில் தனியாக வசித்து வந்தார்.
இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த கோபாலகி ருஷ்ணன் (38). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவி ல்லை. இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரஞ்சித்கு மாருக்கு தேவையான உதவிகளை அவர் செய்து வந்தார்.
வார விடுமுறை நாட்களில் இவர்கள் 2 பேரும் ரஞ்சித்குமாரின் வீட்டில் வைத்து ஒன்றாக மது குடிப்பதும், ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றுவதும் வழக்கம்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் ரஞ்சித்குமார் மது வாங்கி கொண்டு, கோபால்கிருஷ்ணன் வீட்டிற்கு சென்றார். அங்கு 2 பேரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்தினர்.
அப்போது ரஞ்சித்குமார், கோபாலகிருஷ்ணனின் தாய் பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. ஒருவ ரையொருவர் சரமாரி யாக தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த கோபாலகிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியில் வந்தார்.
தனது தாயை திட்டியதால் ஆத்திரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், வீட்டின் முன்பு கிடந்த கல்லை எடுத்து கொண்டு உள்ளே சென்று, ரஞ்சித்குமாரை தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்குமார் ரத்த வெள்ள த்தில் மயங்கி கீழே விழு ந்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத கோபால கிருஷ்ணன் கல்லால் ரஞ்சித்குமாரின் முகத்திலும் சரமாரியாக தாக்கினார்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித்குமார் இறந்து விட்டதால் அதிர்ச்சியான கோபாலகிருஷ்ணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
பின்னர் தனது உறவினர் ஒருவரை போனில் தொடர்பு கொண்டு நடந்த சம்ப வங்களை தெரிவி த்தார். அவர் உடனடியாக கோட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ரஞ்சித்கு மாரின் உடலை பார்வை யிட்டு, விசாரணை மேற்கொ ண்டனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொல்ல ப்பட்டது உறுதியானது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கொலை செய்து விட்டு தப்பியோடிய கோபாலகிருஷ்ணனை தேடி வந்தனர்.இந்த நிலையில் கோபால கிருஷ்ணன், அந்த பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே விரைந்து சென்று போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது தனது தாயை பற்றி தவறாக பேசியதால் அடித்து கொன்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகி றார்கள்.மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன்.
கோவை:
தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான எழுத்து தேர்வு நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியிலும் இந்த தேர்வானது நடந்தது. அங்குள்ள மையத்தில் ஏராளமானோர் இந்த தேர்வினை எழுதினர்.
அப்போது ஒரு தேர்வறையில் இருந்த வாலிபர் ஒரு கருப்பு கலரில் வித்தியாசமான முறையில் முக கவசம் அணிந்திருந்தார். முக கவசம் என்பதால் கண்காணிப்பாளர்களும் விட்டு விட்டனர்.
சிறிது நேரத்தில் அறைக்குள் இருந்து வித்தியாசமான குரல் கேட்டது. இது அங்கு பணியில் இருந்த கண்காணிப்பாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கண்காணிப்பாளர்கள், ஒவ்வொரு தேர்வர்களின் அருகிலும் சென்று சோதனை செய்தனர். அப்போது முக கவசம் அணிந்திருந்த வாலிபர் அருகில் தான் அந்த சத்தம் வந்தது தெரியவந்தது.
உடனே கண்காணிப்பாளர்கள் அந்த வாலிபரை அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வாலிபர், காதில் சிம்கார்டுன் கூடிய வாய்ஸ் மீட்டரை (ஹெட்போன்) வைத்திருந்தார்.
அதன்மூலம் வெளியில் இருந்து இவருக்கு ஒருவர் பதில் சொல்ல, அதனை கேட்டு, இவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வாய்ஸ் மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியது, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பச்சூரை சேர்ந்த நவீன் (வயது26) என்பது தெரியவந்தது.
இவர் கோவை கோவைப்புதூரில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதி வருகிறேன்.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வினை 3 முறை எழுதியும் ஒரு சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டேன். இந்த முறை எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.
அதற்காக வாய்ஸ்மீட்டரை பயன்படுத்தி எழுதலாம் என முடிவு செய்தேன். அதன்படி தேர்வு அன்று, எனது தங்கை தேர்வறைக்கு வெளியில் இருந்து பதில்களை சொல்ல சொல்ல, அதனை வாய்ஸ் மீட்டர் வழியாக கேட்டு நான் தேர்வு எழுதினேன் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் பயிற்சி காவலர் நவீன் மற்றும் அவருக்கு உதவிய தங்கை சித்ரலேகா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட பயிற்சி காவலர் நவீனை சஸ்பெண்டு செய்து கோவைப்புதூர் போலீஸ் பயிற்சி மைய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
- ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்
- கோவையில் மல்லி ரூ.800க்கு விற்பனையாகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் பூ மார்க்கெட், மேட்டுப்பா–ளையம், வால்பாறை, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர்ச்சந்தைகள் இயங்கி வருகின்றன.
இங்கு உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை விற்பனைக்கு கெர்ண்டு வருகின்றனர். மேலும் வெளியூர் மாநிலம்-மார்க்கெட்டுகளில் இருந்து பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் வசிக்கும் மலையாளிகள் அத்தப்பூ கோலமிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் கல்லூரிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூக்கோலத்தை பார்க்க முடிகிறது.
கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது வறண்ட வானிலை நிலவுகிறது. போதியஅளவில் மழை இல்லை. எனவே அங்கு பூக்களின் விளைச்சல் குறைந்து உள்ளது.
மேலும் கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன்கணக்கில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கோவைக்கு மலர்வரத்து குறைந்து உள்ளது.
இதன்காரணமாக கோவை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அங்கு தற்போது ஒரு கிலோ மல்லி ரூ.800க்கு விற்கப்படுகிறது. அதேபோல ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்பனை–யாகிறது. இருந்தபோதிலும் ஓணம் பண்டிகை என்பதால் பொதுமக்கள் விலைஉயர்வு பற்றி கவலைப்படாமல் பூக்களை கிலோக்கணக்கில் வாங்கி செல்கின்றனர்.
கோவை பூ மார்க்கெட்டில் விற்பனை–யாகும் பூக்களின் விவரம் (கிலோவுக்கு): செவ்வந்தி-160, செண்டு மல்லி-50, சம்பங்கி-120, அரளி-120, ஒரு கட்டு மருகு-10, வாடாமல்லி-80, ரோஜா-240, மரிக்கொழுந்து-30, துளசி-40, கலர் செவ்வந்தி-240, வெள்ளை செவ்வந்தி-200, மஞ்சள் செவ்வந்தி-100, ஜாதிப்பூ-400, கோழிக்கொண்டை-100, ஒரு தாமரைப்பூ-20, முல்லை-400.
இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், கோவை மலர்ச்சந்தைக்கு பூக்களின் வரத்து போதிய அளவில் இல்லை. உற்பத்தியும் சற்று குறைந்து உள்ளது. ஓணம் பண்டிகைக்காக பெருமளவில் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
எனவே கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை உயர்ந்து உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை முடிந்தபிறகு கோவை மார்க்கெட்டுகளில் பூக்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு என்று தெரிவித்து உள்ளனர்.
- தற்போது ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.
- அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டத்தில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு உள்ளூர் விவசாயிகள் தங்கள் தோட்டம் மற்றும் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
கோவை மார்க்கெட் மற்றும் காய்கறி சந்தைகளில் இஞ்சி விலை கிடுகிடுவென அதிகரித்தது.
தற்போதும் ஒரு கிலோ இஞ்சி ரூ.110 முதல் அதிகபட்சமாக ரூ.225 வரை விற்கப்பட்டு வருகிறது.
கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் கொடைக்கானல், ஊட்டி பகுதியில் இருந்து வரும் பச்சை பட்டாணி ரூ.110 முதல் ரு.194 வரையும், ஊட்டி அவரை ரு.110 முதல் ரூ.120 வரையும், சுண்டைக்காய் ரு.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோவை மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கோவையில் தற்போது வெயில் அதிகளவில் உள்ளதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவை மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது.
கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில வாரங்களில் இஞ்சி அதிகளவில் சாகுபடி செய்வதற்கான பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது இஞ்சியின் விலை கட்டுக்குள் வந்து விடும் என்று தெரிவித்தனர்.






