search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் வாழைத்தார் விலை உயர்வு
    X

    ஓணம் பண்டிகையையொட்டி கோவையில் வாழைத்தார் விலை உயர்வு

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
    • தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை,

    கேரளா மாநிலத்தில் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டா டப்படுகிறது. கேரளா மட்டு மின்றி அதனையொட்டிய கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் ஏராள மான மலையாளிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த ஒருவார மாக ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பெருமளவில் மலர்கள் மற்றும் வாழைத்தார்கள் ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவை மாவட்டத்தில் தற்போது பூக்கள் மற்றும் பழங்களின் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    கோவை தடாகம் ரோட்டில் வாழைக்காய் மண்டி இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் விவசாயிகள் தோட்டத்தில் விளைந்த வாழைப்பழ தார்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் சத்தியமங்கலம், கடலூர், குளித்தலை, கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும் பெருமளவில் வாழைத்தா ர்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வாழைத்தார்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் வாழைத்தார்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.கோவை தடாகம் வாழைக்காய் மண்டியில் ஒரு கிலோ பழங்களின் விலை விவரம் வருமாறு (அடைப்புக்குறிக்குள் நேற்றைய விலை): நேத்திரம் வாழைப்பழம்-55 (40), செவ்வாழை-60 (45), பூவம்பழம்-40 (25), கற்பூரவள்ளி-50 (30), கதலி-70 (50).

    கோவை ஆர்.எஸ்.புரம் மலர்ச்சந்தையிலும் பூக்களின் வரத்து குறைவு காரணமாக அவற்றின் விலை சற்று அதிகரித்து உள்ளது. அங்கு ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ.400-க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல செவ்வந்தி ரூ.160, ரோஜா-ரூ.160 என்று விற்பனையாகிறது.

    கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் இதர பூக்களின் விலை விவரம் பின்வருமாறு (ஒரு கிலோ வுக்கு):- செண்டுமல்லி-50, சம்பங்கி-120, அரளி-100, மருது ஒரு கட்டு-10, வாடாமல்லி-80, துளசி ஒரு கட்டு-40, கோழிக்கொ ண்டை-100, தாமரைப்பூ ஒன்று-15, மரிக்கொழுந்து ஒரு கட்டு-20, முல்லை-400, சவுக்கு ஒரு கட்டு-50.

    கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக கோவை மாவட்டத்துக்கு பூக்கள் மற்றும் பழங்களின் வரத்து குறைந்து உள்ளது. இதனால் தான் மார்க்கெ ட்டுகளில் அவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. ஓணம் பண்டிகை கொண்டா ட்டத்துக்கு பிறகு தான் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளில் பூக்கள் மற்றும் பழங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×