என் மலர்
கோயம்புத்தூர்
- மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் வரத்து அதிகரிப்பு
- ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.700-க்கு விற்பனை
கோவை,
கோவை மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வகையான மீன்கள் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
எனவே உக்கடம் சந்தைக்கு தினமும் 3 டன்கள் மட்டுமே மீன்கள் வந்தன. இதனால் உக்கடம் மார்க்கெட்டில் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.1000-க்கு விற்பனை ஆனது. இதேபோல பாறை-ரூ.400- க்கு விற்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகம், கேரளாவில் தற்போது மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்து உள்ளது. எனவே மீனவர்கள் மறுபடி யும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்தததால் கோவை உக்கடம் மார்க்கெட்டுக்கு தினமும் 15 டன் என்ற அளவில் மீன்களின் வரத்து அதிகரித்து உள்ளது.
இதன்கா ரணமாக அங்கு மீன்களின் விலை தற்போது கணிசமாக குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் விலை விவரம் (ஒரு கிலோ): வஞ்சிரம்-ரூ.700, பாறை-ரூ.200, கருப்பு வாவல்-ரூ.400, வெள்ளை வாவல்-ரூ.600, ஊழி-ரூ.150, மத்தி-ரூ.100, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.180, செம்மீன்-ரூ.300.
- மருமகள் மீது சந்தேகம் இருப்பதாக புகார்
- அன்னூர் போலீசார் தீவிர விசாரணை
கோவை,
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் 38 வயது வாலிபர். இவர் ேகாவையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வாலிபர் அன்னூர் அருகே இரும்புக்கடை நடத்தி வந்தார். இங்கேயே சொந்த வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
திடீரென வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கம்பத்தில் வசிக்கும் வாலிபரின் பெற்றோருக்கு அவரது மனைவி செல்போனில் பேசி உள்ளார். உங்கள் மகனுக்கு உடல் நலம் சரியில்லை எனவும், ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். அதன்பின்னர் மகன் இறந்து விட்டதாக அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் செல்போனில் பேசி தகவல் தெரிவித்துள்ளார்.
திடீரென வாலிபர் இறந்ததால் அவரது இறப்பில் சந் தேகம் இருப்பதாக கூறி வாலிபரின் தந்தை தற்போது அன்னூர் போலீஸ்நிலை யத்தில் புகார் செய்துள்ளார்.
புகாரில் அவர் கூறியிருப்பதவாது:-
எனது மகன் இறந்ததாக தெரிவித்ததும் வயதான எங்களால் கோவைக்கு வர முடியாது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டோம். அதன்படி எனது மகன் உடலை எங்கள் ஊருக்கு கொண்டு வந்தனர். அப்போது எனது மருமகளும் உடன் வந்தார். அந்தசமயம் மருமகளிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. தொடர்ந்து மகனின் உடலை அடக்கம் செய்து விட்டோம்.
மகன் இறந்து 30-வது நாள் நிகழ்ச்சிக்கு மருமகளை வரும்படி கூறி இருந்தோம். அவரும் வந்தார். ஆனால் அவருடன் ஓமியோபதி டாக்டர் வருவர் வந்திருந்தார். அந்த டாக்டருக்கும், எனது மருமகளுக்கும் உள்ள பழக்கத்தில் தான் குடும்பத்தில் பிரச்சினை இருந்ததாக அக்கம்பக்கத்தினர் மூலம் நான் அறிந்திருந்தேன்.
எனது மருமகள், அந்த டாக்டரை உடன் அழைத்து வந்திருந்ததால் எனது மகனின் மரணத்தில் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து எனது மகனை எதுவும் செய்து இருப்பார்களோ என சந்தேகிக்கிக்க தோன்றுகிறது. இதனால் எனது மகன் உடலை சட்டப்படி தோண்டி எடுத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பாப்பம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் மூதாட்டி படுகொலை
- எதிர்தரப்பை சேர்ந்த சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை
கோவை,
கோவை கணியூர் கங்கா லட்சுமி தோட்டம் பகுதியை சேர்ந்த கணபதியப்பன் மனைவி பாப்பம்மாள் (வயது 72). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி க்கொன்றது.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட போது அவரது கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலி எதுவும் பறிக்கப்படவில்லை. பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ஆகியவையும் கொள்ளை போகவில்லை. எனவே கொள்ளையர்கள் பணத்துக்காக மூதாட்டியை படுகொலை செய்யவில்லை என்பது தெரியவந்து உள்ளது.
தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்று உள்ள காட்சிப்ப திவுகளை ஆய்வுசெய்து பார்த்தனர். இதில் மூதாட்டியை கொன்றவர்கள் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.
எனவே சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி வீட்டுக்கு வந்து சென்ற பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மூதாட்டி குடும்பத்தினரிடமும் போலீசார் விசாரித்தனர்.
பழனியப்பன் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி பெயரில் சொத்து ஒன்றை வாங்கி உள்ளனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே மேற்கண்ட விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் அந்த வழக்கில் பாப்பம்மாளுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தான் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே சொத்து விவகாரம் காரணமாக பாப்பம்மாள் கொல்லப்பட்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனால் எதிர்தரப்பை சேர்ந்த சிலரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அவர்களிடமும் பாப்பம்மாள் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள் கைவரிசை
- மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை
கோவை,
பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் திவ்யாவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.
வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்த மேகனா (17). சம்பவத்தன்று இவர் தெப்பக்குளம் வீதியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் மேகனாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.
இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சு உள்பட 2 பேரிடம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன்களை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல புலியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (31). இவர் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள துணிக்கடை முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் வெங்கடேஸ்வரனிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- அணையை சுற்றி பார்க்க குடை பிடித்து செல்ல வேண்டி உள்ளது
- கூட்டம் இல்லாததால் படகு சவாரியும் ரத்து
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பகுதியில் பெரிய அணைக்கட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எழில்மிகு பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆழியாறு அணைக் கட்டுக்கு வந்திருந்து, அங்கு உள்ள பூங்காவில் பொழுதுபோக்குவதுடன், அணைக்கட்டு பகுதியில் படகு சவாரி சென்றும் மகிழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை காலங்களில் ஆழியாறு அணையில் சுற்றுலா பபணிகள் கூட்டம் அலை மோதும்.
பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அங்கு உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே ஆழியாறு அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.
ஆழியாறு பகுதியில் வெயில் கொளுத்துவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அணைக் கட்டுக்கு தினமும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் தற்போது நாள்தோறும் 300-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே ஆழியாறு அணைக் கட்டு பகுதியில் உள்ள பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணி களின் வரத்து குறைவு காரணமாக அணைக்கட்டு பகுதியில் படகு சவாரியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது.
எனவே சுற்றுலா பபணிகளின் வருகை குறைந்து உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து மீண்டும் குளுமை திரும்பினால் ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பபணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
- போக்சோ வழக்கில் கைதாகி தஞ்சாவூர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவன்
- மேட்டுப்பாளையம் பஸ்சுக்குள் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
கோவை,
தஞ்சாவூர் அருகே உள்ள சோழன் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி போக்சோ வழக்கில் வைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 23-ந் தேதி தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுவன் கடந்த 31-ந் தேதி மதியம் 1 மணி யளவில் பள்ளியில் இருந்து தப்பி வெளியே வந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சீர்திருத்த பள்ளி யில் இருந்து தப்பிய சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் சிறுவன் திருப்பூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பஸ்சில் செல்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், இதுகுறித்து கோவை மேட்டுப்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் போலீசார் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சிறுவனை போலீசார் பஸ்சில் வைத்து மீண்டும் கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.
- மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கி உள்ளது.
கோவை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பா.ஜ.க. முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது.
கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தலை அ.தி.மு.க., த.மா.கா. போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கை தந்துள்ளோம். மத்திய அரசு தமிழகத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கி உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா 400 தொகுதிகளில் வெற்றி பெறும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது பா.ஜ.க.வினரை குறிவைத்து கூலிப்படை வைத்து கொல்கிறார்கள். திமுக கூலிப்படை ஏவி விடுகிறது. மாணவர்களுக்கு காலை உணவு தந்த தனியார் அமைப்பை தி.மு.க. நிறுத்தியது ஏன்? மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என தி.மு.க. சொந்தம் கொண்டாடாமல் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.
சீமானின் சவாலுக்கு பாரதிய ஜனதா தயார். 10 சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுவோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், தி.மு.க.வை எதிர்க்க சீமான் வேண்டும்.
கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று முதலில் கூறிய தமிழக காவல்துறைக்கும், தி.மு.க. அரசிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை. தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் கவர்னர் கையெழுத்திட கூடாது.
தி.மு.க.வினர் வாயால் வடை சுடுகிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் 39-க்கு 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம்.
- 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம்.
ஈஷாவுக்கு எதிரான பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளிப்பதற்காக ஈஷா சார்பில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவையின் மிக முக்கிய ஆன்மீக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். அந்த வகையில், ஆதியோகி சிலை அமைப்பதற்கு அனுமதி கோரி நாங்கள் 2016-ம் ஆண்டே விண்ணப்பித்துவிட்டோம்.
எங்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறைகளின் ஆய்வு அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் சிலை அமைப்பதற்கு 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆதியோகி சிலை திறப்பை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்ற தவறான உள்நோக்கத்துடன் ஒரு அமைப்பு உயர்நீதிமன்றத்தில் ஈஷாவிற்கு எதிராக 2017-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கும் கடந்த மாதம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
எனவே, எவ்வித அனுமதியும் இன்றி ஆதியோகி சிலை கட்டப்பட்டுள்ளது என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. அதுமட்டுமில்லாமல், இந்த விஷயத்தில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஆதியோகி என்பது ஒரு சிலை; அது கட்டிடம் அல்ல. சிலை வைப்பதற்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் தான் உள்ளது. DTCP-யின் அனுமதி வரம்பிற்குள் இது வராது. எனவே தான், DTCP தங்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதை நாங்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகளிடமும் எடுத்துரைத்துவிட்டோம். அதனால் தான் இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் நிறைவு பெற்றுள்ளது. அத்துடன், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எங்களிடம் உள்ள ஆவணங்களை நகரமைப்பு திட்டமிடல் துறையிடம் சமர்ப்பித்துவிட்டோம்" என்றார்.
மலைவாழ் மக்களுக்கு சொந்தமான 44 ஏக்கர் நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதாக பரப்பப்படும் பொய் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்கும்போது, "ஈஷா யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. அவர்கள் குறிப்பிடும் 44 ஏக்கர் நிலம் ஈஷாவின் பெயரில் இருப்பதை நிரூபித்தால் இப்போதே அதை திருப்பி கொடுக்க தயாராக உள்ளோம். இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் அந்த 44 ஏக்கரில் ஈஷா எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்பது தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
யானை வழித்தடம் மற்றும் யானை வாழ்விடத்தை ஆக்கிரமித்து ஈஷாவின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்கும்போது, ஈஷா யானை வழித்தடத்தில் இல்லை என்பதை நிரூபிக்கும் 5 வெவ்வேறு ஆதாரங்களை அவர் முன் வைத்தார்.
தமிழக வனத்துறையின் RTI தகவல், தமிழக வனத்துறை அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அறிக்கை, இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (WWF) அறிக்கை மற்றும் இந்திய வனவிலங்கு அறக்கட்டளையின் (WTI) ஆய்வு அறிக்கைகள் முறையே 2005 & 2017 ஆகிய அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்பட வேண்டிய யானை வழித்தடங்கள் குறித்தான ஆய்வு அறிக்கைகள் எதிலும் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி வரவில்லை என்று ஆணித்தரமாக கூறினார்.
இதுதவிர, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி, வனத்தை அழித்து ஆதியோகி சிலை கட்டப்பட்டதாக கூறப்படும் பொய் குற்றச்சாட்டு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்ற வெற்று அவதூறுகள் என்பதை நிரூபிக்கும் விதமாக அதற்குரிய ஆவணங்களையும், ஆதாரங்களையும் அவர் செய்தியாளர்களிடம் வழங்கினார்.
- கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர்.
- கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார்.
கோவை:
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார்.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்த இவர் காரில் வெடிபொருட்களை நிரப்பி வெடிக்கச் செய்து கோவையில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் நிறைவேறாமல் தான் தீட்டிய சதியில் தானே சிக்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான முபினுடன் நெருங்கி பழகியவர்கள், கார் வாங்கி கொடுத்தவர்கள், வெடிபொருட்கள் வாங்கி கொடுத்தவர்கள், சதி திட்டம் தீட்டியவர்கள் என இதுவரை 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதன்பிறகும் தொடர்ந்து சோதனை, விசாரணை என வழக்கு நீண்டுகொண்டே செல்கிறது. இந்தநிலையில் கோவை உக்கடம் அன்புநகரைச் சேர்ந்த முகமது அசாருதீன் (36) என்பவருக்கு கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர் சில காலம் டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
அதன்பிறகு ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் இருந்தாலும் இவருக்கு கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கிலும் தொடர்பு இருந்ததை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன்பேரிலேயே நேற்று முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கைதான முகமது அசாருதீன் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவர் ஜஹ்ரான் பின் காசிம் என்பவர். ஐ.எஸ். சித்தாந்த எண்ணம் கொண்ட இவரால் தற்போது கைதாகி உள்ள முகமது அசாருதீன் ஈர்க்கப்பட்டு உள்ளார். அதன்பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அவருடன் அசாருதீன் தொடர்பில் இருந்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்புக்கு பின் ஐ.எஸ். ஆதரவாளர்களை பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தென்னிந்தியா முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் நடத்தப்பட்ட சோதனையில் முகமது அசாருதீன் சிக்கினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விய்யூரில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கோவை கார் குண்டு வெடிப்பில் பலியான முபின் மற்றும் 2 கூட்டாளிகள் கேரள ஜெயிலில் இருந்து அசாருதீனை அடிக்கடி சந்தித்து பேசி உள்ளனர். அப்போது கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மேலும் சத்தியமங்கலம் காட்டில் முபினும், அவரது கூட்டாளிகளும் ரகசிய கூட்டம் நடத்தி கார் குண்டுவெடிப்பு பற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது கேரள சிறையை தகர்த்து முகமது அசாருதீனை மீட்டுக் கொண்டு வந்து விடலாம் எனவும் அவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
கார் குண்டு வெடிப்பு வழக்கில் முகமது அசாருதீன் 13-வது நபராக கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் மேலும் சிலர் கைது ஆவார்கள் என தெரிகிறது.
- வெல்டிங் வைக்கப்பட்ட லாரி பெட்ரோல், ஆயில் உள்ளிட்ட வேதிபொருட்களை ஏற்றி செல்லக்கூடிய லாரியாகும்.
- மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஒர்க்ஷாப் உள்ளது. இங்கு உத்தரபிரதேசத்தை சேர்ந்த வக்கீஸ் (வயது38), ரவி ஆகியோர் அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தனர்.
இந்த ஒர்க்ஷாப்பிற்கு கடந்த 29-ந் தேதி இரவு ஒரு டேங்கர் லாரி வந்தது. அந்த லாரியின் டிரைவர் லாரியில் வெல்டிங் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
30-ந் தேதி காலையில் வக்கீஸ் மற்றும் ரவி ஆகியோர் டேங்கர் லாரிக்குள் இறங்கி வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வக்கீஸ், ரவி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த வக்கீஸ், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ரவி பலத்த காயங்களுடன் மதுக்கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
வெல்டிங் வைக்கப்பட்ட லாரி பெட்ரோல், ஆயில் உள்ளிட்ட வேதிபொருட்களை ஏற்றி செல்லக்கூடிய லாரியாகும். வெல்டிங் பணிக்கு காலியாக தான் வந்துள்ளது. இருந்த போதிலும் வேதிபொருட்கள் ஏற்றிய லாரி என்பதால், வெல்டிங் வைக்கும் போது தீப்பொறி பட்டு இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
- பெண்ணின் அண்ணன் நண்பருடன் சேர்ந்து சரமாரி அடிஉதை
- கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறியதால் போலீசில் புகார்
கோவை,
கோவை அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பாபு (வயது 22). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் இளம்பண்ணுக்கு தேவையான உதவிகளை பாபு செய்து வந்தார்.
இந்த நிலையில் தொழிலாளி இளம் பெண்ணுடன் சேர்ந்து தனது செல்போனில் செல்பி எடுத்து வைத்திருந்தார் இதனை இளம் பெண்ணின் அண்ணன் பார்த்து பாபுவை கண்டித்தார்.
அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து இளம் பெண்ணின் அண்ணன் பாபுவை உப்பு தோட்டம் பகுதிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து பாபுவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவர் டாக்டர்களிடம் நான் கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறினார். ஆனால் டாக்டர்களுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து டாக்டர்கள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் பாபுவிடம் விசாரணை நடத்திய போது இளம் பெண்ணுடன் செல்பி எடுத்ததால் ஆத்திரம் அடைந்து அவரது அண்ணன் அவரது நண்பருடன் சேர்ந்து தாக்கியது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைக்க வலியுறுத்தல்
- கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம், கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு
கோவை,
கோயம்புத்தூர் கிரில் தயாரிப்பாளர் நல சங்கமான கோஜிம்வா தலைவரும், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட கிரில் தொழில் கூட்டமைப்பு நெட்கோபியா ஒருங்கிணை ப்பாளருமான திருமலை எம்.ரவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியிடம் தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எங்கள் அமைப்பு சார்பில் மனு அளித்தோம். அதில் விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வழங்குவது போல, கிரில் தயாரிப்பு கூடங்களுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் விசைத்தறிக்கூ டங்களுக்கு தற்போது 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..
விசைத்தறிக் கூடங்களைப் போலவே கிரில் தயாரிப்பு கூடங்களும் கூலிக்கு தொழில் செய்யும் நிலையில் தான் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சொத்து வரி ,தொழில் வரி, மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், மூலப்பொருட்கள் விலை ஆகியவை உயர்ந்து உள்ளது. இதனால் கிரில் தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.
எனவே வாடி க்கை யாளர்க ளிடம் விலை உயர்வை கட்டாய ப்படுத்தி திணிக்க வேண்டிய சூழ லில் உள்ளோம். இதனால் எங்க ளுக்கு ஆர்டர்கள் குறைந்து பல லட்சம் தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரில் தொழிலாளர்கள் நலம் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,. மேலும் பயிற்சி பெற்ற கிரில் தொழிலாளருக்கு பற்றாக்குறை இருப்பதால், அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டர், கிரில் வெல்டர் பாடதிட்டங்களை புதிதாக தொடங்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சியுடன் ஊதியமும் வழங்க தயாராக உள்ளோம்.
மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாகவோ, எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ள பீக் ஹவர் மின்சார கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.






