search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் ஒரே நாளில் போலீஸ்காரர்- நர்சு  உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
    X

    பொள்ளாச்சியில் ஒரே நாளில் போலீஸ்காரர்- நர்சு உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு

    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 வாலிபர்கள் கைவரிசை
    • மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை

    கோவை,

    பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள நெல்லித்துறையை சேர்ந்தவர் திவ்யா (வயது 25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் திவ்யாவிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர்.

    வள்ளியம்மாள் லே-அவுட்டை சேர்ந்த மேகனா (17). சம்பவத்தன்று இவர் தெப்பக்குளம் வீதியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் மேகனாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர்.

    இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்சு உள்பட 2 பேரிடம் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன்களை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    இதேபோல புலியம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (31). இவர் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் எல்.ஐ.சி. காலனியில் உள்ள துணிக்கடை முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் வெங்கடேஸ்வரனிடம் இருந்து செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவர் மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×