சிறுவர் ஜெயிலில் இருந்து தப்பிய 17 வயது சிறுவன்

போக்சோ வழக்கில் கைதாகி தஞ்சாவூர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவன் மேட்டுப்பாளையம் பஸ்சுக்குள் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்
சிறுவர் ஜெயிலில் இருந்து தப்பிய 17 வயது சிறுவன்
Published on

கோவை,

தஞ்சாவூர் அருகே உள்ள சோழன் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர் கடந்த மாதம் 17-ந் தேதி போக்சோ வழக்கில் வைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடந்த 23-ந் தேதி தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

சீர்திருத்த பள்ளியில் இருந்த சிறுவன் கடந்த 31-ந் தேதி மதியம் 1 மணி யளவில் பள்ளியில் இருந்து தப்பி வெளியே வந்தார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சீர்திருத்த பள்ளி யில் இருந்து தப்பிய சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுவன் திருப்பூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் பஸ்சில் செல்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், இதுகுறித்து கோவை மேட்டுப்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரிவித்தார்.

மேட்டுப்பாளையம் போலீசார் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது சிறுவனை போலீசார் பஸ்சில் வைத்து மீண்டும் கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com