என் மலர்
கோயம்புத்தூர்
- மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் காலியானதால் அந்த வழியாக சென்றவர்கள் உதவி செய்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை அருகே உள்ள குரும்பபாளையம் வையாபுரி நகரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மகன் அருணகிரிதரன் (வயது 23). இவர் தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் எம்.பி.ஏ., 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டியில் உள்ள நண்பர்களை பார்ப்ப தற்காக சென்றார். பின்னர் வீட்டிற்கு புறப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் கோவை- சத்தி ரோட்டி கரட்டுமேடு அருகே சென்ற போது பெட்ரோல் காலியானது.
இதனையடுத்து அருண கிரிதரன் மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அருணகிரிதரனுக்கு உதவி செய்தனர்.
அவர்கள் மோட்டார் சைக்கிளை டோக் செய்து சென்றனர். அப்போது அவர் அருணகிரிதரன் கழுத்தில் அணிந்து இருந்த 1 அரை பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து கல்லூரி மாணவரிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- இஸ்ரோ விஞ்ஞானிகள், விண்வெளி ஆய்வாளர்கள் பங்கேற்கிறார்கள்
- விண்வெளி தொடர்பான கண்காட்சியையும் நுழைவு கட்டணம் எதுவுமின்றி கண்டுகளிக்கலாம்.
கோவை,
உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு சதீஷ் தவான் விண்வெளி மையம், ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), கோவையில் இயங்கி வரும் கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளன. வருகிற 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி வளா கத்தில் உள்ள முனைவர் ஆறுச்சாமி கலைய ரங்கத்தில் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. நிகழ்ச்சியில் மூதறிஞர்கள் மற்றும் விண்வெளி ஆய் வாளர்களின் சொற்பொ ழிவுகளும், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலும் இடம்பெற உள்ளன.
3 நாட்கள் நடக்கும் விண்வெளி தொடர்பான காணொலி காட்சிகளையும், விண்வெளி தொடர்பான கண்காட்சியையும் நுழைவு கட்டணம் எதுவுமின்றி கண்டுகளிக்கலாம். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
5 மற்றும் 6-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ ர்களுக்கான போட்டிகள் நுழைவுக்கட்டணம் இல்லாமல் நடைபெற உள்ளது. 5 -ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு 1 முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்க ளுக்கு வண்ணம் தீட்டல் போட்டியும், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி- வினா, எழுத்துப் போட்டியும் நடைபெற உள்ளது.
6-ந் தேதி காலை 10 மணி அளவில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுவெராட்டி, வண்ணம் தீட்டல் போட்டி, தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி மற்றும் விண்வெளி தொடர்பான மாதிரி, விண்வெளி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மாதிரிகளை உருவாக்கும் நேரடி மாதிரி வடிவமைப்பு போட்டிகள் நடைபெற உள்ளன.
6-ந் தேதி காலை 10.30 மணி முதல் 2 மணி அளவில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு ேபாட்டி நேரடி மாதிரி வடிவமைப்பு போட்டிகளும் நடைபெற உள்ளன. போட்டிகள் குறித்த விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல்களை www.kongunaducollege.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் நிறைவு விழா 7-ந் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
- சீறிப்பாய்ந்து வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் பாதசாரிகளை அச்சப்படுகின்றனர்.
- சிங்காநல்லூர் சந்திப்பில் விபத்து ஏற்படாமல் சாலையை கடக்க போலீசார் வழிகாட்ட வேண்டும்
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூரில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிங்காநல்லூர் பகுதி எப்போதும் பரபர ப்பாக காணப்படும். வாக னங்களும் அதிகளவில் சென்று கொண்டிருக்கும்.இந்த நிலையில் கோவை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகைகளில், அதிகப்படியான சிக்னல்களில் ரவுண்டான முறை போக்கு வரத்து போலீசாரால் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கோவை மாநகரில் அதி கப்படியான சிக்னல்களில் போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் தங்கு தடை என்று சென்று வருகிறது. அதேபோன்று சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் பகுதியிலும் ரவுண்டானா முறை அமல்படுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதி போக்குவரத்து நெருக்கடி இன்றி வாகனங்கள் சீராக சென்று கொண்டிருக்கிறது.
அதே சமயம் இடைவெளி இன்றி வரிசையாக வாகனங்கள் வந்து கொண்டி ருப்பதால், பொதுமக்கள் சாலையின் இடதுபுறம் இருந்து வலது புறமும், வலது புறம் இருந்து இடது புறமும் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து நிற்கும் நிலையை காண முடிகிறது.
ஒரு சில பாதசாரிகள் பொறுமை இழந்து, சாலையில் வாகனங்கள் வருவதை பொருட்படு த்தாமல் ஓடி சென்று கடக்க முற்படுகின்றனர். அந்த சமயங்களில் விபத்துக்களும் நிகழ வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:-
கோவை மாநகர் முழுவதும் சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.ஆனால் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால், ஆங்காங்கே சிக்னல்களை அகற்றி, ரவுண்டானா முறை அமுல்படுத்தப்பட்டது. இது வரவேற்க கூடியது தான்.
இருந்த போதிலும், சாலையை கடக்கும் பொதுமக்களின் நிலையை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது. ஏனெனில் சிக்னல் ஏதும் இன்றி, தங்கு தடையின்றி வேகமாக சீறிப்பாய்ந்து வரும் வாகனங்கள், சாலையை கடக்க முயலும் பாதசாரிகளை அச்சப்படுத்துவது மட்டுமின்றி நீண்ட நேரம் காக்க வைக்கவும் செய்கிறது.
அதுவும் காலை மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகள் ஆகியோர் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே இது போன்ற பகுதிகளில் போக்குவரத்து போலீசார் நின்று கொண்டு, பாதசாரிகளுக்கு சாலையை கடப்பதற்கு வழிவகை செய்தால் பேருதவியாக இருக்கும். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளையும் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
- மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை,
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மின்வாரியம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட கு.வடமதுரை, சீரக்கநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக புயல், வெள்ளத்தால் ஏற்படும் மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
இடி- மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்றவைகளில் தஞ்சம் அடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, நிழற்குடையிலோ தஞ்சம் அடையக் கூடாது. திறந்தவெளியில் உள்ள ஜன்னல்கள், கதவு ஆகியவற்றின் அருகே நிற்க கூடாது.
இடி-மின்னலின் போது தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகே நிற்க கூடாது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தாங்களாகவே பழுதை சரி செய்ய முயற்சி செய்யக்கூடாது.
மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும், மிதிக்காமலும் இருப்பதுடன் மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
ஈரமான கைகளால் ஸ்விட்சுகளை தொடக்கூடாது. ஸ்டே கம்பிகள் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கயிறு கட்டி துணி காய வைத்தல் மற்றும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கம்பங்களில் கட்டுதல் போன்ற செயல்களை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மூதாட்டி வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டு இருந்தார்.
- சூலூர் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள ஜெர்மன் கார்டனை சேர்ந்தவர கந்தசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 74).
சம்பவத்தன்று இவர் வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டு இரு ந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கி ளில் 2 வாலிபர்கள் வந்த னர். அவர்கள் கண்இ மைக்கும் நேரத்தில் ஈஸ்வரி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர். அப்போது ஈஸ்வரி செயினை பிடித்தார். வாலிபர்கள் அவர்கள் கையில் கிடைத்த 3 பவுன் தங்க செயினுடன் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோலம் போட்டு கொண்டு இருந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.
- குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார்
- ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 33). இவர் சோலையாறு அணை மின்வாரியத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வருகி றார். இங்கு ராஜேந்திரன் (50) என்பவர் கிரேன் ஆபரேட்டரக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ராமச்ச ந்திரன் பஜாருக்கு காரில் சென்றார். அப்போது அவர் அங்கு ராஜேந்திரனை பார்த்தார். உடனடியாக காரை நிறுத்தி வேலை நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கி றாய் என கேட்டார். அதற்கு ராஜேந்திரன் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை மருந்து வாங்க வந்ததாக கூறினார். என்னிடம் சொல்லாமல் ஏன் வந்தாய் என ராமச்சந்திரன் கேட்டார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நடுரோட்டில் வைத்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர். தாக்குதலில் காயம் அடைந்த 2 பேரும் வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.
இது குறித்து உதவி என்ஜினீயர் ஷேக்கல்முடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
- பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்
கோவை,
ராமநாதபுரம் மாவட்டம் விம்மநாதபுரம் புது தெருவை சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 25).
இவர் கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மணல் சப்ளை கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று மாரிக்கண்ணன் ஊட்டிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.
பின்னர் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாரிக்கண்ணன் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவர் அங்கு நின்று கொண்டு இருந்த அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் டிரைவரின் இருக்கையில் அமர்ந்து செல்பி எடுத்தார்.
இதனை பார்த்த டிரைவர் அவரை இறக்கி விட்டனர். அப்போது மாரிக்கண்ணன் டிரைவர் மற்றும் பொது மக்களிடம் வாக்குவாதம் செய்தார்.
பின்னர் பொதுமக்கள் அவருக்கு தர்மஅடி கொடுத்து மேட்டுப்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது.
- தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது.
கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டெல்லியில் 5 மாநில தேர்தல் தொடர்பான மத்திய தேர்தல் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், தேசிய தலைமையின் முக்கிய தலைவர்களுடன் அந்த மாநிலங்களில் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து தான் விவாதிக்கப்பட்டது. மொத்தத்தில் எனது டெல்லி பயணம் மிகவும் சிறப்பாக இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதாவில் காங்கிரஸ் இருந்த மனநிலையிலேயே இருக்கிறார். தற்போது நடப்பது பா.ஜ.க ஆட்சி. மகளிர் சட்ட மசோதாவை கொண்டு வந்திருப்பவர் பிரதமர் மோடி.
பா.ஜ.கவும், பிரதமர் மோடியும் எதை சொல்கிறார்களோ அதை செய்து காட்டக்கூடியவர்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதவை தேர்தல் நாடகம் என்று கூறுவது மிகவும் தவறானது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் சட்டவிரோத மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதனை விற்பவர்கள் மீதும் எந்தவித தயவு தாட்சணையும் பார்க்காமல் போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் மக்கள், நம் நாட்டில் மற்றும் உள்ளூர் பகுதிகளில் தயாராகும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அண்மையில் டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நம் நாட்டில் தயாரான பாரம்பரிய பொருட்களை பரிசளித்தார். அதேபோன்று நாம் நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஓ.பி.எஸ்.சை, பா.ஜனதாவில் இணைப்பது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது தனக்கு தெரியாது என்று கூறினார்.
- தூய்மை பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.
- கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.
தூய்மை பாரத விழிப்புணர்வு திட்டத்தின் கீழ், கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஈஷா தன்னார்வலர்கள் இன்று தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். குறிப்பாக, பழங்குடி மக்களின் வீடுகள் மற்றும் கழிப்பறைகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.
நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இத்திட்டம் தொடர்பாக சத்குரு அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (செப்.30) வெளியிட்ட பதிவில் "நம் கோவில்களையும், வீதிகளையும், மிக முக்கியமாக, நம் மனங்களையும் சுத்தமாக வைத்திருக்க உழைப்பது நம் செழிப்பின் உச்சத்தை எட்டுவதற்கு ஒரு முக்கிய படியாகும். பாரதத்திற்கும், அது தொடர்ந்து உயர்வதற்கு அடித்தளமாக விளங்கும் ஆழமிக்க நாகரிகத்திற்கும், நம் அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமையட்டும்" என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும், அந்தப் பதிவுடன் வெளியிட்டுள்ள வீடியோவில் தூய்மை பாரத திட்டத்தின் செயல்பாடுகளை சத்குரு அவர்கள் பாராட்டி பேசி இருந்தார். மேலும், பொது இடங்களில் தூய்மையை பேண வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர் அக்.1-ம் தேதி நடைபெறும் தூய்மை பணியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்து இருந்தார்.
இதை தொடர்ந்து கோவை ஈஷா யோக மையத்தை சுற்றியுள்ள தாணிக்கண்டி, முள்ளாங்காடு, மடக்காடு, பட்டியார் கோவில் பதி, கொளத்தேரி, முட்டத்துவயல், காந்தி காலனி, செம்மேடு, இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொது இடங்கள், சாலைகள் மற்றும் தெருக்களில் ஈஷா தன்னார்வலர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர். மேலும், அங்கு மக்களிடம் பொது இடங்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை தூய்மையாக வைத்து கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய மேம்பாடு குறித்தும் எடுத்துரைத்தனர். இப்பணியில் ஈஷா தன்னார்வலர்களுடன் ஈஷா சம்ஸ்கிரிதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சாரத்தில் இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்களும் கலந்து கொண்டார். ஈஷாவின் சுகாதாரப் பணிகள் குறித்து அவர் கூறும் போது, "ஈஷா இன்று ஒரு நாள் மட்டுமின்றி தினமும் தூய்மை பணியை எங்கள் பஞ்சாயத்துடன் இணைந்து செய்து வருகிறது. ஈஷாவின் தூய்மை பணியாளர்கள் பேட்டரி வாகனங்களில் தினமும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். மேலும், அக்குப்பைகளை முறையாக தரம் பிரித்து, அப்புறப்படுத்தும் பணியையும், மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியையும் அவர்கள் செய்கின்றனர். சத்குரு அவர்களின் அறிவுறுத்தலின்படி, இதை ஈஷா தனது சொந்த செலவில் கிட்டதட்ட 5, 6 வருடங்களாக செய்து வருகிறது. சத்குருவும் ஈஷாவும் எங்கள் பகுதியில் இருப்பது எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்" என கூறினார்.
Striving to keep clean our temples, streets, and most importantly, our minds, is a significant step towards reaching the heights of our prosperity. May this be an expression of our love and commitment to Bharat and the profound civilization upon which it continues to rise. -Sg… pic.twitter.com/HrJ2vTTyhL
— Sadhguru (@SadhguruJV) September 30, 2023
- நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கை எறிந்து வந்தவன்.
- அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது.
கோவை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் பதவிக்காக வந்தவன் அல்ல, மிகப்பெரிய பதவியை தூக்கை எறிந்து வந்தவன்.
யாருக்காகவும் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன்; யாரை பற்றியும் தவறாக சொல்லவில்லை.
என்னுடைய தனி உலகத்தில் இருக்கிறேன். ஒரு நாளைக்கு 9 முதல் 10 மணி நேரம் மக்களுடன் இருக்கிறேன். நான் முழு நேர அரசியல்வாதி கிடையாது. என்றைக்கும் எனது முதல் பணி விவசாயம்.
ஒரே மரத்தை கல் எடுத்து அடிப்பது போல என்னை இரண்டரை வருடங்களாக அடித்து வருகின்றனர்.
கம்யூ. கட்சிகள் திமுகவை புகழ்கின்றன.
அதிமுக தனியாக கூட்டணியை அமைத்தால் எந்தவித பின்னடைவும் கிடையாது. கூட்டணி குறித்து சம்பந்தப்பட்ட நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
கோவை,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவை வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் சார்பில் கடன் திட்ட முகாம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
- பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
- பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை,
கோவை 100 அடி ரோடு, 9-வது வீதியில் உள்ள சுப்ரமணி என்பவர் வீட்டின் தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீள சாரை பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுபற்றி பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து, பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.
இதேபோல், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும், பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார்.
பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பாம்புகளை மீட்டு மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர்.






